ஹூண்டாய் எக்ஸ்டரை புக் செய்ய போறீங்களா? அவசரப் படாதீங்க... எந்த வேரியண்ட் உங்களுக்கு சரியா இருக்கும்னு பாருங்க

ஹூண்டாய் மோட்டார் (Hyundai Motor) நிறுவனம் தனது புதிய மைக்ரோ-எஸ்யூவி காராக எக்ஸ்டரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இ.எக்ஸ், இ.எக்ஸ் (ஆப்ஷ்னல்), எஸ், எஸ்.எக்ஸ், எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) மற்றும் எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) கனெக்ட் என்ற வேரியண்ட்களில் இந்த புதிய ஹூண்டாய் காரை வாங்கலாம். எக்ஸ்டர் வேரியண்ட்கள் ஒவ்வொன்றிலும் என்னென்ன அம்சங்களை பெறலாம் என்பதை இனி பார்க்கலாம்.

இ.எக்ஸ் (EX): ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட் ஆகும். அதாவது, ரூ.6 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கக்கூடிய எண்ட்ரீ-லெவல் வேரியண்ட் இதுவாகும். இந்த வேரியண்ட்டை பெட்ரோல் என்ஜின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே வாங்க முடியும். விலை குறைவாக இருப்பினும் இந்த வேரியண்ட்டில் முன் & பின்பக்கத்தில் சில்வர் நிறத்தில் ஸ்கிட் தட்டுகள் மற்றும் முன்பக்கத்தில் பவர் ஜன்னல் கண்ணாடிகளை பெறலாம்.

hyundai exter variant-wise specs

அதேபோல், ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யவும் இந்த வேரியண்ட்டில் முடியும். ஆனால் சக்கரங்கள் 14-இன்ச்சில் இரும்பு சக்கரங்களாகவே கிடைக்கும். இந்த வேரியண்ட்டில் வழங்கப்பட்டுள்ள மற்ற முக்கிய அம்சங்கள் என்று பார்த்தால், 6 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார்கள், சீட்-பெல்ட் ரிமைண்டர் சிஸ்டம், ஸ்பீடு அலார்ட் சிஸ்டம் மற்றும் ஃப்ளோர் மேட்கள் உள்ளிட்டவற்றை சொல்லலாம்.

இந்த விலை குறைவான வேரியண்ட் உள்பட எக்ஸ்டரின் அனைத்து வேரியண்ட்களிலும் கதவுகள் கார் இயங்குவதை உணர்ந்து தானாகவே லாக் ஆகிவிடும், அதேநேரம் விபத்து ஏற்படும்போது தானாக அன்லாக் ஆகிவிடும். இந்த வேரியண்ட்டில் பம்பர்கள் காரின் உடல் நிறத்திலேயே கிடைக்கும். உட்பக்க கேபினில், துணியால் மூடப்பட்ட இருக்கைகள் மற்றும் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை கிடைக்கும்.

hyundai exter variant-wise specs

இ.எக்ஸ் (ஆப்ஷ்னல்): ஆரம்ப நிலை இ.எக்ஸ் வேரியண்ட்டின் ஆப்ஷ்னல் வெர்சன் இதுவாகும். அதாவது இந்த வேரியண்ட்டிற்காக கூடுதல் தொகையை செலுத்தினால் இ.எக்ஸ் வேரியண்ட்டில் வழங்கப்படும் அம்சங்களுடன் கூடுதலாக எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில்-அசிஸ்ட் கண்ட்ரோல் மற்றும் வெய்கில் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட அம்சங்கள் கிடைக்கும்.

