டாடா பொழப்புல மண்ணை போட வரும் ஹூண்டாய் கார்! விலை இவ்ளோதானா! ஒரு முடிவோடதான் இருக்காங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter). இது மைக்ரோ எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். டாடா பன்ச் (Tata Punch), சிட்ரோன் சி3 (Citroen C3) ஆகிய கார்களுக்கு போட்டியாக ஹூண்டாய் எக்ஸ்டர் களமிறங்கவுள்ளது.

ஹூண்டாய் எக்ஸ்டர் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. ஆனால் இந்த காரின் அறிமுக தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த சூழலில் இந்த கார் வரும் ஜூலை மாதம் வரை விற்பனைக்கு வராது என தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

Hyundai Exter

வரும் ஜூலை மாத இறுதியில்தான் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் உற்பத்தி பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு, அந்த மாதத்திலேயே முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி பணிகள் தொடங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் விலை எவ்வளவு? என்பதை தெரிந்து கொள்வதற்கு நாம் வரும் ஆகஸ்ட் மாதம் வரை காத்திருக்க வேண்டும். EX, EX(O), S, S(O), SX மற்றும் SX(O) உள்பட ஹூண்டாய் நிறுவனம் எக்ஸ்டர் காரை மொத்தம் 13 வேரியண்ட்களில் விற்பனை செய்யும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Tata Punch

இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் அனைத்து வேரியண்ட்களிலும், அனைத்து இருக்கைகளுக்கும் 3 பாயிண்ட் சீட் பெல்ட்கள் கொடுக்கப்படவுள்ளன. இதை ஹூண்டாய் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்து விட்டது.

செயல்திறனை பொறுத்தவரையில், ஹூண்டாய் எக்ஸ்டர் காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த இன்ஜினுடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படலாம். இந்த காரில் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷனும் இடம்பெறவுள்ளது.

ஆனால் சிஎன்ஜி இன்ஜினுடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டதாக இருந்தாலும், ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ஆரம்ப விலை வெறும் 6 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் ஹூண்டாய் நிறுவனத்தின் கார் என்ற பெருமையை எக்ஸ்டர் பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன. தற்போதைய நிலையில் க்ரெட்டா (Creta) மற்றும் வெனியூ (Venue) ஆகிய கார்கள் ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கையை தூக்கி நிறுத்தி கொண்டுள்ளன. இவைகளும் எஸ்யூவி ரக கார்கள்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் நேரடி போட்டி மாடலான டாடா பன்ச், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்றுள்ளது. எனவே அதற்கு கடுமையான போட்டியை வழங்கும் வகையில், அனைத்து வேரியண்ட்களிலும் ஹூண்டாய் நிறுவனம் 6 ஏர்பேக்குகளை வாரி வழங்கவுள்ளது. எனவே இந்த 2 கார்களுக்கும் விற்பனையில் போட்டி அனல் பறக்க போவது உறுதி.

More from DriveSpark

Article Published On: Saturday, May 20, 2023, 21:22 [IST]
English summary
Hyundai exter micro suv new details out
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+