83 லட்சம் கார்களை ஈஸியா திருட வாய்ப்பு இருக்கு! வைரலான வீடியோவால் தலையை பிச்சுகிட்டு சுத்திய கார்பரேட்கள்!

ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்கள் கடந்த 2015ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டுவரை தயாரித்த கார்களில் பாதுகாப்பு பிரச்சனைகள் இருப்பதால் இரு நிறுவனங்களும் தாங்கள் விற்பனை செய்த 83 லட்சம் கார்களில் சாஃப்ட்வேர்களை அப்டேட் செய்ய முடிவு செய்துள்ளது. டிக்டாக் வீடியோ ஒன்று வைரலாக பரவிய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் மற்றும் கியா இந்த இரண்டு பிராண்ட்களும் தென் கொரியாவைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனங்கள். இவை இரண்டும் தனித்தனியாகப் போட்டி நிறுவனங்களாக இருந்தாலும் இவை இரண்டிற்கும் இடையே முதலீட்டுத் தொடர்பு இருக்கிறது. ஹூண்டாய் நிறுவனம் கியா நிறுவனத்தில் குறிப்பிட்ட அளவு பங்குகளை வைத்துள்ளது. இதனால் இரு நிறுவனங்களும் தேவையான நேரங்களில் சேர்ந்தும், தேவையான இடங்களில் பிரிந்தும் இயங்கும்.

83 லட்சம் கார்களை ஈஸியா திருட வாய்ப்பு இருக்கு! வைரலான வீடியோவால் தலையை பிச்சுகிட்டு சுத்திய கார்பரேட்கள்!

இந்நிலையில் அமெரிக்காவில் சமீபத்தில் ஒரு டிக்டாக் வீடியோ ஒன்று வைரலானது அதில் கடந்த 2015ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை கியா மற்றும் ஹூண்டாய் நிறுவனம் தயாரித்த கார்களில் மிகப்பெரிய அளவில் பாதுகாப்பு குறைபாடு ஒன்று இருப்பதை அந்த வீடியோவில் வெட்ட வெளிச்சம் போட்டி விளக்கியிருந்தனர். அதனால் திருடர்கள் சுலபமாக அந்த காரை திருடி விட முடியும் எனவும் விளக்கியிருந்தனர். இந்த வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்த பலர் அதைப் பகிர்ந்திருந்தனர்.

இந்த வீடியோ அமெரிக்கா முழுவதும் வைரலான நிலையில் குறிப்பிட்ட கம்பெனிகளில் குறிப்பிட்ட ஆண்டுகளில் தயாரான கார்களை வைத்திருப்பவர்கள் அதை டெஸ்ட் செய்து பார்த்த போது அது உண்மை எனத் தெரியவந்தது. இதனால் இந்த விஷயம் பெரும் விவாதத்திற்குள்ளானது. இந்நிலையில் அமெரிக்காவில் 2 முக்கியமான பெரிய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் குறிப்பிட்ட ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் மற்றும் கியா கார்களுக்கு இன்சூரன்ஸ் வழங்குவதைத் தற்காலிகமாகவே நிறுத்தினர்.

இதையடுத்து இந்த விவகாரத்தில் அந்நாட்டு அரசின் தேசிய ஹைவே டிராஃபிக் பாதுகாப்பு அமைப்பு தலையிட்டு விசாரித்த போது இப்படியாக இந்த ரக கார்களை சுலபமாக ஹேக் செய்ய முடியும். அதன் மூலம் காரை சாவியே இல்லாமல் ஸ்டார்ட் செய்து ஓட்டி செல்ல முடியும் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து இந்த கார்களுக்கு செகண்ட் ஹேண்ட் மார்கெட்டில் மவுசு வெகுவாக குறைந்தது யாரும் இந்த கார்களை வாங்க முன்வரவில்லை.

