விலை இவ்வளவு கம்மி தானா! ஆரா ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகப்படுத்திய ஹூண்டாய்!

ஹூண்டாய் நிறுவனத்தின் ஆரா கார் இந்தியாவில் மிக முக்கியமான கார், செடான் செக்மெண்டில் அதிகமான மக்களைக் கவர்ந்த கார்களில் இந்த காரும் ஒன்று. இந்த காரின் அப்டேட் வெர்ஷனாக 2023 ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட் காரை இந்தியாவில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

ஹூண்டாய் நிறுவனம் அப்டேட் செய்துள்ள இந்த காம்பேக்ட் செடான் காராக ஆரா காரில் மொத்தம் 30 பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறது. இது இந்த செக்கமெண்டிலேயே இவ்வளவு அம்சங்களைக் கொண்ட முதல் காராகும். இதன் ஸ்டாண்டர்டு வேரியன்டிலேயே 4 ஏர்பேக்குகள் வருகிறது. டிரைவர், பயணிகள் மற்றும் 2 சைடு ஏர்பேக் என மொத்தம் 4 ஏர் பேக் வந்துவிடுகிறது. ஆப்ஷனாக 6 ஏர்பேக் வைத்துக்கொள்ளும் ஆப்ஷனும் உள்ளது.

விலை இவ்வளவு கம்மி தானா! ஆரா ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகப்படுத்திய ஹூண்டாய்!

வெளிப்புறத்தைப் பொருத்தவரை முன்புறம் கருப்பு நிறத்தில் கிரில் வழங்கப்பட்டுள்ளது. இது போக பம்பருடன் சேர்ந்து வடிவமைக்கப்பட்ட புதிய எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளன. மற்ற முக்கிய அப்டேட்டாக இந்த காரில் 15 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இது போக காரின் கதவு ஹேண்டில்களில் க்ரோம் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரின் பின்புற டிசைனில் க்ரோம் கார்னிஷ் செய்யப்பட்டுள்ளது. இது போக விங் ஸ்பாய்லர்களும் வழங்கப்பட்டுள்ளது.

காரின் அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை அதே 3995 மிமீ நீளம், 1680 மிமீ அகலம், 1520 மிமீ உயரம் மற்றும் 2450 மிமீ வீல் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் பின்புற சீட் ஆரா பிராண்டிங் உடனான ஃபேப்ரிக் டிசைன் உடன் வருகிறது. இதுபோக கிளாஸி பிளாக் இன்செடர்ட்ஸ், லெதர் வேர்ப்டு ஸ்டிரிங் வீல்,க்ரோம் ஃபினிஷ்டு கியர் நாப், பார்க்கிங் லெவல் டிப், இன்னர் டோர் ஹேண்டில்களுக்கான மெட்டல் ஃபினிஷ், ஆகியன உள்ளன.

இந்த காரின் பாதுகாப்பு அம்சங்களாக இஎஸ்சி (எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல்), விஎஸ்எமு் (வெஹிகில் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட்), ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல், ஆகியன ஸ்டாண்டர்டு ஏஎம்டி வேரியன்ட்களில் வருகிறது. மேனுவல் வேரியன்டில் ஒரு ஆப்ஷனாக டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஆட்டோமெட்டிக் ஹெட்லைட்கள், பர்க்லர் அலாரம் ஆகியன ஒரு ஆப்ஷனாக வருகிறது.

இந்த போக இந்த காரில் 3.5 இன்ச் எம்ஐடியுடன் கூடிய கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இது போக டைப் சி சார்ஜர் மற்றும் ஃபூட்வெல் லைட்டிங் ஆகிய இந்த காரில் புதிய அப்டேட்களில் இடம் பெற்றுள்ளது. இதுபோக வயர் லெஸ் போன் சார்ஜர், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வாய்ஸ் ரெககனேஷன், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, எலெக்ட்ரிக்கலி அட்ஜெஸ்டபுள், ஃபோல்டபுள் ஓஆர்விஎம், ஸ்மார்ட் கீ, புஷ் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் பட்டன் ஆகியன இந்த காரில் இடம் பெறவுள்ளது.

இந்த அப்டேட்டில் இன்ஜின் மற்றும் பெர்ஃபாமென்ஸில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. இந்த காரில் 1.2 லிட்டர் 4 சிலிண்டர் கப்பா பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது பிஎஸ்6ஆர்டிஇ கட்டுப்பாடு மற்றும் இ20 ஃப்யூயல் ரெடி இன்ஜினாக இருக்கிறது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏடிஎம்டி கியர் பாக்ஸ்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி வேரியன்டும் இருக்கிறது. சிஎன்ஜி வேரியன்ட் மேனுவல் கியர். உடன் மட்டும் தான் இருக்கிறது.

இந்த நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜின் 83 பிஎஸ் பவரை 6000 ஆர்பிஎம்மிலும், 113.8 என்எம் டார்க் திறனை 4000 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்துகிறது. சிஎன்ஜி வேரியன்டில் 6000 ஆர்பிஎம்மில் 69 பிஎஸ் பவரையும், 4000 ஆர்பிஎம்மில் 95.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

இந்த காரின் முன்பக்கம் மெக்பெர்சன் ஸ்டூட் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் கப்புள்டு டோரிசன் பீம் ஆக்ஸில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் கலரை பொருத்தவரை அதே 6 கலர் ஆப்ஷன்கள் தான் உள்ளது. போலார் ஒயிட், டைட்டன் க்ரே, டைஃப்பூன் சில்வர், ஸ்டாரி நைட், டியல் ப்ளூ மற்றும் ஃபிபெர்ரி ரெட் ஆகிய நிறங்களில் வழங்கப்பட்டுள்ளது. இந்த காருக்கு 3 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கி.மீ வரைவாரண்டி வழங்கப்பட்டுள்ளது. இது 7 ஆண்டுகள் வரை நீட்டித்துக்கொள்ள முடியும்.

இந்த காரின் விலையைப் பொருத்தவரை ரூ6.29 லட்சம் முதல் ரூ8.87 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

Most Read Articles
English summary
Hyundai Launched 2023 Aura Facelift car in India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X