ஹூண்டாய் ஐ20 மாடலிலேயே இதுதான் சூப்பரான தேர்வுனு சொல்லலாம்.. ரூ. 9.99 லட்சத்துக்கு இது விற்பனைக்கு கிடைக்கும்!
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் சூப்பரான கார் மாடல்களில் ஒன்றே ஹூண்டாய் ஐ20 ஆகும். இது ஓர் பிரீமியம் தர ஹேட்ச்பேக் ரக காராகும். இந்த கார் மாடலின் என் லைன் (Hyundai i20 N Line) வெர்ஷனையே ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.
கார் ரைடை அதிகம் விரும்புவோர்களைக் கவரும் நோக்கில் இந்த காரில் பல்வேறு மாற்றங்களைச் செய்து ஹூண்டாய் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இரு விதமான ட்ரிம்களில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. என்6 மற்றும் என்8 ஆகியவையே அவை ஆகும்.

இந்த இரண்டு தேர்வுகளிலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. ஆகையால், ஒட்டுமொத்தமாக 4 விதமான தேர்வுகளில் புதிய ஹூண்டாய் ஐ20 என் லைன் விற்பனைக்குக் கிடைக்கும். புதிய ஹூண்டாய் ஐ20 என்லைன் காரில் பொருத்தப்பட்டு இருப்பது 1.0 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் ஆகும்.
இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 118.4 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகளே இந்த காரில் வழங்கப்படுகின்றன வழக்கமான ஹூண்டாய் ஐ20 இதை விட சற்று குறைவான திறனையே வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதில் மட்டுமில்லைங்க அலங்கரிப்பு விஷயத்திலும் வழக்கமான ஹூண்டாயிடம் இருந்து மாறுபட்டுக் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், பிரத்யேக எல்இடி ஹெட்லைட், எல்இடி டிஆர்எல்கள், 16 அங்குல அலாய் வீல்கள் (என் பேட்ஜ் உடன்) வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர இந்த காரின் கவர்ச்சியான தோற்றத்திற்கு கூடுதல் பிளஸ் சேர்க்கும் விதமாக இதன் புதிய கிரில் அமைந்திருக்கின்றது.
இதேபோல், இந்த கார் தொழில்நுட்ப வசதிகளிலும் நம்மை மிரள செய்யும் வகையில் இருக்கின்றது. குறிப்பாக, பிரீமியம் அம்சங்கள் விஷயத்தில் அனைவரையும் இந்த கார் மிரட்டிவிட்டது என்றே கூறலாம். ஸ்போர்ட்டி லுக்கிலான சிவப்பு நிற அலங்கார அணிகலன்கள், லெதர் போர்த்தப்பட்ட கியர் ஷிஃப்டர் மற்றும் ஸ்டியரிங் வீல், சிவப்பு ஆம்பியன்ட் லைட்டுகள், ஸ்போர்ட்ஸ் வகை இருக்கைகள் என ஏகப்பட்ட பிரீமியம் அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
பிரீமியம் அம்சங்களில் மட்டுமல்ல பாதுகாப்பு கருவிகளைக் கொண்டிருப்பதிலும் இந்த கார் அசத்தலானதாக இருக்கின்றது. 35க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், வெயிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், பார்க்கிங் கேமிரா, பர்க்ளர் அலாரம், டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம், டிஸ்க் பிரேக்குகள், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஆகிய அம்சங்களே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
நிற தேர்வை பொருத்த வரை இந்த காரில் ஏழு விதமான ஆப்ஷன்களை ஹூண்டாய் வழங்க இருக்கின்றது. அந்தவகையில், சிங்கிள் டோன் ஆப்ஷனில் புதிதாக அபிஸ் பிளாக் (Abyss Black), அட்லஸ் ஒயிட் (Atlas White), டைட்டன் கிரே (Titan Grey), தண்டர் ப்ளூ (Thunder Blue), ஸ்டேரி நைட் (Starry Night) ஆகியவை வழங்கப்பட இருக்கின்றன.
இதுதவிர, டூயல் டோன் ஆப்ஷனில் அட்லஸ் ஒயிட் உடன் கூடிய அபிஸ் கருப்பு நிற ரூஃப் (Atlas White with Abyss Black Roof) மற்றும் தண்டர் ப்ளூ உடன் கூடிய அபிஸ் பிளாக் ரூஃப் (Thunder Blue with Abyss Black Roof) ஆகிய நிற தேர்வுகளே புதிய ஹூண்டாய் ஐ20 என் லைனில் வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் என் லைன் வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் ஹூண்டாய் கார்களுக்கு என தனி ரசிகப் பட்டாளமே உண்டு. இந்த நிலையிலேயே ஹூண்டாய் நிறுவனம் இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் ஐ20 என் லைனை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு நல்ல வரவேற்பு இந்தியர்கள் மத்தியில் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









