ஹூண்டாய் க்ரெட்டா, அல்கஸாரில் அட்வென்ச்சர் எடிசன்கள்! காரோட சைஸ் பெருசா இருந்தாலும், தைரியமா எடுத்து செல்லலாம்

ஹூண்டாய் மோட்டார்ஸ் (Hyundai Motors) நிறுவனம் அதன் கிரெட்டா மற்றும் அல்கஸார் கார்களில் புதிய 'அட்வென்ச்சர் எடிசன்' வேரியண்ட்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் ஹூண்டாய் கார்களை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிக பிரபலமான கார் கிரெட்டா ஆகும். இதன் 7 இருக்கை வெர்சனாக அல்கஸார் விற்பனை செய்யப்படுகிறது. இவை இரண்டிலும் புதியதாக அட்வென்ச்சர் எடிசன்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. பெயருக்கேற்ப இந்த புதிய அட்வென்ச்சர் எடிசன்கள் அட்வென்ச்சர் பயணங்களுக்கு ஏற்றவையாக வடிவமைக்கப்பட்டு உள்ளன.

hyundai creta & alcazer adventure editions

இதற்காக க்ரெட்டா அட்வென்ச்சர் மற்றும் அல்கஸார் அட்வென்ச்சர் கார்கள் இரண்டிலும் தலா 21 புதிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அறிமுகம் குறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குனர் தருண் கார்க் கூறுகையில், "இந்தியாவில் எஸ்யூவி என்ற வார்த்தைக்கு ஒத்ததாக ஹூண்டாய் மாறிவிட்டது! எங்கள் எஸ்யூவி கார்கள் வரிசை இன்று தொழில்துறையில் மிகவும் பரந்த ஒன்றாக விளங்குகிறது.

மேலும் எக்ஸ்டரின் அறிமுகம் மூலம் எங்களை ஒரு முழு அளவிலான எஸ்யூவி உற்பத்தியாளராக முன்னிறுத்தி உள்ளோம். நாங்கள் எஸ்யூவி வாழ்க்கையை அனைவருக்கும் ஜனநாயகப் படுத்துகிறோம். சாகச மற்றும் அட்வென்ச்சர் பயணங்களை விரும்பும் வாடிக்கையாளர்களின் விரும்பத்திற்கும் அதிகமாக, இன்று எங்கள் எஸ்யூவி கார்கள் அவர்களின் வாழ்க்கை முறை இலக்குகளை அதிகப்படுத்துக்கின்றன.

hyundai creta & alcazer adventure editions

வாடிக்கையாளர்களின் இந்த விருப்பங்களை உருவகப்படுத்துவதற்கான முயற்சியானது எங்களை அட்வென்ச்சர் பதிப்பை உருவாக்குவதற்கு வழிவகுத்தது. இது எங்களது எஸ்யூவி கார்களின் எந்தவொரு சாலையிலும் இயங்கக்கூடிய டி.என்.ஏ-வை அதிகப்படுத்துக்கிறது. இப்போது, எங்கள் மிகவும் விரும்பப்படும் எஸ்யூவிகளான கிரெட்டா மற்றும் அல்கஸாருக்கான இந்த சிறப்பு பதிப்பை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.

முரட்டுத்தனமான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ஹூண்டாய் கிரெட்டா மற்றும் அல்கஸார் கார்கள் புதிய ரேஞ்சர் காக்கி நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன. இதற்கேற்ப காரின் உட்பக்க கேபின் முற்றிலும் கருப்பு நிறத்திலும், இளம் பச்சை நிறத்தில் ஹைலைட்களுடனும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இவை மட்டுமின்றி, அட்வென்ச்சர் வெர்சன்கள் என்பதை வெளிக்காட்டும் விதமாக சில லோகோக்கள் வழங்கப்பட்டுள்ளன.

hyundai creta & alcazer adventure editions

புதியதாக வழங்கப்பட்டுள்ள 21 வசதிகளாக, இரட்டை கேமரா உடன் டேஷ்கேம், ரக்டு டோர் கிளாடிங், முப்பரிமாண டிசைனில் அட்வென்ச்சர் தரைப்பாய்கள், ஃபெண்டரில் அட்வென்ச்சர் முத்திரை, ஸ்போர்டியான மெடல் பெடல்கள், ஹூண்டாய் லோகோ உடன் கருப்பு நிறத்தில் முன்பக்க கிரில், பின்பக்கத்தில் டார்க் க்ரோம் உடன் ஹூண்டாய் லோகோ மற்றும் டார்க் க்ரோமில் கிரெட்டா & அல்கஸார் எழுத்துகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இவை மட்டுமின்றி, பிளாக் ஸ்கிட் பிளேட் & கருப்பு சைடு சில், கருப்பு ரூஃப் ரெயில்கள் & சுறா-துடுப்பு வடிவில் ஆண்டென்னா, கருப்பு நிற ஃபாக் லேம்ப் கார்னிஷ், கருப்பு நிறத்தில் ORVM, பாடி கலரில் டோர் ஹேண்டில் & பிளாக் சி-பில்லர் கார்னிஷ், பிளாக் டெயில்கேட் கார்னிஷ், கருப்பு நிறத்தில் அலாய் சக்கரங்கள் போன்றவையும் இடம்பெற்றுள்ளன. ஹூண்டாய் கிரெட்டா காரை அட்வென்ச்சர் எடிசனில் 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே வாங்க முடியும்.

hyundai creta & alcazer adventure editions

புதிய கிரெட்டா அட்வென்ச்சர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.15.17 லட்சம் மற்றும் ரூ.17,89,400 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஹூண்டாய் அல்கஸாரில் அட்வென்ச்சர் எடிசன்கள் 1.5 லிட்டர் டர்போ மற்றும் 1.5 நேச்சுரலி-அஸ்பிரேட்டட் என இரு விதமான பெட்ரோல் என்ஜின் தேர்வுகளில் கிடைக்கும். இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.19,03,600-இல் இருந்து ரூ.21,23,500 வரையில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: சந்தையில் பிரபலமான கார்களாக இருப்பினும், விற்பனையை அதிகரிக்க இவ்வாறான புது புது அப்டேட்கள் அவசியமாகிறது. இது, ஹூண்டாய் மோட்டார்ஸ் போன்ற முன்னணி கார் நிறுவனத்துக்கு தெரியாமலா இருக்கப் போகிறது? இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களை விற்பனை செய்வதில் முன்னிலை வகிக்கும் ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து இவ்வாறு பல்வேறு ஸ்பெஷல் எடிசன்கள் கடந்த காலங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, August 7, 2023, 19:03 [IST]
English summary
Hyundai launches creta alcazer adventure editions
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X