பாயிண்ட்டை பிடித்த ஹூண்டாய்! சூப்பரான எலெக்ட்ரிக் கார் அறிமுகம்! சிங்கிள் சார்ஜில் இவ்ளோ தூரம் ஓடுமா!

2023 ஆட்டோ எக்ஸ்போ (2023 Auto Expo) இன்று (ஜனவரி 11) தொடங்கியது. இது இந்தியாவின் மிகப்பெரிய வாகன திருவிழா ஆகும். எனவே வாகன பிரியர்கள், இந்த ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவை ஆவலுடன் எதிர்நோக்கி காத்து கொண்டிருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், பல்வேறு புதிய வாகனங்கள் இந்த ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகி வருகின்றன.

இந்த சூழலில், ஹூண்டாய் நிறுவனம் ஐயோனிக் 6 (Hyundai Ioniq 6) காரை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்துள்ளது. இது எலெக்ட்ரிக் செடான் (Electric Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இ-ஜிஎம்பி (E-GMP) பிளாட்பார்ம் அடிப்படையில், ஹூண்டாய் ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் செடான் கார் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) எலெக்ட்ரிக் காரும், இதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

பாயிண்ட்டை பிடித்த ஹூண்டாய்! சூப்பரான எலெக்ட்ரிக் கார் அறிமுகம்! சிங்கிள் சார்ஜில் இவ்ளோ தூரம் ஓடுமா!

ஓஆர்விஎம் எல்லாம் இருக்காது!

ஹூண்டாய் ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் காரில், வழக்கமான ஓஆர்விஎம்கள் இருக்காது. அதற்கு பதிலாக ரியர் வியூ கேமராக்கள் இடம்பெற்றிருக்கும். அத்துடன் இந்த எலெக்ட்ரிக் காரில், கூபே கார்களை போன்ற ரூஃப் லைன் இருக்கும். உட்புறத்தை பொறுத்தவரையில், 2 திரைகள், 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர இன்னும் பல்வேறு அதிநவீன வசதிகள் எல்லாம் ஹூண்டாய் ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

இங்கே 2 திரைகள் என குறிப்பிடப்பட்டிருப்பது, இரண்டு 12 இன்ச் திரைகள் ஆகும். இதில் ஒரு திரை இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகவும், மற்றொரு திரை டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகவும் செயல்படும். இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படும் கார்களிலும், இப்படி 2 திரைகளை வழங்குவது தற்போது ஒரு 'ட்ரெண்ட்' ஆக மாறி வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

பாயிண்ட்டை பிடித்த ஹூண்டாய்! சூப்பரான எலெக்ட்ரிக் கார் அறிமுகம்! சிங்கிள் சார்ஜில் இவ்ளோ தூரம் ஓடுமா!

ரேஞ்ச்!

ஹூண்டாய் ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் காரில், 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 53 kWh பேட்டரி தொகுப்பு ஒன்றாகும். இதன் டிரைவிங் ரேஞ்ச் 429 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 77.4 kWh பேட்டரி தொகுப்பும், ஹூண்டாய் ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 610 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹூண்டாய் ஐயோனிக் 5 லான்ச்!

இதற்கிடையே ஹூண்டாய் நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரை, 2023 ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவின் மூலம், இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதன் விலைகள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. முக்கியமான போட்டியாளரான கியா இவி6 (Kia EV6) எலெக்ட்ரிக் காரை காட்டிலும், மிகவும் குறைவான விலையில் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பாயிண்ட்டை பிடித்த ஹூண்டாய்! சூப்பரான எலெக்ட்ரிக் கார் அறிமுகம்! சிங்கிள் சார்ஜில் இவ்ளோ தூரம் ஓடுமா!

சாதனை படைக்கலாம்!

எனவே ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார், விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக ஹூண்டாய் ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் காரும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஹூண்டாய் நிறுவனம் க்ரெட்டா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை (Hyundai Creta EV) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மாருதி சுஸுகி நிறுவனம் இன்று இவிஎக்ஸ் என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி (Maruti Suzuki EVX Electric SUV) கான்செப்ட் மாடலை காட்சிப்படுத்தியது. ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் கார், இந்த எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எலெக்ட்ரிக் கார்களுக்கு இந்திய சந்தையில் தற்போது நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. எனவே ஹூண்டாய் நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களின் பக்கம் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.

Most Read Articles
English summary
Hyundai ioniq 6 ev unveiled at the 2023 auto expo
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X