Hyundai IONIQ 6-க்கு கார்களுக்கான ஆஸ்கர் விருது! வேற எந்த காருக்கெல்லாம் அவார்டு?
உலகம் முழுவதும் உள்ள சினிமாக்களுக்கு ஆஸ்கர் வழங்குவதைப் போல உலகம் முழுவதும் உள்ள கார்களுக்கான விருது தான் உலக கார் விருதுகள். 2023ம் ஆண்டிற்கான உலக கார் விருதுகள் சமீபத்தில் நடைபெற்றது. இது ஒரு தனியார், லாபநோக்கமற்ற அமைப்பு நடந்தும் விருது வழங்கும் நிகழ்ச்சியாகும்.
இந்த விருதிற்காக உலகம் முழுவதிலுமிருந்து 100 நடுவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களில் கார்களின் பட்டியல் வழங்கப்பட்டு அவர்கள் வழங்கும் மார்க்குகளின் அடிப்படையில் உலகின் சிறந்த கார்கள் தேர்வு செய்யப்படுகிறது.

அந்த வகையில் 2023ம் ஆண்டு உலக கார்களுக்கான விருது மொத்தம் 6 பிரிவுகளாக நடந்தது. கார் டிசைன், அர்பன் கார், எலெக்ட்ரிக் கார், பெர்ஃபாமென்ஸ் கார், சொகுசு கார், இந்த ஆண்டிற்கான சிறந்த கார் என மொத்தம் 6 பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் முதலில் கார்கள் பட்டியலிடப்பட்டன.
அதில் இறுதிப்போட்டிக்கான கார்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டது. அதில் முதல் 3 இடத்தை பிடித்த கார்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் அதிக மதிப்பெண் பெற்ற காருக்கு அந்த விருது வழங்கப்பட்டது. இப்படியாக 6 பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவாகக் காணலாம் வாருங்கள்.

சிறந்த கார் டிசைன்: உலகின் சிறந்த கார் டிசைனிற்கான விருதில் மொத்தமே 5 கார்கள் தான் இறுதிப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டன. அதில் ஹூண்டாய் அயானிக் 6 காருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. 2ம் இடம் லேண்ட்ரோவர் ரேஞ்ச் ரோவர் காருக்கும். 3வது இடம் லுக்கிட் ஏர் காருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த எலெக்ட்ரிக் கார்: இந்த விருதிற்கு மொத்தம் 22 கார்கள் பட்டியலிடப்பட்டன. அதில் 5 கார்கள் தான் இறுதிப் போட்டிக்குத் தேர்வானது. அதில் முதலிடத்தைப் பிடித்தது அயானிக் 6 கார் தான். இரண்டாம் இடம் பிஎம்டபிள்யூஐ7, லுக்கிட் ஏர் காருக்கு 3வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த பெர்ஃபாமென்ஸ் கார்: உலகின் சிறந்த பெர்ஃபாமென்ஸ் கொண்ட கார்களுக்கான தேர்வில் மொத்தம் 8 கார்கள் பட்டியலிடப்பட்டன. அதில் 5 கார்கள் இறுதிப் போட்டிக்குத் தேர்வானது. இறுதியாக கியா இவி6 ஜிடி கார் முதலிடத்தைப் பிடித்து இந்த விருதை தட்டி சென்றது. அடுத்தாக நிஸான் இசட் கார் இரண்டாவது இடத்தையும், டொயோட்டா ஜிஆர் கோரோல்லா கார் 3வது இடத்தையும் பிடித்துள்ளது.
சிறந்த சொகுசு கார்: இந்த தேர்விற்கு மொத்தம் 15 கார்கள் பட்டியலிடப்பட்டு 5 கார்கள் இறுதி போட்டிக்கு தேர்வாகி இறுதியாக லுக்கிட் ஏர் கார் முதலிடத்தையும், பிஎம்டபிள்ய6 7 சிரீஸ்/ஐ7 கார் இரண்டாவது இடத்தையும், ஜெனிசீஸ் ஜி90 கார் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
சிறந்த அர்பன் கார்: அதாவது நகர்புற பகுதியில் ஓட்ட சிறந்த கார்களுக்கான விருது இது. இதில் மொத்தமே 3 கார்கள் தான் இடம் பிடித்தது. இதில் முதலிடத்தை சிட்ரோன் சி3 காரும், இரண்டாம் இடத்தை ஓரா ஃபங்கி கேட் காரும், ஃபோக்ஸ்வேகன் டைகோ கார் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
உலகின் சிறந்த கார்: இந்த விருது தான் உச்சபட்ச விருதாகும். இந்த விருதுக்கு மொத்தம் 30 கார் பட்டியலிடப்பட்டது. அதில் 10 கார்கள் இறுதிப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டது. அதில் ஹூண்டாய் அயானிக் 6 கார் முதலிடத்தைப் பிடித்து விருதைத் தட்டி சென்றது. பிஎம்டபிள்யூ எக்ஸ்1 கார் இரண்டாவது இடத்தையும், கியா நிரோ கார் 3 வது இடத்தையும் பெற்றது.


Click it and Unblock the Notifications