எஸ்: எக்ஸ்டர் காரை ஏஎம்டி கியர்பாக்ஸ் அல்லது சிஎன்ஜி தேர்வில் வாங்க வேண்டுமெனில் குறைந்தது எஸ் வேரியண்ட்டை நீங்கள் வாங்கியாக வேண்டும். ஏனெனில் மேலே பார்த்த இரு வேரியண்ட்களில் இந்த அம்சங்கள் கிடைக்காது. கூடுதல் தொழிற்நுட்ப அம்சங்களாக டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம், எல்இடி டிஆர்எல்-கள், 8-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை கிடைக்கும்.

hyundai exter variant-wise specs

இந்த வேரியண்ட்டில் 14-இன்ச்சில் இரும்பு சக்கரங்களே கிடைக்கும் என்றாலும், சக்கரங்களுக்கான மூடியை பெறலாம். ORVM-கள் மற்றும் கதவு ஹேண்டில்கள் உள்ளிட்டவை காரின் உடல் நிறத்திலேயே இந்த வேரியண்ட்டில் கிடைக்கும். அதேநேரம் ரேடியட்டர் க்ரில், காரின் C-பில்லர் மற்றும் உட்பக்கத்தில் ஏசி வெண்ட்ஸ் உள்ளிட்டவை கருப்பு நிறத்தில் கிடைக்கும். இந்த வேரியண்ட்டில் பின் ஜன்னல்களிலும் பவர் கண்ணாடிகளை பெறலாம்.

எஸ்.எக்ஸ் (SX): ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ரியர் டீஃபாகர், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், 15-இன்ச்சில் ட்யூயல்-டோனில் ஸ்டைலிஷான இரும்பு சக்கரங்கள், ஃபேப்ரிக் & லெதரேட் கேபின் அலங்கரிப்புகள், எலக்ட்ரிக் சன்ரூஃப், டில்ட்-அட்ஜெஸ்ட்டபிள் ஸ்டேரிங் சக்கரம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், எலக்ட்ரிக் மூலம் மடக்கக்கூடிய ORVM-கள் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் (பெட்ரோல் என்ஜின் தேர்வில் மட்டும்) உள்ளிட்டவற்றை இந்த வேரியண்ட்டில் கூடுதலாக பெறலாம்.

hyundai exter variant-wise specs

எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்): இந்த வேரியண்ட்டை சிஎன்ஜி தேர்வில் வாங்க முடியாது. எஸ்.எக்ஸ் வேரியண்ட்டில் வழங்கப்படுவதாக மேற்கூறப்பட்ட அம்சங்களுடன் ஸ்மார்ட் சாவி, 15-இன்ச் டைமண்ட்-கட் சக்கரங்கள், முன் இருக்கை பயணிகள் கால் வைக்கும் பகுதியில் விளக்குகள், லெதர்-ஆல் மூடப்பட்ட ஸ்டேரிங் சக்கரம் & கியர் க்னாப், என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பொத்தான், வயர் இல்லா சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல், கூல்டு க்ளோவ் பாக்ஸ் மற்றும் பின்பக்க விண்ட்ஷீல்டிற்கும் வைபர் & வாஷர் போன்றவற்றையும் பெறலாம்.

எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) கனெக்ட் (Connect): எக்ஸ்டர் காரின் டாப்-வேரியண்ட்டான இதனையும் சிஎன்ஜி தேர்வில் பெற முடியாது. பெயருக்கு ஏற்றாற்போல் இந்த டாப் வேரியண்ட்டில் ப்ளூலிங்க் கனெக்ட்டிவிட்டி வசதி கிடைக்கும். இதனுடன், இரு கேமராக்கள் உடன் டேஷ்கேம், முன் & பின்பக்க மட்கார்ட்கள், இயற்கையின் சத்தங்களை கேபினுக்குள் வழங்கும் தொழிற்நுட்பம், அலெக்ஸா உடன் H2C மற்றும் ஒடிஏ அப்டேட்கள் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஹூண்டாய் எக்ஸ்டர் டாடா மோட்டார்ஸின் பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி காரின் ஆதிக்கத்தை முறியடிக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால்தான் பஞ்ச் காரை போன்று இந்த காரும் சிஎன்ஜி தேர்வில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், எக்ஸ்டரில் சிஎன்ஜி தேர்வை மத்திய நிலை வேரியண்ட்களான எஸ் மற்றும் எஸ்.எக்ஸ்-இல் மட்டுமே பெற முடியும்.

More from DriveSpark

Article Published On: Monday, July 10, 2023, 18:16 [IST]
English summary
Hyundai exter micro suv variant wise specs
மேலும்... #ஹூண்டாய் #hyundai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X