ஒரு டைம் சார்ஜ் பண்ணா சென்னைல இருந்து நெல்லை போயிரலாம்! விலை இவ்ளோதானா! சண்முகம் வண்டிய ஷோரூமுக்கு விட்றா!

இந்திய சந்தையில் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) மிகவும் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. எனவே அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு புத்தம் புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு கொண்டுள்ளன.

இந்த வகையில் ஹூண்டாய் நிறுவனத்தால் களமிறக்கப்பட்ட ஒரு எலெக்ட்ரிக் கார்தான் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5). கடந்த ஜனவரி மாதம்தான் ஹூண்டாய் ஐயோனிக் 5 கார், இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதற்குள்ளாக 500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட்டு விட்டதாக ஹூண்டாய் நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது.

Hyundai Ioniq 5

இந்திய சந்தையில் ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலை 44.95 லட்ச ரூபாயாக இருக்கிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த விலைக்கு ஹூண்டாய் ஐயோனிக் 5 மிகவும் சிறப்பான எலெக்ட்ரிக் காராக கருதப்படுகிறது. எனவேதான் அதனால் விற்பனையில் சாதிக்க முடிந்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் E-GMP பிளாட்பார்ம் அடிப்படையில் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரில், 72.6 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 631 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Hyundai Ioniq 5 Tracking shot

இது அராய் (ARAI) அமைப்பு சான்று வழங்கிய ரேஞ்ச் (Range) ஆகும். 800V ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கு இந்த பேட்டரி சப்போர்ட் ஆகும். இது பேட்டரியை வெறும் 18 நிமிடங்களில், 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விடும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

எனவே தொலைதூர பயணங்களுக்கு ஏற்ற எலெக்ட்ரிக் காராக ஹூண்டாய் ஐயோனிக் 5 திகழ்கிறது. இந்திய சந்தையில் கியா இவி6 (Kia EV6) எலெக்ட்ரிக் கார்தான், ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் மிக முக்கியமான போட்டி மாடல் ஆகும். ஆனால் கியா இவி6 எலெக்ட்ரிக் காரை காட்டிலும், ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் விலை மிகவும் குறைவு.

கியா இவி6 எலெக்ட்ரிக் கார் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே அதன் ஆரம்ப விலை 60.95 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 65.95 லட்ச ரூபாய் ஆகவும் இருக்கிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆனால் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படுகிறது.

எனவே வரிகள் குறைவு என்பதால், இதன் விலையும் குறைவாக இருக்கிறது. முக்கியமான போட்டியாளரான கியா இவி6 எலெக்ட்ரிக் காருடன் ஒப்பிடும்போது விலை மிகவும் குறைவாக இருப்பதுதான், ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் பிரம்மாண்டமான வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது.

கியா இவி6 மட்டுமல்லாது, வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் (Volvo XC40 Recharge) எலெக்ட்ரிக் காருடனும், ஹூண்டாய் ஐயோனிக் 5 போட்டியிட்டு வருகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் காரின் விலை 56.90 லட்ச ரூபாயாக இருக்கிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இதனுடன் ஒப்பிடும்போதும் கூட, ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் விலை குறைவானதுதான்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2 மிக முக்கியமான போட்டி மாடல்களுடன் ஒப்பிடும்போதும், ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் விலை பல லட்ச ரூபாய் குறைவாக இருக்கிறது. எனவே பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என நினைக்கும் வாடிக்கையாளர்கள் பலர், ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரை தேர்வு செய்து வருகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 11, 2023, 17:22 [IST]
English summary
Hyundai ioniq 5 ev achieves 500 unit sales milestone all details here
மேலும்... #ஹூண்டாய் #hyundai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+