ஷோரூம்களுக்கு வர தொடங்கிய புதிய ஹூண்டாய் ஐ10... விலை இவ்ளோதானா! மாருதி, டாடா கார்களின் கதையை முடிக்க போகுது!

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் (Hyundai Grand i10 Nios Facelift) மாடல், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் ஆரம்ப விலை 5.68 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் (Hyundai Grand i10 Nios Facelift) மாடலில் டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதுடன், ஏராளமான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 11 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஷோரூம்களுக்கு வர தொடங்கிய புதிய ஹூண்டாய் ஐ10... விலை இவ்ளோதானா! மாருதி, டாடா கார்களின் கதையை முடிக்க போகுது!

டீலர்ஷிப்களில் தரிசனம்!

இந்த சூழலில், புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் தற்போது இந்தியா முழுவதும் உள்ள ஹூண்டாய் டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியுள்ளது. டிசைனை பொறுத்தவரையில், ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் எல்இடி பகல் நேர விளக்குகளுக்கு புதிய டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 15 இன்ச் அலாய் வீல்களின் டிசைனும் புதியதுதான். இதுதவிர பூமராங் வடிவ டெயில்லேம்ப் க்ளஸ்ட்டர்களும் கவனம் ஈர்க்க கூடிய வகையில் இருக்கின்றன.

சிறப்பான வசதிகள்!

ஹூண்டாய் நிறுவனத்தின் மற்ற கார்களை போலவே, ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், வயர்லெஸ் செல்போன் சார்ஜிங் பேட், ஆம்பியண்ட் லைட்டிங், புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், க்ரூஸ் கண்ட்ரோல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. அத்துடன் சீட் அப்ஹோல்ஸ்ட்ரிக்கு க்ரே கலர் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வசதிகளுக்கும் பஞ்சமில்லை.

ஷோரூம்களுக்கு வர தொடங்கிய புதிய ஹூண்டாய் ஐ10... விலை இவ்ளோதானா! மாருதி, டாடா கார்களின் கதையை முடிக்க போகுது!

பாதுகாப்பு வசதிகள்!

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 6 ஏர்பேக்குகள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற பல்வேறு பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. எரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ் மற்றும் அஸ்டா என மொத்தம் 4 வேரியண்ட்களில் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கிடைக்கும். ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் சிறப்பான இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இன்ஜின் ஆப்ஷன்கள்!

இதன்படி 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெற்றுள்ளது. இந்த இன்ஜினுடன் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதே இன்ஜின், சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் வகையிலும் வழங்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஆனால் டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் இந்த காரில் கிடையாது.

மாருதிக்கு செக்!

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி இக்னிஸ் (Maruti Suzuki Ignis), மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) மற்றும் டாடா டியாகோ (Tata Tiago) ஆகிய கார்களுடன், ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் போட்டியிடும். ஹூண்டாய் நிறுவனம் க்ராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் தவிர, வெகு சமீபத்தில் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரையும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காருக்கு அடுத்தபடியாக இந்திய சந்தைக்கான ஹூண்டாய் நிறுவனத்தின் 2வது எலெக்ட்ரிக் காராக ஐயோனிக் 5 விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் கியா இவி6 போன்ற எலெக்ட்ரிக் கார்களுடன், புதுவரவான ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் போட்டியிடும். வரும் காலங்களில் ஹூண்டாய் நிறுவனம் இன்னும் பல்வேறு எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

Source: Carwale

Article Published On: Saturday, January 28, 2023, 14:27 [IST]
English summary
Hyundai grand i10 nios facelift arrives at dealerships check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+