இத்தன பாராட்டுக்களையும், விருதையும் இந்த மலிவு விலைக்கு காருக்கு கொடுத்திருக்காங்களா!! வாயடைக்க வச்சுட்டாங்க!
இந்தியாவின் மலிவு விலை கார் மாடல்களில் ஒன்றாக ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்பு எக்ஸ்டர் எஸ்யூவி ரக கார் இருக்கின்றது. இந்த காருக்கே பல்வேறு விருதுகள் கிடைத்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அது என்ன விருது என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக ஹூண்டாய் எக்ஸ்டர் இருக்கின்றது. இது ஓர் குட்டியான உருவ அமைப்பைக் கொண்ட எஸ்யூவி ரக காராகும். டாடா பஞ்ச் கார் மாடலுக்கு போட்டியாக நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்ட ஓர் வாகனமே இந்த எக்ஸ்டர் ஆகும்.

இது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மலிவு விலை எஸ்யூவி ரக காராகவும் காட்சியளிக்கின்றது. இத்தகைய கார் மாடலுக்கு இந்தியாவின் உயரிய விருதுகள் சில வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை ஹூண்டாய் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையின் வாயிலாக உறுதிச் செய்திருக்கின்றது.
அது வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ஆரம்ப நிலை ஸ்போர்டி எஸ்யூவி ரக காரான எக்ஸ்டர், இந்தியாவின் பெஸ்ட் டிசைன் விருதுகள் 2023 இல் பல்வேறு பாராட்டுக்களை பெற்றிருப்பதாக தெரிவித்து உள்ளது. குறிப்பாக, காரின் டைனமிக் மற்றும் இன்னோவேட்டிவ் டிசைனுக்காகவே இந்த பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது.
பாராட்டுக்களைத் தொடர்ந்து, அந்த காருக்கு இந்தியாவின் மிக சிறந்த டிசைன் புராஜக்டுக்கான விருதும் வழங்கப்பட்டது. இந்த மதிப்புமிக்க விருதைத் தொடர்ந்து, ஹூண்டாயின் அட்வான்ஸ்டு டிசைன் இந்தியா குழுவிற்கு 'இந்தியாவின் பெஸ்ட் இன்-ஹவுஸ் ஸ்டுடியோ' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஹூண்டாய் எக்ஸ்டர் கார் வாயிலாக ஒட்டுமொத்த நிறுவனம் தற்போது பெருமிதம் கொண்டிருக்கின்றது.
இந்த கார் விற்பனையிலும் சிறப்பாக இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. விருது குறித்து கருத்து தெரிவித்து இருக்கும் ஹூண்டாய் நிறுவனம், "இந்தியர்களுக்கு அதிநவீன தயாரிப்புகளை வழங்க வேண்டும் என உறுதி பூண்டுள்ளோம். இதற்கு கிடைத்த அங்கீகாரமே இது" என தெரிவித்து இருக்கின்றது.
இந்தியாவில் ஹூண்டாய் எக்ஸ்டர் கார் ரூ. 6 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. சமீபத்திலேயே இந்த காரின் விலையில் சிறிய மாற்றங்களை நிறுவனம் செய்தது. அதேவேளையில், ஆரம்ப நிலை தேர்வின் விலையில் ஹூண்டாய் கை வைக்காத காரணத்தினாலேயே அது இப்போதும் அதே பழைய விலையான ரூ. 5.99 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலைக்கு விற்பனைக்குக் கிடைக்கின்றது.
ஆமாங்க, நிறுவனம் குறிப்பிட்ட சில தேர்வுகளின் விலையை மட்டுமே உயர்த்தி இருக்கின்றது. ரூ. 16 ஆயிரம் வரை விலை உயர்வு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆரம்ப நிலை வேரியண்டான இஎக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ் (ஓ) ஏஎம்டி கன்னெக்ட் ஆகிய தேர்வுகளை தவிர மற்ற அனைத்து வேரியண்டுகளின் விலையிலும் ஹூண்டாய் மாற்றம் செய்திருக்கின்றது.
குறைந்தபட்ச உயர்வாக ரூ. 5 ஆயிரமும், அதிகபட்ச உயர்வாக ரூ. 16 ஆயிரமும் விலை உயர்வு செய்யப்பட்டு இருக்கின்றது. ஹூண்டாயின் இந்த அதிரடி நடவடிக்கை ஹூண்டாய் கார் பிரியர்களைப் பெருத்த கலக்கத்தில் ஆழ்த்தும் வகையில் அமைந்தது என்றே கூறலாம். ஹூண்டாய் எக்ஸ்டர் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரு விதமான ஆப்ஷன்களிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இதன் பெட்ரோல் வெர்ஷன் 19.2 கிமீ முதல் 19.4 கிமீ வரையில் மைலேஜ் தரும். அதேவேளையில், எக்ஸ்டரின் சிஎன்ஜி வெர்ஷன் அதிகபட்சமாக ஒரு கிலோவிற்கே 27.1 கிமீ வரையில் மைலேஜ் தரும். இத்தகைய அதிக மைலேஜை வழங்கும் கார் மாடலின் விலையையே ஹூண்டாய் உயர்த்தி இருக்கின்றது. இந்த நிலையிலேயே இதற்கு விருது நாட்டில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்டருக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் எக்ஸ்டர் குட்டியான எஸ்யூவி ரக காராகும். இந்த காரை கையாளுவதும் சுலபம், இதை நிறுத்தி வைக்கவும் பெரிய அளவில் இட வசதி தேவைப்படாது. இதுபோன்ற பல்வேறு காரணங்களுக்காகவே இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக மலிவு விலையில் அதிகம் சிறப்பம்சங்களைத் தாங்கியதாக இந்த கார் இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








