28 கிமீ மைலேஜ் தரும் ஹூண்டாய் கார் களமிறங்கியது! விலை இவ்ளோதானா! பைக் வியாபாரம் அடியோட சரிய போகுது!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter), இன்று (ஜூலை 10) அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். டாடா பன்ச் (Tata Punch) காருக்கு நேரடி போட்டியாக ஹூண்டாய் எக்ஸ்டர் களமிறக்கப்பட்டுள்ளது.
மிகவும் கவர்ச்சிகரமாக டிசைன் (Design) செய்யப்பட்டுள்ள ஹூண்டாய் எக்ஸ்டர் கார், 6 மோனோடோன் மற்றும் 3 ட்யூயல் டோன் என மொத்தம் 9 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், 'H' வடிவ எல்இடி பகல் நேர விளக்குகள், 'H' வடிவ எல்இடி டெயில்லேம்ப்கள், எல்இடி டர்ன் இன்டிகேட்டார்கள், ரூஃப் ரெயில் மற்றும் ரியர் ஸ்பாய்லர் ஆகியவை இந்த காரின் முக்கியமான டிசைன் அம்சங்களாக உள்ளன.

இதுதவிர சுறா துடுப்பு ஆன்டெனா, முன் மற்றும் பின் பகுதியில் வழங்கப்பட்டுள்ள ஸ்கிட் பிளேட்கள் ஆகியவை நமது கவனத்தை ஈர்க்க கூடிய விஷயங்களாக உள்ளன. அதே நேரத்தில் 3 வருடங்கள்/அன்லிமிடெட் கிலோ மீட்டர்கள் வாரண்டி (Warranty) உடன் ஹூண்டாய் எக்ஸ்டர் கார் களமிறக்கப்பட்டுள்ளது.
செயல்திறனை பொறுத்தவரையில் ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் மொத்தம் 2 இன்ஜின் (Engine) ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் (Petrol) இன்ஜின் ஒன்றாகும். இது E20 எரிபொருளில் இயங்க கூடியது. E20 என்பது 20 சதவீதம் எத்தனால் (Ethanol) மற்றும் 80 சதவீதம் பெட்ரோல் கலந்த கலவையாகும்.

இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஸ்மார்ட் ஆட்டோ ஏஎம்டி கியர் பாக்ஸ் (Gear Box) ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர 1.2 லிட்டர் Bi-fuel கப்பா பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி (CNG) இன்ஜினும் ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இதில், 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் இன்ஜினின் பவர் அவுட்புட் 83 பிஎஸ் மற்றும் 114 என்எம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினின் மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 19.4 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் எனவும், ஏஎம்டி கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 19.2 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபக்கம் 1.2 லிட்டர் Bi-fuel கப்பா பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜினின் பவர் அவுட்புட் 69 பிஎஸ் மற்றும் 96 என்எம் ஆக உள்ளது. பவர் அவுட்புட் சற்று குறைவு என்றாலும், இந்த இன்ஜின் அதிகப்படியான மைலேஜை வாரி வழங்க கூடியது. இந்த இன்ஜின் ஒரு கிலோவிற்கு 27.1 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பை (Safety) பொறுத்தவரையில், ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. ஆரம்ப நிலை முதல் டாப் வரை அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. இதுதவிர எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், வெய்கில் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட் போன்ற பாதுகாப்பு வசதிகளையும் ஹூண்டாய் எக்ஸ்டர் பெற்றுள்ளது.
அத்துடன் ஹில் அஸிஸ்ட் கண்ட்ரோல், இபிடி உடன் ஏபிஎஸ், அனைத்து இருக்கைகளுக்கும் 3 பாயிண்ட் சீட்பெல்ட்கள் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. டிரைவர் அதிவேகத்தில் சென்றால் எச்சரிக்கும் வசதியும் ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் இடம்பெற்றுள்ளது.
இதர வசதிகளை (Features) பொறுத்தவரையில், குரல் கட்டளை மூலம் இயக்க கூடிய ஸ்மார்ட் எலெக்ட்ரிக் சன்ரூஃப் மிக முக்கியமானதாக உள்ளது. இதுதவிர 2 கேமராக்களுடன் டேஷ்கேமும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர வயர்லெஸ் செல்போன் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்கள், புஷ் பட்டன் ஸ்டார்ட் உடன் ஸ்மார்ட் கீ ஆகிய வசதிகளும் ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் பேடில் ஷிஃப்டர்கள், கூல்டு க்ளவ் பாக்ஸ் ஆகிய வசதிகளையும் வாடிக்கையாளர்கள் அனுபவிக்க முடியும். அத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகளுடன் கூடிய 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஹூண்டாய் ப்ளூலிங்க் கனெக்டட் கார் தொழில்நுட்பம் ஆகிய வசதிகளும் ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ஆரம்ப விலை (Price) வெறும் 5,99,900 ரூபாய் மட்டுமே. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் ஏற்கனவே கூறியதை போலவே, சுமார் 6 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் ஹூண்டாய் எக்ஸ்டர் கார் களமிறக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 9.32 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவும் எக்ஸ் ஷோரூம் விலைதான். இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், இவை அறிமுக சலுகை விலையாகும். எனவே வரும் மாதங்களில் விலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பல்வேறு அதிநவீன வசதிகளை கொண்டுள்ள ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் டிசைன் மற்றும் மைலேஜ் என அனைத்து அம்சங்களும் சிறப்பாக உள்ளது. அத்துடன் ஹூண்டாய் நிறுவனம் விலையையும் சரியாக நிர்ணயம் செய்துள்ளதாகவே நாங்கள் கருதுகிறோம். எனவே ஹூண்டாய் எக்ஸ்டர் கார் விற்பனையில் சாதிக்க போவது உறுதி.


Click it and Unblock the Notifications








