காரின் விலை என்னமோ குறைவுதான், ஆனால் டெலிவிரி எடுக்க இத்தனை நாள் வெயிட் பண்ணணும் - புக் செய்ய நீங்க ரெடியா?
ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) காரை இப்போது புக் செய்தாலும், சுமார் 3 மாதங்கள் வரையில் காத்திருந்தே காரை டெலிவிரி பெற முடியும் என்கிற சூழல் நிலவுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்தும், எக்ஸ்டர் காருக்கு கிடைத்துவரும் முன்பதிவுகள் குறித்தும் இனி பார்க்கலாம்.
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய சந்தையில் எக்ஸ்டர் மைக்ரோ-எஸ்யூவி காரை சமீபத்தில் அறிமுகம் செய்தது. டாடா பஞ்ச் காருக்கு நேரடி போட்டி மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள எக்ஸ்டரின் அறிமுக ஆரம்ப விலையாக ரூ.6 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உண்மையில் இந்த விலை தான் இந்த புதிய ஹூண்டாய் காருக்கு விளம்பரமாக அமைந்துள்ளது என்று சொல்ல வேண்டும்.

இதன் காரணமாக, ஜூலை 10ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட போது காரை முன்பதிவு செய்துவிட்டு வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய கால அளவு வெறும் 6 வாரங்களாக மட்டுமே இருந்த நிலையில், தற்போது 3 மாதங்கள் வரையில் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அதாவது, 1 வாரத்தில் எக்ஸ்டர் காருக்கான காத்திருப்பு காலம் டபுள் மடங்காக அதிகரித்துள்ளது.
நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, தற்போதைய நேரப்படி, ஒவ்வொரு நாளும் சராசரியாக 1,800 எக்ஸ்டர் கார்கள் முன்பதிவு செய்யப்படுகின்றன. இந்த புக்கிங் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறும் ஹூண்டாய் நிறுவனம், எக்ஸ்டருக்கு கிடைத்துவரும் மொத்த முன்பதிவுகளில் 40% அதன் பெட்ரோல்-மேனுவல் வேரியண்ட்களுக்கும், 38% பெட்ரோல்-ஏஎம்டி வேரியண்ட்களுக்கும் கிடைத்து வருவதாக தெரிவித்துள்ளது.

மீதி 22 சதவீதத்தினர் மட்டுமே சிஎன்ஜி என்ஜின் தேர்வில் எக்ஸ்டரை முன்பதிவு செய்கின்றனராம். முன்பதிவுகளை போன்று, எக்ஸ்டரை டெலிவிரி பெறுவதற்கு காத்திருக்க வேண்டிய கால அளவும் வேரியண்ட்களை பொறுத்து வேறுப்படுகிறது. அதாவது, எக்ஸ்டர் மேனுவல் தேர்வில் வாங்குபவர்கள் 7-8 வாரங்கள், அதாவது 2 மாத காலம் காத்திருந்தாலே போதும். ஆனால் ஆட்டோ தேர்வில் புக் செய்வோர் 12 வாரங்கள், அதாவது 3 மாதங்கள் வரையில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
இந்த காத்திருப்பு காலங்கள் மாநிலத்திற்கு, மாநிலம் மற்றும் ஷோரூமுக்கு ஷோரூம் மாறுப்படும். அதாவது, எக்ஸ்டர் ஆட்டோமேட்டிக் காரை குறிப்பிட்ட ஒரு டீலர்ஷிப் ஷோரூமில் வாங்குவோர் 12 வாரங்கள் காத்திருக்க வேண்டுமென்றால், வேறொரு டீலர்ஷிப் மையத்தில் 11 வாரங்கள் காத்திருந்தாலே போதும் என்கிற சூழல் இருக்கலாம்.

ஹூண்டாய் எக்ஸ்டரை மேனுவல் தேர்வில் பெட்ரோல் என்ஜின் அல்லது சிஎன்ஜி என்ஜின் தேர்வில் பெறலாம். ஆனால், ஆட்டோமேட்டிக் தேர்வில் பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே எக்ஸ்டர் கிடைக்கும். எக்ஸ்டர் பெட்ரோல் வேரியண்ட்களில் 1.2 லிட்டர் பை-ஃப்யுல் கப்பா பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.
அதிகப்பட்சமாக 6,000 ஆர்பிஎம்-இல் 82 பிஎச்பி மற்றும் 4,000 ஆர்பிஎம்-இல் 113.8 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜினை 5-ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் பெறலாம். சிஎன்ஜி வேரியண்ட்களிலும் மேற்கூறப்பட்ட அதே பெட்ரோல் என்ஜின் தான் பொருத்தப்படுகிறது. ஆனால், சிஎன்ஜி மோடில் அதிகப்பட்சமாக 68 பிஎச்பி மற்றும் 95.2 என்எம் டார்க் திறன் வரையில் மட்டுமே இயக்க ஆற்றலை பெற முடியும்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: எக்ஸ்டர் காரின் உடனடி வெற்றிக்கு ரூ.6 லட்சம் என்கிற குறைவான விலை மட்டுமின்றி, எக்ஸ்டரின் ஸ்டைலிஷான தோற்றம் மற்றும் கட்டிங்-எட்ஜ் தொழிற்நுட்பமும் ஓர் முக்கிய காரணமாகும். ஆகவே, அறிமுக விலை உயர்த்தப்படும் வரையில், எக்ஸ்டருக்கு கிடைத்துவரும் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் இருக்கும்.


Click it and Unblock the Notifications









