எதிர்பார்ப்பு எகிறுது! இன்னைக்கு நைட் தூக்கம் வராதே! நாளைக்கு தரமான சம்பவத்தை செய்ய போகும் ஹூண்டாய் நிறுவனம்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios). இது ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், இந்திய சந்தையில் நாளை (ஜனவரி 20) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 11 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, இந்த புதிய மாடலை புக்கிங் (Booking) செய்து கொள்ளலாம். முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது, ஃபேஸ்லிஃப்ட் மாடலில் டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் கூடுதல் வசதிகளையும் ஹூண்டாய் நிறுவனம் வழங்கியுள்ளது.

அமர்க்களப்படுத்தும் டிசைன்!
டிசைனை பொறுத்தவரையில், முன் பகுதியில் ஹூண்டாய் நிறுவனம் மாற்றங்களை செய்துள்ளது. இதன்படி புதிய பம்பர், எல்இடி பகல் நேர விளக்குகளுக்கு புதிய வடிவம் என ஹூண்டாய் நிறுவனம் அமர்க்களப்படுத்தியுள்ளது. அத்துடன் 15 இன்ச் அலாய் வீல்களின் டிசைனும் புதியதுதான். பின் பகுதியை பொறுத்தவரையில், புதிய டெயில்லேம்ப் க்ளஸ்ட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் உட்புறத்தை பொறுத்தவரையில், வாடிக்கையாளர்கள் ஏராளமான வசதிகளை அனுபவிக்க முடியும்.
சொகுசா போகலாம்!
இந்த காரின் உள்ளே க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் செல்போன் சார்ஜிங், யூஎஸ்பி டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜர், புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஹூண்டாய் நிறுவனம் வழங்கியுள்ளது. அத்துடன் பயணிகள் பாதங்களை வைக்கும் இடத்தில் லைட்டிங் வசதியையும் ஹூண்டாய் நிறுவனம் கொடுத்துள்ளது. எனவே இந்த காரில் பயணம் செய்யும் பயணிகளுக்கு, பிரீமியமான அனுபவம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

பாதுகாப்பிற்கும் பஞ்சமில்லை!
மேலும் பாதுகாப்பு விஷயத்திலும் ஹூண்டாய் நிறுவனம் குறை வைக்கவில்லை. 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், பார்க்கிங் சென்சார்கள் உடன் ரியர் வியூ கேமரா என ஏராளமான பாதுகாப்பு வசதிகளை ஹூண்டாய் நிறுவனம் வாரி வழங்கியுள்ளது. இந்த வசதிகள் எல்லாம், ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்.
மஜாவான இன்ஜின் ஆப்ஷன்கள்!
செயல்திறனை பொறுத்தவரையில், 82 பிஹெச்பி பவர் மற்றும் 114 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர சிஎன்ஜி (CNG) ஆப்ஷனுடனும், ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கிடைக்கும். இந்த காரின் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன், அதிகபட்சமாக 68 பிஹெச்பி பவரையும், 95 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.
டீசல் இல்லையாப்பா?
ஆனால் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என தகவல்கள் வெளியாகி வருகின்றன. க்ராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை (Price) எவ்வளவு? என்பதை ஹூண்டாய் நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த கேள்விக்கு நாளை நமக்கு விடை கிடைத்து விடும்.
எவ்வளவு இருக்கும்?
இருப்பினும் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலை 6 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 9 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம். இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். அதிகாரப்பூர்வமான விலை நாளைதான் நமக்கு தெரிய வரும்.


Click it and Unblock the Notifications








