அண்ணாச்சி கடைல பிஸ்கட் வாங்கற மாதிரி ஹூண்டாயின் புதிய கார வாங்க தொடங்கீட்டாங்க! எவ்ளோ நாள் காத்திருப்பு தெரிமா

இந்தியாவிற்கான மலிவு விலை கார் மாடலாக ஹூண்டாய் எக்ஸ்டர் பி-எஸ்யூவி கார் பிரிவில் நேற்றைய (ஜூலை 10) தினம் நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டது. இந்த காருக்கு தற்போது இந்தியர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்திருப்பதாகவும், இதனால் காத்திருப்பு காலம் பலமடங்கு கூடி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய், அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எக்ஸ்டர் காரை நேற்று (ஜூலை 10) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது ஓர் 'பி எஸ்யூவி' ரக காராகும். இந்த காருக்கு மிக மிக குறைவான விலையையே நிறுவனம் நிர்ணயம் செய்திருக்கின்றது.

Hyundai exter waiting period

அறிமுகமாக ரூ. 5.99 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை ரூ. 6 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும். இவ்வளவு குறைவான விலையில் புதிய எக்ஸ்டர் விற்பனைக்கு வந்திருக்கின்ற காரணத்தினால் தற்போது அக்காருக்கு இந்தியர்கள் மத்தியில் அமோக வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது.

இந்த காருக்கு சுமார் 11 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்குகள் கிடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தமாதிரியான சூழலிலேயே மற்றுமொரு ஆச்சரியமளிக்கும் தகவல் இந்த கார் குறித்து தற்போது வெளியாகி இருக்கின்றது. எக்ஸ்டர் காருக்கான காத்திருப்பு காலம் பற்றிய காலம் பற்றிய தகவலே அது ஆகும்.

Hyundai exter side design

இந்த காருக்கு காத்திருப்பு காலம் பலமடங்கு அதிகரித்து இருப்பதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்போதே எக்ஸ்டரின் எந்த வேரியண்டை புக் செய்தாலும் அதை கைகளில் பெற சுமார் ஆறு வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்றே தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவிலேயே இந்த நிலை தென்படுவது குறிப்பிடத்தகுந்தது. அங்கு மட்டுமல்ல ஹூண்டாயின் உற்பத்தி ஆலை அமைந்திருக்கும் நம்முடைய தமிழகத்திலும் இதுபோலவே கணிசமான வாரங்கள் காத்திருப்பு காலம் நிலவுவதாகக் கூறப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த துள்ளியமான விபரம் இதுவரை வெளியாகவில்லை. இத்தகைய அமோக வரவேற்பிற்கு எக்ஸ்டரின் குறைவான விலை மட்டுமே காரணம் என கூறிவிட முடியாது.

அதன் அழகிய தோற்றம், சிறப்பம்சங்கள் மற்றும் வண்ண தேர்வுகள் என அனைத்தும் அதற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் அமோக வரவேற்பிற்கான காரணங்களாக இருக்கின்றன. புதிய எக்ஸ்டர் எஸ்யூவி கார் இந்திய சந்தையில் டாடா பஞ்ச் மற்றும் சிட்ரோன் சி3 உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக விற்பனைக்கு வந்திருக்கின்றது.

டாடா பஞ்ச் ரூ. 6 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலும், சிட்ரோன் சி 3 ரூ. 6.16 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலும் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது. புதிய எக்ஸ்டர் காரை ஆறு விதமான வேரியண்டுகளில் நம்மால் வாங்கிக் கொள்ள முடியும்.

இஎக்ஸ் (EX), இஎக்ஸ் (ஓ) EX(O), எஸ் (S), எஸ்எக்ஸ் SX, எஸ்எக்ஸ் (ஓ) SX(O) மற்றும் எஸ்எக்ஸ் (ஓ) கன்னெக்ட் (SX(O) Connect) ஆகிய தேர்வுகளிலேயே எக்ஸ்டர் விற்பனைக்குக் கிடைக்கும். இத்துடன், ஒன்பது விதமான நிற தேர்வுகளும் இந்த கார் மாடலில் வழங்கப்படுகின்றது.

ஆனால், டீசல் ஆப்ஷன் இந்த மாடலில் வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக பெட்ரோல் தேர்வுடன் சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்படுகின்றது. இ20 தர எரிபொருளில் இயங்கும் வசதிக் கொண்ட 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் மோட்டாரே ஹூண்டாய் எக்ஸ்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதே எஞ்ஜினே சிஎன்ஜி-யில் இயங்கும் வகையில் ட்யூன்-அப் செய்யப்பட்டு சிஎன்ஜி தேர்வாக விற்பனைக்கு வழங்கப்படுகின்றது.

இந்த மோட்டார் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகின்றது. ஆனால் பெட்ரோல் மோட்டார் தேர்வில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஸ்மார்ட் ஆட்டோமேட்டிக் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில், மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு ஒரு லிட்டருக்கு 19.4 கிமீ மைலேஜையும், ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் தேர்வு 19.2 கிமீ மைலேஜையும் வழங்கும்.

அதேவேளையில், இதன் சிஎன்ஜி ஆப்ஷன் ஒரு கிலோவிற்கு 27.1 கிமீ வரை மைலேஜ் தரும். இதனை ஹூண்டாய் நிறுவனமும் உறுதி செய்திருக்கின்றது. ஆனால், நிஜ வாழ்க்கை பயன்பாட்டில் இதைவிட குறைவான மைலேஜை ஹூண்டாய் எக்ஸ்டர் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஹூண்டாய் எக்ஸ்டர் சிறிய எஸ்யூவி காராக விற்பனைக்கு வந்திருந்தாலும், பாதுகாப்பு மற்றும் சிறப்பு வசதிகளிலும் ஏற்கனவே நாம் கூறியதைப் போல் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எக்ஸ்டர் காருக்கு இப்போதே பலமடங்கு வரவேற்பு அதிகரித்திருப்பதை பார்க்கையில்ச விரைவில் டாடா பஞ்சிற்கு இந்த கார் மிக சிறந்த போட்டியாளனாக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், டாடா பஞ்ச் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களைப் பெற்ற மிகுந்த பாதுகாப்பான கார் என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 11, 2023, 22:30 [IST]
English summary
Hyundai exter suv waiting period details out
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+