டாடா பஞ்சுக்கு சீக்கிரமே சங்கு ஊதிடும் போலிருக்கே! ஹூண்டாய் எக்ஸ்டர் கார இவ்ளோ பேரு புக் பண்ணீட்டாங்களா!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-இன் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக பஞ்ச் (Punch) மாறி இருக்கின்றது. மாதம் ஒன்றிற்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் இந்த கார் விற்பனையாகிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஓர் மைக்ரோ எஸ்யூவி ரக காராகும்.
பாதுகாப்பு விஷயத்திலும் இந்த கார் டாப் ரேட்டிங்கைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது. ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களை அது பெற்றிருக்கின்றது. இத்தகைய தரமான காருக்கு போட்டி அளிக்கும் விதமாக இந்திய சந்தையில் ஹூண்டாய் (Hyundai) விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கும் மைக்ரோ எஸ்யூவி ரக கார் மாடலே எக்ஸ்டர் (Exter) ஆகும்.

இந்த காருக்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏதோ, சாதாரணமான வரவேற்பு என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். மிக மிக அமோகமான வரவேற்பே இந்த காருக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்திருக்கின்றது.
அது வெளியிட்டிருக்கும் தகவலின்படி ஹூண்டாய் எக்ஸ்டர் காருக்கு சுமார் 50 ஆயிரம் யூனிட்டுகளுக்கான புக்கிங் இப்போதே கிடைத்துவிட்டது தெரிய வந்திருக்கின்றது. இவை அனைத்தும் 30க்கும் குறைவான நாட்களுக்குள் எக்ஸ்டர்-க்கு கிடைத்தவை ஆகும். இதில், 10 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங் அதிகாரப்பூர்வ வருகைக்கு முன்னரே கிடைத்தவை என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த அளவிற்கே எக்ஸ்டர் காருக்கு மிக மிக சூப்பரான வரவேற்பே இந்தியர்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த ஒட்டுமொத்த புக்கிங்கில் 75 சதவீதம் புக்கிங் சன்ரூஃப் கொண்ட வேரியண்டுகளுக்குக் கிடைத்தவை ஆகும். இதை வைத்து பார்க்கையில் இந்தியர்கள் மத்தியில் சன்ரூஃப் வசதிக் கொண்ட தேர்வுகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது.
இதனால்தான் வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் மலிவு விலை கார் மாடல்களில்கூட சன்ரூஃப் வசதியை அறிமுகம் செய்து வருகின்றனர். அந்தவகையிலேயே ஹூண்டாயும் அதன் மலிவு விலை கார் மாடலான இந்த எக்ஸ்டர் மைக்ரோ எஸ்யூவியின் குறிப்பிட்ட வேரியண்டுகளில் சன்ரூஃபை வசதியை வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இதுதவிர எக்ஸ்டரின் ஆட்டோமேட்டிக் வேரியண்டிற்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றது. ஹூண்டாய் நிறுவனம் பேடில் ஷிஃப்டர் உடன் ஏஎம்டி வசதியை இந்த காரில் வழங்கிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், 6 ஏர்பேக்குகளையும் ஸ்டாண்டர்டு வசதியாக எக்ஸ்டரின் அனைத்து தேர்வுகளிலும் ஹூண்டாய் வழங்கிக் கொண்டிருக்கின்றது.
அதுதவிர எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களையும் அது எக்ஸ்டரில் வழங்கி இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பலதரப்பட்ட அம்சங்களைக் கொண்டிருந்தும் இதனை குறைவான விலையில் ஹூண்டாய் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 5.99 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
கடந்த ஜூலை மாதம் 10ஆம் தேதி அன்றே இந்த கார் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இஎக்ஸ், எஸ், எஸ்எக்ஸ், எஸ்எக்ஸ் (ஓ) மற்றும் எஸ்எக்ஸ் (ஓ) கன்னெக்ட் என ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான தேர்வுகளில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
அதுதவிர, பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய இரு தேர்வுகளிலும் எக்ஸ்டரில் வழங்கப்படுகின்றது. ஆனால், சிஎன்ஜி மோட்டாரில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகின்றது. அதுவே, பெட்ரோலில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய டிரான்ஸ்மிஷன்களும் வழங்கப்படுகின்றன. ஹூண்டாய் நிறுவனம் எக்ஸ்டர் காரில் பாதுகாப்பு அம்சங்ள் மற்றும் சொகுசு அம்சங்களை மிக மிக தாராளமாக வழங்கி இருக்கின்றது.
ஹூண்டாய் நிறுவனம் இந்த காரின் இந்தியர்களைக் கவர வேண்டும் என்பதற்காக 3 ஆண்டுகள் வாரண்டியையும், அத்துடன், 7 ஆண்டுகள் வரை எக்ஸ்டன்ட் வாரண்டி திட்டத்தையும் வழங்குகின்றது. இத்துடன் 6 சிங்கிள் டோன் மற்றும் 3 டூயல் டோன் நிற தேர்வுகளையும் எக்ஸ்டரில் ஹூண்டாய் வழங்குகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மிக அமோகமான வரவேற்பை டாடா பஞ்ச் பெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் அதற்கு போட்டி அளிக்கும் விதமாக எக்ஸ்டர் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. இதனைக் கொண்டு வந்ததற்கான பலனை ஹூண்டாய் தற்போது பெற்றுக் கொண்டிருக்கின்றது. விரைவில் விற்பனையில் பஞ்ச் காரை எக்ஸ்டர் ஓவர்டேக் செய்துவிடும் என கூறும் அளவிற்கு அதற்கு வரவேற்பு இப்போதே பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.


Click it and Unblock the Notifications