ஹூண்டாய், கியா கார்களை குறி வைத்துத் திருடும் கார் திருடர்கள்! இதை திருடுறது ரொம்ப ஈஸியா?

ஹூண்டாய் மற்றும் கியா கார்களை சுலபமாகத் திருடலாம் என்ற வீடியோ டிக்டாக்கில் வைரலாகிய நிலையில் அதைத் தடுப்பதற்கான அப்டேட்டை அந்நிறுவனம் வழங்கிய பின்பும் தொடர்ந்து கார் திருட்டு சம்பவம் நடந்த வருவது தெரிய வந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிக்டாக் போன்ற சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ ஒன்று வைரலானது. இதில் தென் கொரியா நாட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஹூண்டாய் மற்றும் கியா கார்களை வெறும் ஸ்ரூ டிரைவர் மற்றும் யூஸ்பி கேபிளை வைத்துத் திருடி விட முடியும் என அதில் கூறப்பட்டிருந்தது. இந்த வீடியோ அமெரிக்கா முழுவதும் வைரலாக பரவியது.

hyundai kia theft

அதன் பின்னர் ஹூண்டாய் மற்றும் கியா கார்களின் திருட்டு அந்நாட்டில் அதிகரிக்கத் துவங்கியது. அதற்கு முன்னரே கார் திருட்டில் ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களின் கார்கள் தான் அதிகம் திருடப்பட்டு வந்தன. இந்த வீடியோ வெளியான பின்பு அதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கத் துவங்கியது. இந்நிலையில் ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்கள் இந்த பிரச்சனையைச் சமாளிக்க முடியாமல் திணறியது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இரு நிறுவனங்களும் சேர்ந்து தங்கள் கார்களுக்கான ஒரு அப்டேட்டை வெளியிட்டனர். அந்த அப்டேட்டை செய்துவிட்டால் இப்படியாக வெறும் ஸ்ரூ டிரைவர் மற்றும் யூஸ்பி கேபிளை வைத்து எளிமையாக எல்லாம் காரை திருடிவிட முடியாது என அறிவித்தனர். இதன்பின்னர் அமெரிக்காவைச் சேர்ந்த ஹூண்டாய் மற்றும் கியா கார்களின் உரிமையாளர்கள் அந்த அப்டேட்டை செய்துள்ளனர்.

hyundai kia theft

இந்த அப்டேட் வெளியாகி தற்போது 3 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்றும் அமெரிக்காவில் ஹூண்டாய், கியா கார்களின் திருட்டு அதிகரித்துக்கொண்டே வருவதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள மின்னபோலீஸ், கிளீவ்லேண்ட், செயிண்ட் லூயிஸ், நியூயார்க், சியாட்டில், அட்லாண்டா, கிராண்ட் ரேப்பிட்ஸ்,மிச்சிகன், ஆகிய மாகாணங்களில் திருட்டு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த ஹூண்டாய், கியா கார்களின் திருட்டு கடந்தாண்டு ஏப்ரல் மாதம் நடந்த திருட்டை விட 18 மடங்கு அதிகரித்துள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. அமெரிக்காவில் மொத்தம் நடக்கும் கார் திருட்டுகளில் ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களின் கார்கள் மட்டும் 60 சதவீதம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

ஹூண்டாய், கியா நிறுவனங்கள் தங்கள் சாஃப்ட்வேர் அப்டேட்டை மிக வேகமாக இன்ஸ்டால் செய்து வருகின்றனர். தற்போது ஒரு நாளுக்கு 6000 கார்களுக்கு சராசரியாக அப்டேட் செய்யும் பணி நடக்கிறது. இதற்காக மெயில், போன் கால், டிஜிட்டல் விளம்பரம், சமூகவலைத்தளங்களில் அந்நிறுவனங்கள் தீவிரமான பிரச்சாரத்தையும் செய்து வருகின்றன.

ஆனால் இந்த வேகம் மிகக் குறைவு எனப் பேசப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் கியா நிறுவனம் இந்த சாஃப்ட்வேர் அப்டேட்டை 45 லட்சம் வாகனங்களுக்குச் செய்ய வேண்டும். இதுவரை வெறும் 2.1 லட்சம் வாகனங்களுக்கு மட்டுமே செய்துள்ளன. அதாவது வெறம் 5 சதவீதம் தான் செய்துள்ளது. ஹூண்டாயை பொருத்தவரை 38 லட்சம் வாகனங்களுக்கு அப்டேட் செய்ய வேண்டும். ஆனால் 2.25 லட்சம் வாகனங்களுக்கு மட்டுமே செய்துள்ளது. இது வெறும் 6 சதவீதம் தான்

திருடப்படும் பெரும்பாலான கார்கள் இந்நிறுவனத்தின் குறைந்த விலை கார்களாகவே இருக்கின்றன. இதுவும் 2011ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டுவரை விற்பனையா கார்கள் தான் குறி வைக்கப்படுகின்றன. குறைந்த விலை கார்களில் தெஃப்ட் இம்மொபிலைஸர் கருவி பொருத்தப்படவில்லை. இந்த இம்மொபிலைஸர் கருவி இருந்தால் இன்ஜின் ஸ்டார்ட் ஆகும் முன்பே ஸ்டியரிங்கில் உள்ள சிப்பும், சாவி போடும் இடத்தில் உள்ள சிப்பும் சிங்க் ஆகும். அது ஆகவில்லை என்றால் கார் ஸ்டார்ட் ஆகாது.

ஆனால் இந்த கருவி இல்லாத கார்களில் ஸ்டார்ட் ஆகிறது. இந்த பாதுகாப்பு குறைபாடு உள்ள விஷயத்தைத் தான் திருடர்கள் பயன்படுத்தி காரை திருடி வருகின்றனர். 2015ம் ஆண்டிற்குப் பிறகு விற்பனையான 26 சதவீத கார்களில் இம்மொபிலைஸர் இருக்கிறது. இந்நிலையில் ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த பாதுகாப்பு குறைபாடு உள்ள 15 சதவீத கார்களில் இந்த சாஃப்ட்வேர் அப்டேட்டை செய்ய முடியாத நிலை உள்ளது.

இப்படியான கார்களுக்கு வெளிமார்கெட்டில் விற்பனையாகும் ஆண்டி தெஃப்ட் கருவிகளைப் பொருத்திக்கொள்ள இந்நிறுவனமே பணம் வழங்குவதாக முடிவு செய்துள்ளது. இப்படியாகத் திருடப்படும் கார்கள் அமெரிக்காவில் சிறுவர்களுக்கு விற்கப்படுகிறது என்றும், அவர்கள் சட்ட விரோதமாக இந்த கார்களை பயன்படுத்தி வருகின்றனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாதுகாப்பு குறைபாடு காரணமாக கார் திருட்டு நடப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத விஷயம் இதை தடுக்க சாஃப்ட்வேர் அப்டேட்டை மிக விரைவாக செய்ய வேண்டிய கட்டாயத்தில் கியா மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் இருக்கிறது. விரைவில் இதை வேகப்படுத்தினால் மட்டுமே திருட்டை பெரிய அளவில் தடுக்க முடியும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 10, 2023, 9:58 [IST]
English summary
Hyundai kia theft keep rising what happen to software update
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+