ஹூண்டாய் காரை கம்மியான விலையில் வாங்கி, இப்படி கூட மாற்றலாமா? என்ன ஒரு ஐடியா!!
ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) கார் ஒன்று இந்தியாவிலேயே முதல்முறையாக ஆஃப்டர் மார்க்கெட் அலாய் சக்கரங்களுடன் மாடிஃபை செய்யப்பட்டு உள்ளது. ஹூண்டாய் நிறுவனம் பொருத்திய சக்கரங்களுக்கு பதிலாக பொருத்தப்பட்டு இருக்கும் இந்த ஆஃப்டர் மார்க்கெட் சக்கரங்கள் எக்ஸ்டருக்கு எவ்வளவு எடுப்பாக உள்ளது என்பதை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் எஸ்யூவி கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக விளங்குகிறது. இருப்பினும், சந்தையில் தனது ஆதிக்கத்தை மேலும் பலப்படுத்தும் விதமாக பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் எக்ஸ்டர் என்ற புத்தம் புதிய மைக்ரோ-எஸ்யூவி காரை சமீபத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

அளவில் சிறிய காராக இருப்பதால், நம் இந்திய மக்களுக்கு மிகவும் ஏற்ற காராக எக்ஸ்டர் விளங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த கணிப்புக்கு ஏற்ப எக்ஸ்டர் கார்கள் நாம் எதிர்பார்த்ததை காட்டிலும் வாடிக்கையாளர்களின் கைக்கு விரைவாக கிடைத்து வருகின்றன. அதாவது, சமீபத்தில்தான் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஹூண்டாய் எஸ்யூவி கார் ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான கஸ்டமர்ஸுக்கு டெலிவிரி செய்யப்பட்டு விட்டது.
அவ்வாறு காரை டெலிவிரி பெற்ற வாடிக்கையாளர் ஒருவர் தனது எக்ஸ்டர் காரை வித்தியாசமான டிசைனிலான ஆஃப்டர் மார்க்கெட் சக்கரங்களுடன் மாடிஃபை செய்துள்ளார். இந்தியாவில் ஹூண்டாய் எக்ஸ்டர் கார் ஒன்று மாடிஃபை செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. இந்த வகையில், ஆஃப்டர் மார்க்கெட் சக்கரங்களை பெற்றிருப்பது எக்ஸ்டர் காரின் எஸ்.எக்ஸ் வேரியண்ட் ஆகும்.

இந்த மாடிஃபை கார் தொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை கீழே காணலாம். எக்ஸ்டர் காரை ஷோரூமில் டெலிவிரி பெற்ற அதன் உரிமையாளர் நேரடியாக ஷோரூமில் இருந்து மெக்கானிக் ஷாப்பிற்கு காரின் சக்கரங்களை மாற்றுவதற்காக கொண்டுவந்ததாக வீடியோவில் தெரிவித்துள்ளனர். ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்.எக்ஸ் வேரியண்ட்டில் கிட்டத்தட்ட அனைத்து அம்சங்களும் வழங்கப்படுகின்றன. ஆனால் அலாய் சக்கரங்கள் மட்டும் கொடுக்கப்படுவதில்லை.
இதனை ஓர் குறையாக பார்த்த காரணத்தினாலேயே காரை வாங்கியவர் நேரடியாக ஷோரூமில் இருந்து காரை வொர்க் ஷாப்பிற்கு கொண்டுவந்துள்ளார். எக்ஸ்டர் எஸ்.எக்ஸ் காரில் 14 இன்ச்சில் இரும்பு சக்கரங்களை ஹூண்டாய் நிறுவனம் வழங்குகிறது. இரும்பு சக்கரங்களுக்கு பதிலாக அலாய் சக்கரங்களை பெற்றிருப்பது மட்டுமின்றி, சக்கரங்களின் அளவையும் 16 இன்ச்களாக அதிகரிக்க காரின் உரிமையாளர் விரும்பியுள்ளார்.

இதற்காக 16 இன்ச்சில் பல்வேறு டிசைன்களிலான சக்கரங்கள் பொருத்தி பார்க்கப்பட்டன. சில 16-இன்ச் சக்கரங்களுடன் காரை டெஸ்ட் டிரைவ் செய்தும் மெக்கானிக்குகள் பார்த்துள்ளனர். ஆனால் 16-இன்ச் சக்கரங்கள் அனைத்திலும், டயர்கள் காரின் அகலத்தை விட்டு வெளியே வந்துள்ளன. இதனால், தனது விருப்பத்தை மாற்றிக் கொண்ட கார் உரிமையாளர் 15-இன்ச் சக்கரங்களுக்கு சென்றுள்ளார்.
"லோ-புரோஃபைல் டயர்கள் உடன் 16 இன்ச் சக்கரங்களை இந்த எக்ஸ்டர் காரில் பொருத்தியிருக்க முடியும். ஆனால், கார் உரிமையாளர் தனது முடிவை 15-இன்ச் சக்கரங்களாக மாற்றிக் கொண்டார். காரின் ஸ்டாக் சக்கரங்கள் மற்றும் டயர்கள் இரண்டும் மாற்றப்பட்டுள்ளன" என மெக்கானிக்குகள் கூறுவதை கீழே பதிவிடப்பட்டுள்ள வீடியோவில் காணலாம். சக்கரங்கள் மாற்றப்பட்டு இருப்பினும், டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம் இந்த மாடிஃபை காரில் தொடர்ந்து வேலை செய்கிறது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்தியாவில் கார் மாடிஃபிகேஷன்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கஸ்டமைஸ் நிறுவனத்தில் மட்டுமே காரை மாடிஃபை செய்ய வேண்டும். மேற்கூறப்பட்ட எக்ஸ்டர் கார் அத்தகைய நிறுவனத்தில் தான் மாடிஃபை செய்யப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. 15-இன்ச் சக்கரங்களுடன் ஹூண்டாய் எக்ஸ்டர் கார் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், இத்தகைய மாடிஃபிகேஷன்கள் இன்ஸ்சூரன்ஸை பாதிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.


Click it and Unblock the Notifications









