ஹூண்டாயின் குட்டி கார் எக்ஸ்டர் எப்படி இருக்கும்? நினைச்சத விட ரொம்ப அழகா இருக்கு! முதல் முறையாக முழு தரிசனம்!

ஹூண்டாய் நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையில் எக்ஸ்டர் எனும் குட்டி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் வருகையை ஹூண்டாயும் உறுதிப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்னர் அந்த கார் முழுமையாக காட்சி தந்திருக்கின்றது.

எக்ஸ்டர் காரின் உலக வெளியீட்டிற்கு இன்னும் சில தினங்களே உள்ளநிலையில், அதன் தரிசனம் அரங்கேறி இருக்கின்றது. ஹூண்டாயின் தாயகமான தெற்கு கொரியாவில் வைத்தே எக்ஸ்டர் ஸ்பை செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த காரின் படம் இவ்வளவு தெளிவாக வெளியாகுவது இதுவே முதல் முறையாகும். seoul_car_spotting இன்ஸ்டா அக்கவுண்ட் வாயிலாகவே காரின் படங்கள் கசிந்துள்ளது.

Hyundai exter spied

கியா கேரன்ஸ் மற்றும் ஹூண்டாய் வெர்னா ஆகிய கார்களின் ஸ்டைலை லேசாக இந்த கார் கொண்டிருப்பதை நம்மால் உணர முடிகின்றது. காரின் முகப்பு பகுதியில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் மெல்லிய இழை போன்ற லைட் செட்-அப்பை புதிய வெர்னாவில் நம்மால் காண முடியும்.

இதுதவிர தனித்துவமான தோற்றம் கொண்ட எல்இடி டிஆர்எல் மற்றும் டர்ன் இன்டிகேட்டர்கள் உள்ளிட்டவை எக்ஸ்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆகையால், சாலையில் செல்லும்போது இது ஓர் புதுமுக காராகவே பிரதிபலிக்கும். மெல்லிய இழை போன்ற லைட்டிற்கு கீழ் பகுதியிலேயே ஹெட்லேம்ப் மற்றும் க்ரில் ஆகியவை இடம் பெற்றிருக்கின்றன.

Hyundai exter back view

இந்த காரின் கவர்ச்சியான தோற்றத்திற்காக ஏ மற்றும் பி பிள்ளர்களுக்கு கருப்பு நிறம் வழங்கப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், சி பிள்ளருக்கு காரின் உடல் நிறத்தை அது வழங்கி இருக்கின்றது. நாம் பார்த்துக் கொண்டிருக்கும் எக்ஸ்டர் வெள்ளை நிறம் என்பதால் அதன் சி பிள்ளர் வெள்ளை நிறம் கொண்டதாகவே காட்சியளிக்கின்றது.

இதுதவிர ரூஃப் ரெயில்களும் இந்த காரின் மேற்கூரையில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதனை பயன்படுத்திக் கொள்ள முடியுமா?, வெறும் ஷோவிற்காக வழங்கப்பட்டிருக்கின்றதா?, என்பது துள்ளியமாக தெரியவில்லை. அறிமுகத்தின்போது அதுகுறித்த தகவல் தெரிய வரும். இந்தியாவில் இந்த காரின் வருகை டாடாவின் மலிவு விலை கார் மாடலான பஞ்ச்-க்கு போட்டியாக அமைய இருக்கின்றது.

தற்போது நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் காராக பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி காட்சியளிக்கின்றது. இதற்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை தட்டிப் பறிக்கும் நோக்கிலேயே ஹூண்டாயை எக்ஸ்டரை தயார் செய்துக் கொண்டிருக்கின்றது. இன்னும் ஒரு சில தினங்களில் இந்த கார் இந்தியாவில் வெளியீட்டைப் பெற இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

எக்ஸ்டர் ஓர் குட்டி காராக இருந்தாலும், அதில் ஐந்து பேர் வரை தாராளமாக அமர்ந்து பயணிக்க முடியும். டிரைவருடன் சேர்ந்து ஐந்து பேர் அமர்ந்து பயணிக்கும் வகையிலேயே இந்த காரை ஹூண்டாய் வடிவமைத்திருக்கின்றது. அட்வான்ஸ்டு டெரெயின் சிஸ்டம், டிராக்சன் அடிப்படையிலான சிறப்பம்சங்களும் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்திய ஓர் பன்முக சாலை அமைப்பைக் கொண்ட நாடு என்பதால் இந்த அம்சம் அதில் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர கிராண்ட் ஐ10 நியாஸ் மற்றும் அவுரா ஆகிய கார்களில் இடம் பெற்றிருக்கும் அம்சங்களும் எக்ஸ்டரில் எதிர்பார்க்கப்படுகின்றன. இதுதவிர, புதிய வெர்னா காரில் இடம் பெற்றிருக்கும் நவீன கால அம்சங்களும் எக்ஸ்டரில் இடம் பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த காரில் என்ன மாதிரியான திறன் கொண்ட எஞ்ஜின் பயன்படுத்தப்பட இருக்கின்றது என்பது பற்றிய விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேவேளையில் இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள் புதிய எக்ஸ்டரில் 1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மோட்டாரே இடம் பெற இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இதுதவிர, 1.0 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோலும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இந்த தகவலை ஹூண்டாய் இதுவரை உறுதி செய்யவில்லை. விரைவில் அறிமுகத்தை முன்னிட்டு தற்போது காரின் படங்கள் கசிந்து இருப்பதை போல பிற முக்கிய விபரங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் வருகை டாடா பஞ்ச் காருக்கு மட்டுமின்றி நிஸான் கைகர், ரெனால்ட் மேக்னைட் உள்ளிட்டவற்றிற்கும் போட்டியாக அமைய இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு தனித்துவமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை குட்டி கார் வாயிலக இரட்டிப்பாக்க நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. இப்போது சந்தையில் நிலவிக் கொண்டிருக்கும் இந்த காரின் மீதான எதிர்பார்ப்பு, அதற்கு நல்ல டிமாண்டை ஏற்படுத்திக் கொடுக்கும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

Article Published On: Thursday, May 4, 2023, 20:28 [IST]
English summary
Hyundai exter pictures revealed before official launch
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+