28 கிமீ மைலேஜ் தரும்! நம்ப முடியாத குறைவான விலையில் களமிறங்கிய ஹூண்டாய் கார்! அதுக்குள்ள இவ்ளோ புக்கிங்கா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது மிகவும் வேகமாக பிரபலமடைந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter). மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரகத்தை சேர்ந்த ஹூண்டாய் எக்ஸ்டர் கார், கடந்த ஜூலை மாதம்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் அதிநவீன வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சமில்லை. இதில் சன்ரூஃப், ட்யூயல் கேமராக்களுடன் டேஷ்கேம், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜிங் போன்ற வசதிகள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

Hyundai Exter

இதுதவிர கனெக்டட் கார் தொழில்நுட்பம், 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் அஸிஸ்ட் கண்ட்ரோல், இபிடி உடன் ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா ஆகிய வசதிகளும் கூட ஹூண்டாய் எக்ஸ்டர் மைக்ரோ எஸ்யூவி காரில் வாரி வழங்கப்பட்டுள்ளன.

செயல்திறனை பொறுத்தவரையில், ஹூண்டாய் எக்ஸ்டர் காரில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் நான்கு சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 83 ஹெச்பி பவர் மற்றும் 114 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

Hyundai Exter Side Design

இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் சிஎன்ஜி இன்ஜின் (CNG Engine) ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் வேரியண்ட்களில் பொருத்தப்பட்டுள்ள அதே இன்ஜின்தான் சிஎன்ஜி வேரியண்ட்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் சிஎன்ஜி மூலம் இயங்கும்போது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 69 ஹெச்பி பவர் மற்றும் 95.2 என்எம் டார்க் திறனை மட்டுமே உருவாக்கும். அத்துடன் சிஎன்ஜி வேரியண்ட்களில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சிஎன்ஜி இன்ஜின் சிறப்பான மைலேஜ் (Mileage) வழங்கும்.

Hyundai Exter AC

ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் பெட்ரோல்/மேனுவல் மாடல் ஒரு லிட்டருக்கு 19.4 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், பெட்ரோல்/ஏஎம்டி மாடல் ஒரு லிட்டருக்கு 19.2 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. மறுபக்கம் சிஎன்ஜி/மேனுவல் மாடல் ஒரு கிலோவிற்கு 27.10 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என ஹூண்டாய் கூறியுள்ளது.

அதிநவீன வசதிகள், மைலேஜை வாரி வழங்க கூடிய இன்ஜின் ஆப்ஷன்கள் ஆகியவற்றுடன் ஹூண்டாய் எக்ஸ்டர் கார் கவர்ச்சிகரமாக டிசைனும் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இந்த காரின் விலையும் (Price) மிகவும் குறைவுதான். ஹூண்டாய் எக்ஸ்டர் கார் வெறும் 5.99 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் மட்டுமே விற்பனைக்கு களமிறக்கப்பட்டது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை வெறும் 10 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இவை எக்ஸ் ஷோரூம் விலை என்பதுடன், அறிமுக சலுகை விலை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் விலை தற்போது சற்றே உயர்த்தப்பட்டுள்ளது (Hyundai Exter Price Hike) என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் விலை 16 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் வேரியண்ட்களை (Variants) பொறுத்து, இந்த விலை உயர்வு மாறுபடும் என்பதும் இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும். விலையில் சிறிய மாற்றம் இருந்தாலும் கூட, ஹூண்டாய் எக்ஸ்டர் இன்னமும் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாகவே உள்ளது.

எனவே வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஹூண்டாய் எக்ஸ்டர் காருக்கு அமோக வரவேற்பை வாரி வழங்கி கொண்டுள்ளனர். ஹூண்டாய் எக்ஸ்டர் காருக்கு தற்போதைய நிலையிலேயே 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் (Bookings) குவிந்து விட்டன. புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் காரை இவ்வளவு அதிகம் பேர் முன்பதிவு செய்திருப்பது, உண்மையிலேயே வியப்பை ஏற்படுத்துகிறது.

நிறைய பேர் முன்பதிவு செய்துள்ளதால், ஹூண்டாய் எக்ஸ்டர் காருக்கான காத்திருப்பு காலம் மிகவும் அதிகமாக உள்ளது. தற்போதைய நிலையில் ஹூண்டாய் எக்ஸ்டர் காருக்கான காத்திருப்பு காலம் (Waiting Period) 9 மாதங்கள் வரை உள்ளது. அதாவது நீங்கள் இன்று முன்பதிவு செய்தால், 9 மாதங்களுக்கு பிறகுதான் டெலிவரி (Delivery) கிடைக்கும்.

இந்த காத்திருப்பு காலம், வேரியண்ட்களை பொறுத்து மாறுபடும் என்றாலும் கூட, வாடிக்கையாளர்களை அதிக காலம் காத்திருக்க வைக்க ஹூண்டாய் நிறுவனம் விரும்பவில்லை. எனவே எக்ஸ்டர் காரின் உற்பத்தியை (Production) அதிகரிப்பதற்கு ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆரம்பத்தில் ஒரு மாதத்திற்கு 6 ஆயிரம் ஹூண்டாய் எக்ஸ்டர் கார்களை உற்பத்தி செய்யப்பட்டு வந்தன.

இந்த எண்ணிக்கை பின்னர் ஒரு மாதத்திற்கு 8 ஆயிரம் என உயர்த்தப்பட்டது. இதை மேலும் அதிகரிப்பதற்கு ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனவே ஹூண்டாய் நிறுவனம் எக்ஸ்டர் காரின் உற்பத்தியை அதிகரித்த பின்னர், அதன் காத்திருப்பு காலம் குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. முன்பதிவு செய்து விட்டு ஹூண்டாய் எக்ஸ்டர் காருக்காக காத்து கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நிறைய பேர் முன்பதிவு செய்துள்ளதால், வரும் மாதங்களில் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் விற்பனை எண்ணிக்கை மிகவும் சிறப்பாக இருக்கும். இது ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் நேரடி போட்டி மாடலான டாடா பன்ச் (Tata Punch) காருக்கு, மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

எக்ஸ்டர் காரின் வருகைக்கு பின்னர், ஹூண்டாய் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து வருகிறது. இதை மேலும் அதிகரித்து கொள்ளும் வகையில், ஹூண்டாய் நிறுவனம் கூடிய விரைவில், எக்ஸ்டர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை (Hyundai Exter EV) இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, October 8, 2023, 19:43 [IST]
English summary
Hyundai exter receives over 75000 bookings production increased to reduce waiting period
மேலும்... #ஹூண்டாய் #hyundai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X