தரமட்டத்துக்கு இறங்கிய ஹூண்டாய்! புது காரின் விலை இவ்ளோதானா! ஆள் ஆளுக்கு ஒன்னு வாங்கி வீட்ல நிறுத்த போறாங்க!

இந்தியாவில் டாடா பன்ச் (Tata Punch) போன்ற மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரக கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் இந்த செக்மெண்ட்டில் புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு தயாராகி வருகின்றன. இதில், ஹூண்டாய் (Hyundai) நிறுவனமும் ஒன்று.

ஹூண்டாய் நிறுவனம் எக்ஸ்டர் (Hyundai Exter) என்ற பெயரில் புத்தம் புதிய மைக்ரோ எஸ்யூவி ரக காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. ஹூண்டாய் எக்ஸ்டர் மைக்ரோ எஸ்யூவி கார் இன்னும் ஒரு சில வாரங்களில் உலகளாவிய அளவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து வரும் ஆகஸ்ட் மாதம் இந்த கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

Hyundai Exter Official Design Sketch

இந்திய சந்தையில் ஏற்கனவே விற்பனையில் உள்ள ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios) காரின் பிளாட்பார்ம் அடிப்படையில்தான், ஹூண்டாய் எக்ஸ்டர் காரும் உருவாக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சர்வதேச சந்தைகளில் ஏற்கனவே விற்பனையில் உள்ள ஹூண்டாய் காஸ்பர் (Hyundai Casper) காரின் பல்வேறு டிசைன் (Design) அம்சங்களை, ஹூண்டாய் எக்ஸ்டர் காரிலும் நாம் எதிர்பார்க்கலாம்.

ஹூண்டாய் காஸ்பர் கார் தற்போது இந்தியாவில் விற்பனையில் இல்லை. சர்வதேச சந்தைகளில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே ஹூண்டாய் எக்ஸ்டர் காரில், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் வசதியுடன் கூடிய பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hyundai Casper

இதுதவிர செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், டாப் வேரியண்ட்களில் 6 ஏர்பேக்குகள் போன்ற வசதிகளும் (Features) வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. செயல்திறனை பொறுத்தவரையில், ஹூண்டாய் எக்ஸ்டர் காரில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் (Petrol) இன்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 84 பிஎஸ் பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம். இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் (Gear Box) ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் கொடுக்கப்படலாம்.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 120 பிஎஸ் பவர் மற்றும் 172 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஹூண்டாய் எக்ஸ்டர் காரில், டீசல் (Diesel) இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில், ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் புதிய டீசர் ஸ்கெட்ச் (Teaser Sketch) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த காரின் முன்பகுதி எப்படி இருக்கும்? என்பது நமக்கு தெரியவந்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ்டர் காரின் டீசரில், ஸ்பிளிட் எல்இடி ஹெட்லேம்ப் க்ளஸ்ட்டர், 'H' வடிவ எல்இடி பகல் நேர விளக்குகள் ஆகியவற்றை நம்மால் காண முடிகிறது.

அதேபோல் பக்கவாட்டு பகுதியில் இருந்து பார்க்கும்போது, வீல் ஆர்ச்சுகளையும் நாம் காணலாம். மேலும் இந்த டிஜிட்டல் ஸ்கெட்ச்சில், ரூஃப் ரெயில்களையும் நம்மால் பார்க்க முடிகிறது. இந்த காரின் பக்கவாட்டு பகுதிகளில், கருப்பு நிற பிளாஸ்டிக் க்ளாடிங் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எஸ்யூவி கார்களுக்கே உரித்தான முரட்டுதனமான தோற்றத்தை ஹூண்டாய் எக்ஸ்டர் காருக்கு வழங்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ஆரம்ப விலை (Price) வெறும் 5.50 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நேரடி போட்டி மாடலான டாடா பன்ச் காருக்கு, ஹூண்டாய் எக்ஸ்டர் வடிவில் பெரும் ஆபத்து நெருங்கி கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 25, 2023, 16:39 [IST]
English summary
Hyundai exter official design sketch tata punch rival expected price features engine
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+