இந்த காரை வைத்திருப்பவர்களுக்கும் கார் திருடு போய் விடுமோ என்ற பயம் ஏற்பட்டது. இந்த பிரச்சனையைச் சமாளிக்க முடியாமல் இரு நிறுவனங்களும் திணறின. முதற்கட்டமாக ஹூண்டாய் நிறுவனம் இப்படியான கார்களுக்கான ஆண்டி தெஃப்ட் கருவிகளைப் பொருத்துவது குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அந்த கருவி பொருத்தப்பட்ட கார்களில் இப்படியாக இந்த காரில் திருடர்கள் திருடினாலும் கண்டுபிடிக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது ஸ்டிக்கர்களை காரில் ஓட்டி திருடர்களை எச்சரிக்க முயன்றது.

ஆனால் இந்த காலகட்டங்களில் கார் வாங்கிய பலருக்கும் இந்த கருவி மீது நம்பிக்கையில்லை. மேலும் அனைவரும் இந்த கருவியைப் பொருத்தச் செலவு செய்யவும் தயாராகவில்லை. இந்நிலையில் இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்து பிரச்சனையின் ஆழத்தைக் கண்டுபிடித்து அதற்கான ஒரு தீர்வையும் தயார் செய்து விட்டனர். காரில் ஒரு சிறிய சாஃப்ட்வேர் அப்டேட் செய்துவிட்டால் போதும் காரை திருடுவதைத் தடுக்க முடியும் எனத் தீர்வுக்கு வந்தனர்.

தற்போது இரு நிறுவனம் குறிப்பிட்ட பிரச்சனையுடன் தயாரிக்கப்பட்ட கார்களில் இந்த சாஃப்ட்வேர் அப்டேட்டை இலவசமாகச் செய்து கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதன்படி ஹூண்டாய் நிறுவனம் 38 லட்சம் கார்களுக்கும், கியா நிறுவனம் 45 லட்சம் கார்களுக்கும் இந்த சாஃப்ட்வேர் அப்டேட்டை செய்து கொடுக்க தயாராகிவிட்டது. இந்த சாஃப்ட்வேரை அப்டேட் செய்வது மூலம் காரின் சாவி பொருத்தும் இடத்தில் சாவி இருந்தால் மட்டுமே இன்ஜின் ஸ்டார்ட் ஆகும் என காரின் அம்சம் மாறிவிடும். முன்பு வயர்லெஸ் கீ அம்சம் காரில் இருந்தது. தற்போது அதை நீக்கப்படுகிறது.

இருநிறுவனம் வரும் ஜூன் மாதத்திற்குள் கார்களுக்கான சாஃப்ட்வேர் அப்டேட் செய்யும் பணியை முடிக்க முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 2017-2020 வரை தயாரான 10 லட்சம் எலென்ட்ரா கார்களுக்கும் 2015-2019 வரை தயாரான சோனாட்டா கார்களுக்கும். 2020-21 ம் ஆண்டு தயாரான வென்யூ காருக்கும் இந்த அப்டேட்டை செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. கியா நிறுவனம் அடுத்த சில மாதங்களில் பிரச்சனை உள்ள கார்களில் இதைச் செய்து முடிவு செய்துள்ளது.

2022ம் ஆண்டு பிறகு அமெரிக்காவில் ஸ்டியரிங் வீல் லாக் அம்சம் கார்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் அதன்பின் இந்த பிரச்சனை கார்களுக்கு ஏற்படாது. தற்போது இந்த ஸ்டியரில் வீல் லாக்கை பழைய கார்கள்பெற விரும்பினாலும் பெறலாம். ஹூண்டாய் நிறுவனம் 2021 நவம்பர் மாதத்திற்குப் பிறகுத் தனது கார்களில் இன்ஜின் இம்மொபிலைஸர் ஆப்ஷனை ஒரு ஸ்டாண்டர்டான அம்சமாக மாற்றிவிட்டது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லலாம் வாருங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 15, 2023, 16:00 [IST]
English summary
Hyundai kia plans to upgrade 83 lakh cars after the short video went viral
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+