ஹூண்டாய் நிறுவனத்திற்கு இப்படி ஒரு நிலைமையா! ஒரே மாசத்துல எல்லாம் தலைகீழா மாறி போயிருச்சு!
இந்திய சந்தையில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்திற்கு அடுத்தபடியாக 2வது மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் திகழ்ந்து வருகிறது. இந்த சூழலில், ஹூண்டாய் நிறுவனத்தின் பிப்ரவரி மாத சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 47,001 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 44,050 கார்களாக மட்டுமே இருந்தது. இதன் மூலம் ஹூண்டாய் நிறுவனம் விற்பனையில் 6.70 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இது ஹூண்டாய் நிறுவனத்திற்கு மகிழ்ச்சிகரமான விஷயம்தான் என்றாலும் கூட, மற்றொரு சோகமான செய்தியும் அந்த நிறுவனத்திற்கு இருக்கிறது. அதாவது நடப்பாண்டு ஜனவரி மாதம் ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் 50,106 கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் அதன்பின் வந்த பிப்ரவரி மாதம் இந்த எண்ணிக்கை 47,001 ஆக குறைந்து விட்டது.
இது 6.20 சதவீத வீழ்ச்சியாகும். இந்திய சந்தையில் ஏற்பட்டுள்ள மிக கடுமையான போட்டியை சமாளிப்பதற்காக ஹூண்டாய் நிறுவனம் பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா (New-gen Hyundai Verna) கார் வெகு விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா கார் வரும் மார்ச் 21ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த புதிய மாடலுக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன.
ஹூண்டாய் வெர்னா, இந்திய சந்தையில் ஏற்கனவே மிகவும் பிரபலமாக உள்ள செடான் ரக கார் ஆகும். இதன் அப்டேட் செய்யப்பட்ட புதிய தலைமுறை மாடலைதான் ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய மாடலில் முற்றிலும் புதிய டிசைன் வழங்கப்படவுள்ளது. அதேபோல் இந்த புதிய மாடலில் வசதிகளுக்கும் பஞ்சமிருக்காது.
வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் வசதியுடன் கூடிய பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், சன்ரூஃப் மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்ற புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா செடான் காரின் குறிப்பிடத்தக்க வசதிகள் ஆகும்.
இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, ஹோண்டா சிட்டி (Honda City), மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz), ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus) ஆகிய கார்களுடன், புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா செடான் கார் போட்டியிடும்.


Click it and Unblock the Notifications