இப்படி ஒரு காரை எப்படி இவ்ளோ கம்மி விலைக்கு விக்க முடியும்! போட்டி நிறுவனங்களுக்கு பாடம் நடத்த போகும் ஹூண்டாய்

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter). இது மைக்ரோ எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். வரும் ஜூலை 10ம் தேதி ஹூண்டாய் எக்ஸ்டர் கார், இந்தியாவில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அதற்கு முன்னதாக இந்த காரின் டீசர்களை ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இந்த வரிசையில் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் பின் பக்க டிசைன் எப்படி இருக்கும்? என்பதை நமக்கு எடுத்துக்காட்டும் வகையிலான டீசர் ஒன்றை ஹூண்டாய் நிறுவனம் தற்போது வெளியிட்டு, எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது.

Hyundai Exter Rear Design

இதன்படி ஹூண்டாய் எக்ஸ்டர் மைக்ரோ எஸ்யூவி காரில், 'H' வடிவத்தில் எல்இடி டெயில்லேம்ப்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஸ்கிட் பிளேட்டும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுறா துடுப்பு ஆன்டெனா மற்றும் ரியர் வைப்பர் ஆகிய அம்சங்களையும் இந்த டீசரில் நம்மால் மிகவும் தெளிவாக காண முடிகிறது.

ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் சன்ரூஃப் மற்றும் ஹூண்டாய் நிறுவனத்தின் ப்ளூலிங்க் கனெக்ட்டிவிட்டி ஆகிய வசதிகள் (Features) வழங்கப்பட்டுள்ளன. மேலும் 2 கேமராக்களுடன் டேஷ்கேம் வசதியும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது. EX, S, SX, SX(O) மற்றும் SX(O) Connect என மொத்தம் 5 வேரியண்ட்களில் (Variants) இந்த கார் கிடைக்கும்.

Hyundai Exter

செயல்திறனை பொறுத்தவரையில், 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல்/சிஎன்ஜி என மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்களை ஹூண்டாய் எக்ஸ்டர் கார் பெற்றுள்ளது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பை பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், வெய்கில் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட், அனைத்து இருக்கைகளுக்கும் 3 பாயிண்ட் சீட் பெல்ட் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர், இபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பியதாக இருந்தாலும் கூட, ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ஆரம்ப விலை (Price) வெறும் 5.50 லட்ச ரூபாய் அல்லது 6 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு டாடா பன்ச் காருக்கு, ஹூண்டாய் எக்ஸ்டர் (Tata Punch) நேரடி போட்டியாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிகமாக விற்பனையாக கூடிய ஹூண்டாய் கார் என்ற பெருமையை எக்ஸ்டர் பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன. இந்த காரை பற்றி அடுத்தடுத்து வெளியாகி வரும் தகவல்கள், அதை உறுதிபடுத்துவது போல் உள்ளன. நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள விலையில் ஹூண்டாய் எக்ஸ்டர் வந்து விட்டால், இது நிச்சயமாக நடக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 30, 2023, 23:41 [IST]
English summary
Hyundai exter rear design revealed expected price variants features
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+