இனி தைரியமா ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்களை வாங்கலாம் போலிருக்கே... இதுக்காகதான் ஷெல்-கூட ஹூண்டாய் இணைந்திருக்கு!

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டா (Hyundai Motor India)யும், பிரபல ஆயில் நிறுவனமான ஷெல் (Shell India)-ம் இந்தியாவில் கை கோர்த்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த இணைவின் வாயிலாக இரு நிறுவனங்களும் என்ன செய்ய இருக்கின்றன என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டா ((Hyundai Motor)-ம், பிரபல ஆயில் நிறுவனமான ஷெல் (Shell)-ம் இந்தியாவில் கை கோர்த்திருக்கின்றன. இந்த இணைவின் வாயிலாக இரு நிறுவனங்களும் நாட்டில் மின்சார வாகனங்களுக்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்க இருக்கின்றன. இதற்காகவே ஹூண்டாய், ஷெல் உடன் தற்போது இணைந்திருக்கின்றது.

Hyundai partners with shell

ஷெல் ரீசார்ஜ் எனும் பெயரில் மின்சார வாகனங்களுக்கான் சார்ஜிங் கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. நிறுவனத்தின் சேவையை நாடியே ஹூண்டாய் தற்போது அதனுடன் இணைந்திருக்கின்றது. நாட்டில் உள்ள 36க்கும் மேற்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் மின்சார கார் விற்பனையகங்களில் அது எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க இருக்கின்றது.

60 kW DC டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் கருவிகளே பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன. தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு மின்சார கார் பயன்பாட்டை மிக எளிமையானதாக மாற்றும் விதமாக ஹூண்டாய் நிறுவனம் இந்த பணியில் களமிறங்கி இருக்கின்றது. இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் மிக சிறப்பாக பங்காற்றி வரும் நிறுவனங்களில் ஹூண்டாயும் ஒன்று.

Hyundai ioniq 5 ev

இந்த நிறுவனம் கோனா இவி எனும் எலெக்ட்ரிக் கார் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அதுதவிர, ஐயோனிக் 5 எனும் எலெக்ட்ரிக் சொகுசு காரையும் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இத்துடன், க்ரெட்டா இவி போன்ற எலெக்ட்ரிக் கார்களையும் இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.

இவ்வாறு தன்னுடைய மின் வாகன சந்தையை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் களமிறங்கியிருக்கும் அதேவேளையிலேயே சார்ஜிங் கட்டமைப்பு வசதிகளையும் விரிவுப்படுத்தும் பணியில் ஹூண்டாய் களமிறங்கி இருக்கின்றது. ஷெல் நிறுவனம் DC 60 kW ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கு பதிலாக DC 120 kW ஃபாஸ்ட் சார்ஜிங் கருவிகளை டீலர்ஷிப் மையங்களில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர திட்டமிட்டு இருக்கின்றது.

ஹோண்டா நிறுவனம் நாடு முழுவதும் உள்ள 45க்கும் மேற்பட்ட நகரங்களில் 72க்கும் அதிகமான மின்சார கார் விற்பனையகங்களை நடத்தி வருகின்றது. இவற்றில் ஒரு சிலவற்றில் மட்டுமே மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யவதற்கான வசதி அமைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையிலேயே இரண்டாம் கட்டமாக தன்னுடைய மின்சார கார் விற்பனையகங்களில் சார்ஜிங் கட்டமைப்புகளை உருவாக்க ஷெல் நிறுவனத்தை அது நாடி இருக்கின்றது.

ஷெல் ரீசார்ஜ் DC 60/120 kW ஃபாஸ்ட் சார்ஜிங் கருவிகளை உருவாக்குவதில் கை தேர்ந்த நிறுவனமாக உள்ளது குறிப்பிடத்தகுந்தது. இவற்றையே தற்போது நாடு முழுவதிலும் உள்ள ஹூண்டாய் நிறுவனங்களின் மின் வாகனங்கள் விற்பனையகங்கள் ஷெல் நிறுவனம் கட்டமைக்க இருக்கின்றது. இங்கு வைத்து எலெக்ட்ரிக் வாகனங்களை சில நிமிடங்களிலேயே சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. டூ-வீலர், ஆட்டோ மற்றும் கார் என அனைத்து ரக எலெக்ட்ரிக் வாகனங்களும் நல்ல விற்பனை வளர்ச்சியைப் பெற்று வருகின்றன. ஆனால், அந்த வாகனங்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் பெரும் பற்றாக்குறை நிலவுகின்றது.

குறிப்பாக சார்ஜிங் வலையமைப்பு தட்டுப்பாடு நாடு முழுவதும் தலைவிரித்தாடுகின்றது. இதன் காரணத்தினாலேயே பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு முன்னணி நிறுவனங்கள் சார்ஜிங் வலையமைப்பு நாடு முழுவதும் விரிவுப்படுத்தும் முயற்சியில் மிக தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றன. அதில் ஒன்றாகவே தற்போது ஹூண்டாய் நிறுவனம் மாறி இருக்கின்றது.

Article Published On: Thursday, May 18, 2023, 8:57 [IST]
English summary
Hyundai joins hand with shell india to expand ev charging infrastructure india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+