சிங்கிள் சார்ஜில் 630 கிமீ ஓடும் எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! சண்முகம் வண்டிய நேரா ஷோரூமுக்கு விடு!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் கார்களில் (Electric Car) ஒன்று ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5). கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போ (2023 Auto Expo) வாகன திருவிழாவில்தான், ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
நேரடி போட்டி மாடலான கியா இவி6 (Kia EV6) எலெக்ட்ரிக் காரை விட மிக மிக குறைவான விலை (Price), அதிநவீன வசதிகள் (Features), சிறப்பான டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) மற்றும் கவர்ச்சிகரமான டிசைன் (Design) ஆகிய காரணங்களால், ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதன் காரணமாக கடந்த ஜூலை மாதமே 500 ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை (Sales) என்ற மைல்கல்லை (Milestone) ஹூண்டாய் நிறுவனம் எட்டி விட்டது. இந்த வரிசையில் 1,000 ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை என்ற மிக பிரம்மாண்டமான மைல்கல்லை ஹூண்டாய் நிறுவனம் தற்போது கடந்துள்ளது.
இதனை ஹூண்டாய் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்திய சாலைகளில் தற்போது 1,000 ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார்கள் ஓடி கொண்டுள்ளன என்பது நமக்கு தெரியவந்துள்ளது. இது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம்தான் என்பதில் நமக்கு எள் அளவும் சந்தேகம் இல்லை.

ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில், 72.6 kWh பேட்டரி (Battery) ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 631 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது அராய் (ARAI) அமைப்பு சான்று வழங்கிய டிரைவிங் ரேஞ்ச் ஆகும்.
350 kW DC ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால் இந்த பேட்டரியை வெறும் 18 நிமிடங்களில், 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும். இது போன்ற சிறப்பம்சங்களுடன், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 12.3 இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகிய வசதிகளும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன.
இதுதவிர அடாஸ் (ADAS) தொழில்நுட்பம் மற்றும் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே போன்ற வசதிகளும் கூட, ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில் வாரி வழங்கப்பட்டுள்ளன. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் விலை வெறும் 45.95 லட்ச ரூபாய் மட்டுமே. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும் (Ex-showroom Price).
மறுபக்கம் நேரடி போட்டி மாடலான கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலையே 60.95 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 65.95 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவையும் எக்ஸ் ஷோரூம் விலைதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலையுடன் ஒப்பிடும்போது, ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 15 லட்ச ரூபாய் குறைவு! ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் தற்போதைய நிலையில் ஒரே ஒரு வேரியண்ட்டில் (Variant) மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது என்பதையும் நாங்கள் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் எப்படி இவ்வளவு குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது? என்ற சந்தேகம் இங்கே உங்களுக்கு வரலாம். கியா இவி6 எலெக்ட்ரிக் கார் இந்தியாவிற்கு முழுவதுமாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரோ இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படுகிறது.
இது வரிகளில் (Tax) மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகவே ஹூண்டாய் நிறுவனத்தால் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரை மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்ய முடிகிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த யுக்தி, நல்ல பலனை கொடுத்திருப்பது, ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் விற்பனை எண்ணிக்கையிலேயே தெளிவாக தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார், நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பு ஆகும். இதன் காரணமாகவே இந்திய வாடிக்கையாளர்கள் பலரும் போட்டி போட்டு கொண்டு, ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரை வாங்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








