ஹூண்டாய் எக்ஸ்டர் காரை ஓட்டி பாத்தா உங்க காரை வித்திட்டு இதை வாங்கலாம்னு யோசிப்பீங்க! - வீடியோ ரிவியூ!

ஹூண்டாய் நிறுவனம் மைக்ரோ எஸ்யூவி செக்மெண்டில் புதிதாக எக்ஸ்டர் என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளது. மார்கெட்டில் சிறப்பாக விற்பனையாகி வரும் டாடா பஞ்ச் காருக்கு நேரடி போட்டியாக இந்த கார் களம் இறங்கியுள்ளது. மக்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கிடையில் இந்த கார் களம் இறங்கியுள்ள நிலையில் மக்கள் மத்தியில் இந்த கார் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஹூண்டாய் நிறுவனம் இந்த காரை ஓட்டிப்பார்க்க டிரைவ்ஸ்பார்க் குழுவை புனேவிற்கு அழைத்திருந்தது. எங்கள் குழுவிலிருந்து கிரி குமார் தலைமையிலான குழு புனேவிற்கு சென்று அங்கு இந்த காரை ஓட்டி பார்த்தது. அப்பொழுது இந்த கார் எப்படிச் செயல்பட்டது? இந்த கார் குறித்து எங்கள் குழு கருதுவது என்ன? டாடா பஞ்ச் காரின் விற்பனையை இந்த கார் முறியடித்துவிடுமா? முழுமையான விபரங்களைக் கீழே வீடியோவில் வழங்கியுள்ளோம் காணுங்கள்.

இந்த காரை பொருத்தவரை 1.2 லிட்டர் கப்பா, 4சிலிண்டர் இன்ஜின் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் இயங்கும்படி வழங்கப்பட்டுள்ளது. இது 81.8பிஎச்பி, 113.8என்எம் டார்க் திறனை பெட்ரோல் வெர்ஷனிலும், 67.7பிஎச்பி மற்றும் 95.2என்எம் டார்க் திறனை சிஎன்ஜி வெர்ஷனிலும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வருகிறது. சிஎன்ஜி வெர்ஷன் 5ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் மட்டுமே வருகிறது.

hyundai exter tamil review video

இந்த ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் மைலேஜை பொருத்தவரை பெட்ரோல் மேனுவலில் 19.4 கிலோ மீட்டர் மைலேஜூம், ஏஎம்டியில் 19.2 கிலோ மீட்டர் மைலேஜூம், சிஎன்ஜியில் ஒரு கிலோவிற்கு 27.1 கிலோ மீட்டர் மைலேஜையும் வாரி வழங்குகிறது. இந்த காரின் சிறப்பான டிசைன், குறைவான விலை, அதிக அம்சங்கள் ஆகியன இந்த காருக்கு கிடைத்துள்ள பிளஸ் பாயிண்ட்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, July 17, 2023, 11:23 [IST]
English summary
Hyundai exter micro suv tamil video review
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+