தயவு பண்ணி மழை டைம்ல வேகமா போகாதீங்க.. நல்லா போய்ட்டு இருந்த காருக்கே என்ன நிலைமைனு பாருங்க!

மழை காலத்தில் அதிக வேகமாக பயணிப்பது மிகவும் ஆபத்தானது. இதை உறுதிப்படுத்தும் விதமான பல்வேறு சம்பவங்கள் நம் நாட்டில் அரங்கேறி இருக்கின்றன. இந்த நிலையிலேயே, ஈரமான சாலையால் அரங்கேறிய அதிர்ச்சியான சம்பவம்குறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

அந்த வீடியோவில் அதிக வேகமாக வந்த சிவப்பு நிற கார் ஒன்று கன்ட்ரோலை இழந்து விபத்துக்குள்ளாகும் காட்சிகளே இடம் பெற்றிருக்கின்றன. பார்ப்போரை பதற வைக்கும் இந்த சம்பவம் கேரளாவின் மணந்தவாடி-வள்ளியூர்காவு சாலையிலேயே அரங்கேறி இருக்கின்றது. அந்த பகுதியில் ஓர் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் இந்த விபத்து சம்பவத்தின் முழு காட்சிகளும் பதிவாகி இருந்தன.

Hyundai grand i10 driven fast on wet road

இந்த காட்சிகளே தற்போது வாகன ஓட்டிகளின் முன்னெச்சரிக்கைக்காக இணையத்தின் வாயிலாக வெளியிடப்பட்டு இருக்கின்றது. தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி விபத்துக்கு ஆளாகி இருப்பது ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் மாடல் என்பது தெரிய வந்திருக்கின்றது. சற்று அதிக வேகத்தில் சென்றுக் கொண்டிருந்த நிலையிலேயே அது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு ஆளாகி இருக்கின்றது.

நல்ல வேளையாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படவில்லை. குறிப்பாக, சாலை கொஞ்சம் காலியாக இருந்ததாலும், எதிரில் எந்த வாகனமும் வராத காரணத்தினாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், நல்ல தானே கார் போயிட்டு இருந்தது, வாகனங்களும் எதுவும்கூட குறுக்கே வந்ததாக தெரியவில்லை.

Hyundai grand i10 accident

சூழல் இப்படியாக இருக்க இந்த திடீர் விபத்திற்கான காரணம் என்ன? என்கிற சந்தேகம் உங்களுக்கு எழும்பி இருக்கலாம். இந்த விபத்திற்கு மிக முக்கியமான காரணமே ஹூண்டாய் கிராண்ட் ஐ10-இன் அதீத வேகம்தான். பொதுவாகவே ஈரப்பதமான சாலையில் போதிய பிடிமானம் கார் டயருக்கு கிடைக்காது.

இதனை ஆக்குவா பிளானிங் என்பர். ஈரத்தினால் ஏற்படக் கூடிய காருக்கும், தரைக்குமான உறவை பாதிக்கக் கூடிய செயலையே இவ்வாறு அழைக்கின்றனர். இந்த பாதிப்பையே அதிக வேகத்தில் வந்ததன் காரணத்தினால் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் கேரளாவில் சந்தித்து இருக்கின்றது. ஓரளவுக்கு வேகம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் அந்த வாகனம் பெருத்த சேதத்தை தவிர்த்து இருக்கின்றது.

Accident video

அதேவேளையில், அந்த கார் ஓர் கரண்ட் கம்பத்தின்மீது மோதி அதன் பின்னர் நிற்பதை நம்மால் பார்க்க முடிகின்றது. மோதல் லேசாக இருந்ததன் விளைவாக அந்த கரண்ட் கம்பமும் பெரிய அளவில் சேதத்தைச் சந்திக்கவில்லை. குறிப்பாக அது சாலையில் சாயவில்லை. அது சாய்ந்து இருந்திருந்தால் மிக மிக பெரிய ஆபத்தான சூழல் அங்கு ஏற்பட்டு இருக்கும்.

இதுபோன்று மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற காரணத்தினாலேயே மழை காலத்தில் அதிக வேக பயணம் கூடாது என அறிவுறுத்தப்படுகின்றது. இருப்பினும் பலர் அதிக வேக பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். உங்களால் அதிக வேகத்தை தவிர்க்க முடியாது என்றால், மழை மற்றும் மணல் பாங்கான சாலைகளைச் சமாளிக்கும் திறன் கொண்ட டயர்களை உங்களின் வாகனத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால், அவையும் குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே சிக்கல்களைச் சமாளிக்கும் என்பது இங்கு கவனிக்கத்தகுந்தது. ஆகையால், அதிக வேகத்தை குறைத்து கட்டுப்படுத்தக் கூடிய அளவிலான வேகத்தில் பயணிப்பது மட்டுமே ஆபத்தில் இருந்து தப்பிப்பதற்கான சிறந்த தீர்வாகும். இதுவே அனைவருக்கும் நல்லதுகூட. குறிப்பாக, வெள்ளம் நீர் நிறைந்த சாலைகள், வளைவுகள் மற்றும் மலைப் பாதைகளில் பயணிக்கும்போது அதிக கவனத்துடன் பயணிப்பதை கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். இதையே நாங்களும் பரிந்துரைக்கின்றோம்.

மழை நீர் நிறைந்த சாலையில், குறிப்பாக, ஆழம் தெரியாத அல்லது பரீட்சையம் இல்லாத பாதைகளில் பயணிப்பதை அறவே தவிர்த்துவிடுவது நல்லது. இதுமாதிரியான பாதைகளே மிக மோசமான அபத்தை ஏற்படுத்தக் கூடியவையாக நாட்டில் காட்சியளிக்கின்றன. கடந்த காலங்களில் இவற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பல.

மேலும், வாகனங்களிலும் பெருத்த சேதத்தை ஏற்படுத்திவிடுகின்றன மழை வெள்ளம் நீர். வெள்ளம் நீர் நிறைந்த சாலையில் ஓர் வாகனம் பயணிக்கும்போது பல்வேறு விதமான பாதிப்புகளை அது சந்திக்கின்றது. இந்த பாதிப்புகள் பல லட்சங்களை நமக்கு செலவு வைத்து விடும். ஆகையால், மழை காலத்தில் அதிக வேகம் மற்றும் ஆபத்தான பயணங்களை தவிர்ப்பதே நல்லது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஈரமான சாலையில் அதிக விபத்துகள் அரங்கேறுவதைக் கருத்தில் கொண்டு இப்போதைய நவீன கால கார்களில் ஆன்டி ஸ்கிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த அம்சம் ஈரமான சாலையில் வாகனங்கள் நழுவி ஓடுவதை தவிர்த்து நேரான பாதையில் இயங்க அனுமதிக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 8, 2023, 11:59 [IST]
English summary
Hyundai grand i10 met accident due to wet road in kerala
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X