டாடாவை கதற விடப்போகும் ஹூண்டாய் கார்! விலை இவ்ளோ கம்மியா! பைக்கை தூக்கி வீசற டைம் வந்தாச்சு!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter). இந்திய சந்தையில் நடப்பு 2023ம் ஆண்டு விற்பனைக்கு வரவுள்ள மிக முக்கியமான கார்களில் ஒன்றாக ஹூண்டாய் எக்ஸ்டர் கருதப்படுகிறது. எனவேதான் வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் ஏகத்துக்கும் எகிறி கிடக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு சூழலில், ஹூண்டாய் எக்ஸ்டர் கார் நாளை (ஜூலை 10) முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஹூண்டாய் எக்ஸ்டர் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் (Bookings), ஏற்கனவே விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் ஹூண்டாய் நிறுவனத்தின் டீலர்ஷிப்கள் மூலமாகவோ அல்லது அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Hyundai Exter

டிசைனை (Design) பொறுத்தவரையில், ஹூண்டாய் எக்ஸ்டர் கார் மிகவும் கவர்ச்சிகரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 'H' வடிவ எல்இடி பகல் நேர விளக்குகள், 'H' வடிவ எல்இடி டெயில்லைட்கள் மற்றும் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் டைமண்ட் கட் அலாய் வீல்கள் ஆகியவை ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் டிசைனில் மிக முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன.

வசதிகளை (Features) பொறுத்தவரையில், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முன் மற்றும் பின் பகுதியில் கேமராக்களுடன் டேஷ்கேம், குரல் மூலம் கட்டுப்படுத்த கூடிய ஸ்மார்ட் எலெக்ட்ரிக் சன்ரூஃப் ஆகியவை ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் மிக முக்கியமான அம்சங்களாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hyundai Exter Electric Sunroof

செயல்திறனை பொறுத்தவரையில், ஹூண்டாய் எக்ஸ்டர் காரில், 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 81 பிஹெச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்மில் 114 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியதாக இருக்கும்.

ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் விலை (Price) எவ்வளவு? என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான், ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் அதிகாரப்பூர்வமான விலை அறிவிக்கப்படும். எனினும் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 6 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 9.50 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம். இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்திய சந்தையில் டாடா பன்ச் (Tata Punch) காருக்கு நேரடி போட்டியாக, ஹூண்டாய் எக்ஸ்டர் களமிறக்கப்படவுள்ளது. இதுதவிர ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) ஆகிய கார்களுடனும், ஹூண்டாய் எக்ஸ்டர் போட்டியிடும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் ஹூண்டாய் கார் என்ற பெருமையை எக்ஸ்டர் பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன. இதன் மூலம் 2வது இடத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தி கொண்டிருக்கும் டாடா நிறுவனத்தின் கடுமையான போட்டியை ஹூண்டாய் நிறுவனத்தால் எளிதாக சமாளிக்க முடியும்.

இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) முதலிடத்தில் உள்ள நிலையில், 2வது இடத்திற்கு ஹூண்டாய் மற்றும் டாடா நிறுவனங்கள் மல்லுக்கட்டி வருகின்றன. முதலில் ஹூண்டாய் நிறுவனம்தான் 2வது இடத்தில் இருந்து வந்தது. ஆனால் பன்ச் காரின் வருகைக்கு பின், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் அந்த இடத்திற்கு கடுமையான போட்டியை வழங்க தொடங்கி விட்டது.

எனவே டாடா பன்ச் காருக்கு நேரடி போட்டியாக எக்ஸ்டர் காரை களமிறக்குவதன் மூலம் இரண்டாவது இடத்தை கெட்டியாக பிடித்து கொள்ள ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் எக்ஸ்டர் காரை, நாங்கள் மேலே கூறியுள்ள விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து விட்டால், அது நிச்சயமாக விற்பனையில் சாதிக்கும்.

More from DriveSpark

Article Published On: Sunday, July 9, 2023, 20:47 [IST]
English summary
Hyundai exter launch tomorrow expected price engine features design
மேலும்... #ஹூண்டாய் #hyundai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+