யாரும் எதிர்பார்க்காத விலையில் புதிய ஹூண்டாய் ஐ10! எல்லாருக்கும் பிடிச்ச கார் ஆச்சே இது! டாடா, மாருதிக்கு செக்

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் (Hyundai Grand i10 Nios Facelift) கார், தற்போது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலுக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பில் இருந்தே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நீங்கள் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை வாங்க விரும்பினால், 11 ஆயிரம் ரூபாயை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் பலர் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வரும் நிலையில், தற்போது ஹூண்டாய் நிறுவனம் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய மாடலில் ஹூண்டாய் நிறுவனம் பல்வேறு டிசைன் அப்டேட்களை வழங்கியுள்ளது.

யாரும் எதிர்பார்க்காத விலையில் புதிய ஹூண்டாய் ஐ10! எல்லாருக்கும் பிடிச்ச கார் ஆச்சே இது! டாடா, மாருதிக்கு செக்

கலக்கலான டிசைன்!

இதன்படி முன் பகுதியில் புதிதாக டிசைன் செய்யப்பட்ட க்ரில் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பாடியின் நிறத்திலேயே முன் மற்றும் பின் பகுதியில் புதிய பம்பர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர சுறா துடுப்பு ஆன்டெனா, புதிய எல்இடி டெயில்லேம்ப்கள் மற்றும் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன், புதிய 15 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்களையும் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெற்றுள்ளது.

சூப்பரான வசதிகள் (Features)!

பொதுவாக ஹூண்டாய் நிறுவனத்தின் கார்களில் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டிருக்கும். இதற்கு ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் விதிவிலக்கு அல்ல. இந்த புதிய மாடலில், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் வசதிகளுடன் 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் ஃபுல் ஆட்டோமேட்டிக் டெம்ப்ரேச்சர் கண்ட்ரோல் ஆகிய வசதிகளையும், ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெற்றுள்ளது.

யாரும் எதிர்பார்க்காத விலையில் புதிய ஹூண்டாய் ஐ10! எல்லாருக்கும் பிடிச்ச கார் ஆச்சே இது! டாடா, மாருதிக்கு செக்

இன்ஜின் (Engine)!

செயல்திறனை பொறுத்தவரையில், ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 82 பிஹெச்பி பவர் மற்றும் 113.8 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை ஹூண்டாய் நிறுவனம் வழங்கியுள்ளது.

சிஎன்ஜி ஆப்ஷனும் இருக்கு!

இந்தியாவில் தற்போது சிஎன்ஜி கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே ஹூண்டாய் நிறுவனம் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனையும் வழங்கியுள்ளது. இந்த காரின் சிஎன்ஜி மாடலில் பொருத்தப்பட்டிருப்பது, 1.2 லிட்டர் கப்பா இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 68 பிஹெச்பி பவரையும், 95.2 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் சிஎன்ஜி மாடலில், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

விலை (Price) எவ்ளோ?

இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலை வெறும் 5.68 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 8.46 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த புதிய மாடலின் ஆரம்ப விலையை ஹூண்டாய் நிறுவனம் 6 லட்ச ரூபாய் என்ற அளவிலும், டாப் வேரியண்ட்டின் விலையை 9 லட்ச ரூபாய் என்ற அளவிலும் நிர்ணயம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதைக்காட்டிலும் குறைவான விலையில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருப்பது, வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மாருதி, டாடாவிற்கு செக்!

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரில், 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் அஸிஸ்ட் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் மற்றும் இபிடி உடன் ஏபிஎஸ் என பல்வேறு பாதுகாப்பு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்திய சந்தையில், மாருதி ஸ்விஃப்ட் (Maruti Swift) மற்றும் டாடா டியாகோ (Tata Tiago) போன்ற கார்களுக்கு, ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனையில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Hyundai grand i10 nios facelift launched in india price features engine
Story first published: Friday, January 20, 2023, 14:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X