இந்த சின்ன காருல இவ்ளோ சிறப்பு வசதிகளா! ஹூண்டாயால மட்டும்தான் இதெல்லாம் முடியும்.. டாடா, மாருதிக்கு நெருக்கடி!

ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் அதன் புதுப்பிக்கப்பட்ட கிராண்ட் ஐ10 நியாஸ் (Hyundai i10 Nios) வெர்ஷனை வெளியீடு செய்தது. ஆர்டிஇ (RDE) என்கிற விரைவில் அமலுக்கு வர இருக்கும் புதிய மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப தயார் செய்யப்பட்டிருக்கும் வெர்ஷனே இது ஆகும்.

இதன் அறிமுகத்தின் மகிழ்ச்சியில் இருந்தே வெளிவராத ஹூண்டாய் பிரியர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக சூப்பரான தொழில்நுட்ப வசதி உடன் உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய தேர்வு ஐ10 காரையும் அந்நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. என்-லைன் வெர்ஷனாக உருவாக்கப்பட்டு இருக்கும் ஐ10 காரையே ஹூண்டாய் வெளியீடு செய்திருக்கின்றது.

ஐ10

இது உலக சந்தைக்கான கார் மாடல் ஆகும். ஹூண்டாய் நிறுவனம் டாடா மோட்டார்ஸ் மற்றும் மாருதி சுஸுகியை டார்கெட் செய்து சில கார் மாடல்களை இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்க திட்டமிட்டுள்ளது, களமிறக்கியும் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், இந்த என்-லைன் வெர்ஷனையும் இந்திய சந்தையில் விரைவில் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் அனைத்து சிறிய ஹேட்ச்பேக் கார் பிரியர்களின் கவனத்தை ஈர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கேற்ப எண்ணற்ற வசதிகளை இந்த காரில் வாரி வழங்கி இருக்கின்றது, ஹூண்டாய். மிக முக்கியமாக அடாஸ் எனப்படும் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்ட் சிஸ்டம் வசதி உடன் இந்த காரை ஹூண்டாய் உருவாக்கி இருக்கின்றது.

ஐ10

இந்த அம்சத்தின் வாயிலாக பல்வேறு அவசரகால உதவிகளை தன்னிச்சையாக பெற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதாவது, தானாக பிரேக் பிடித்தல், ஓர் லேனில் இருந்து மற்றொரு லேனுக்கு மாறும்போது எச்சரிக்கை வழங்குதல் உள்ளிட்டவற்றை பெற்றுக் கொள்ள முடியும். இந்த அம்சத்திற்காகவே பலர் இந்த காரை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

இந்த அடாஸ் அம்சத்தை கூடுதலாக சிறப்பிக்கும் விதமாக ஹூண்டாய் நிறுவனம் அதன் ஹூண்டாய் ஸ்மார்ட் சென்ஸையும் வழங்கி இருக்கின்றது. ஹூண்டாய் ஐ10 நியாஸ் காருக்கு இந்திய இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் வகையிலேயே என்-லைன் வெர்ஷனாகவும், அதில் நவீன அடாஸ் அம்சத்தையும் ஹூண்டாய் வழங்கி இருக்கின்றது.

ஐ10

இதுமட்டுமில்லைங்க வேற லெவல் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட காராகவும் இதனை ஹூண்டாய் வடிவமைத்து இருக்கின்றது. புதிதாக 4.2 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் அதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை அனைத்து ஐ10 நியாஸிலும் பார்க்க முடியும். இதுதவிர, 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதி உடன் கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், ரியர் வியூ கேமிரா, ஒயர்லெஸ் சார்ஜர், முன் மற்றும் பின் பக்கத்தில் 'சி' டைப் சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட அம்சங்களையும் கிராண்ட் ஐ10 நியாஸ் என்-லைனில் ஹூண்டாய் வழங்கி இருக்கின்றது. இது என்-லைன் வெர்ஷன் என்பதால் சற்று பவர்ஃபுல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

ஐ10

ஆகையால், அனைத்து விஷயத்திலும் இந்த கார் மிக மிக சிறப்பான தயாரிப்பாக காட்சியளிக்கின்றது. குறிப்பாக, சொகுசு மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையானதாக அது உருவாக்கப்பட்டு இருக்கின்றது. நீல நிற ஆம்பியன்ட் லைட், இருக்கைகளில் தனித்துவமான சிவப்பு நிற துணி, சிவப்பு நிற அக்செண்டுகள் மற்றும் சிவப்பு நிற பேட்ஜ் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இவை, கிராண்ட் ஐ10 நிஸாய் என்-லைன் ஓர் பிரீமியம் கார் என்பதைக் காட்டிலும் ஸ்போர்ட்டியான வசதிக் கொண்ட கார் என்பதை பிரதிபலிக்கும் வகையிலேயே காட்சியளிக்கின்றன. வழக்கமான ஹூண்டாய் ஐ10 நியாஸ் காரும் அதிக சிறப்புகள் வாய்ந்ததாகவே உருவாக்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட கிராண்ட் ஐ10 காரில் பர்பில் பேக்கேஜ் பயன்படுத்தப்பட்டு இருக்கும். அதாவது, என் லைன் வெர்ஷனில் அதிகம் சிவப்பு நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இருப்பதைப் போல வழக்கமான கிராண்ட் ஐ10 நியாஸ் ஹேட்ச்பேக் காரில் பர்பில் பேக்கேஜை ஹூண்டாய் வழங்குகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 1, 2023, 8:34 [IST]
English summary
Hyundai grand i10 nios adas n line unveiled
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X