Hyundai கம்பெனி காரின் விலையை இப்படி உயர்த்திருக்க கூடாது... ஒரே மாதத்தில் எத்தனை தடவைங்க!!

ஒரே மாதத்தில் எத்தனை தடவைங்க இந்த காரின் விலையை உயர்த்துவீங்க என கேட்க தோன்றும் அளவிற்கு, ஹூண்டாய் ஐ20(Hyundai i20) காரின் விலைகள் இந்த ஏப்ரல் மாதத்தில் 2வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளன. இதுகுறித்தும், இந்த ஹூண்டாய் காரை பற்றியும் இனி விரிவாக பார்க்கலாம்.

கார் உதிரி பாகங்களை உற்பத்தி செய்வதற்கும், அவற்றிற்கான போக்குவரத்துக்கும் ஆகும் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கார்களின் விலைகளை அவ்வப்போது அதிகரிக்க வேண்டிய சூழல் கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஏற்படுகிறது. குறிப்பாக, ஒவ்வொரு நிதியாண்டு முடிந்து புதிய நிதியாண்டு துவங்கும்போது கார்களின் விலைகள் பெரும்பாலும் அதிகரிக்கப்படுவது வழக்கம்.

hyundai i20 price hiked

2023 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் துவங்கிய 2023-24 நிதியாண்டிற்காக பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது கார்களின் விலைகளை அதிகரித்ததை கடந்த மார்ச் மாதத்தில் பார்க்க முடிந்தது. சில நிறுவனங்கள் சற்று தாமதாக இன்னும் கார்களின் விலைகளை அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் ஐ20 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை 2வது முறையாக அதிகரித்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே இந்த ஏப்ரல் மாத துவக்கத்தில் சில கார்களுடன் சேர்த்து ஐ20 காரின் விலைகளையும் அதிகரித்து இருந்தது. தற்போது அதனை தொடர்ந்து 2வது முறையாக இந்த பிரீமியம் தர ஹேட்ச்பேக் காரின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த இரு விலை உயர்வுகளினால் இனி ஹூண்டாய் ஐ20 காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.46 லட்சம் ஆகும். எக்ஸ்-ஷோரூம் விலையே இவ்வளவு என்றால், இன்ஸ்சூரன்ஸ், சாலை வரி உள்ளிட்டவை எல்லாம் சேர்த்து ஆன்-ரோடு விலை ரூ.9 லட்சத்திற்கு அருகில் வந்துவிடும்.

hyundai i20 price hiked

அதாவது ஹூண்டாய் ஐ20 காரை வாங்க வேண்டுமென்றால், இனி நீங்கள் குறைந்தது ரூ.9 லட்சத்தையாவது செலவிட்டாக வேண்டும். கடந்த மார்ச் மாதத்தில் இருந்த ஆரம்ப விலையை காட்டிலும் ஹூண்டாய் ஐ20 காரின் தற்போதைய ஆரம்ப விலையான ரூ.7.46 லட்சம் கிட்டத்தட்ட 6% அதிகமாகும். ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த புதிய மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப காரின் என்ஜினை அப்டேட் செய்ததினால், ஐ20 காரின் விலைகளை ரூ.15,900 வரையில் ஹூண்டாய் உயர்த்தியுள்ளது.

ஆனால் 2வது முறையாக தற்போது, இந்த ஹேட்ச்பேக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் சுமார் ரூ.43,000 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, குறைந்த விலையில் காரை வாங்க விரும்பும் பலரது சாய்ஸாக விளங்கும் ஐ20 காரின் எண்ட்ரீ-லெவல் மேக்னா வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை தான் இருப்பதிலேயே அதிகப்படியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட ரூ.43,000 விலை உயர்வு ஐ20 மேக்னா வேரியண்ட்டிற்குதான் வழங்கப்பட்டுள்ளது.

hyundai i20 price hiked

இதனால் முன்பு ரூ.7.03 லட்சத்தை எக்ஸ்-ஷோரூம் விலையாக கொண்டிருந்த இந்த வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை இனி ரூ.7.46 லட்சம் ஆகும். மற்ற வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.20,000- ரூ.30,000 வரையில் உயர்த்தப்பட்டுள்ளன. குறைந்தப்பட்சமாக, ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.14,000- ரூ.17,000 என்ற அளவிலேயே உயர்த்தப்பட்டுள்ளன. ஹூண்டாய் ஐ20 காரின் புதிய எக்ஸ்-ஷோரூம் விலைகள் குறித்த முழுமையான விபரங்களை கீழுள்ள அட்டவணையில் காணலாம்.

Hyundai i20 New Price Old Price
Magna MT

₹7.46 Lakh

₹7.03 Lakh
Sportz MT ₹8.07 Lakh ₹7.93 Lakh
Sportz Dual Tone MT ₹8.22 Lakh ₹8.08 Lakh
Asta MT ₹9.03 Lakh ₹8.80 Lakh
Asta (O) MT ₹9.77 Lakh ₹9.54 Lakh

Asta (O) Dual Tone MT

₹9.92 Lakh ₹9.69 Lakh
Sportz AT ₹9.11 Lakh ₹8.95 Lakh
Asta (O) AT ₹10.81 Lakh ₹10.56 Lakh

Asta (O) Dual Tone AT

₹10.96 Lakh ₹10.71 Lakh

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து

புதிய நிதியாண்டு துவங்கினால் காரின் விலைகள் உயர்த்தப்படும் என்பது நாம் எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் ஹூண்டாய் இவ்வாறு ஒரே மாதத்தில் 2வது முறையாக ஐ20 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை உயர்த்தும் என நாம் எதிர்பார்க்கவில்லை. இந்த 2 விலையுயர்வுகளினால் இந்த ஹூண்டாய் காரின் விற்பனை எந்த அளவிற்கு பாதிக்கப்பட உள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, April 14, 2023, 17:00 [IST]
English summary
Hyundai i20 price hiked 2nd time in 1 month
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X