ஹூண்டாய் கார்கள் எல்லாம் இது 5 ஸ்டார் ரேட்டிங் தான் வாங்கப்போகுது! அப்படி என்ன பண்ணபோறாங்க தெரியுமா?
ஹூண்டாய் நிறுவனம் தனது அனைத்து கார்களிலும் 6 ஏர்பேக்கை பொருத்துவதை கட்டாயமாக்க முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின் கீழ் இந்த நடவடிக்கையை ஹூண்டாய் நிறுவனம் எடுத்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
தென் கொரிய நிறுவனமான ஹுண்டாய் இந்தியாவில் நீண்ட ஆண்டுகளாக வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் காரர்களுக்கு மக்கள் மீது மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. அதனால் தான் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் இரண்டாவது நிறுவனமாக நிறுவனம் இருக்கிறது. தொடர்ந்து ஹுண்டாய் காரர்களுக்கு மார்க்கெட்டில் நல்ல மவுசு இருந்து வருகிறது.

மத்திய அரசு சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் படி இந்திய வாகன தயாரிப்பு நிறுவனங்களிடம் இந்தியாவில் விற்பனை செய்யும் கார்களில் 6 ஏர் பேக்குகளை கட்டாயமாக பொருத்த வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளது. இதற்கு கால அவகாசமும் வழங்கியுள்ளது இந்நிலையில் இதற்கு ஒத்துப் போகும் வகையில் ஹுண்டாய் நிறுவனம் தனது அனைத்து கார்களிலும் 6 ஏர் பேக்குகளை கட்டாயம் ஆக்கியுள்ளது.
இதன்படி வெறும் 6 ஏர் பேக்குகள் மட்டுமல்லாமல் அந்நிறுவனத்தின் அனைத்து கார்களிலும் இஎஸ்சி, ஹில்அசிஸ்ட், 3 பாயிண்ட் சீட் பெல்ட் மற்றும் சீட்டு பெல்ட் ரிமைண்டர் மற்றும் வெஹிகிள் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட் ஆகிய அம்சங்களை கட்டாயமாக்கி உள்ளது. சமீபத்தில் இந்நிறுவனம் i20 ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகப்படுத்தியது. அதன் பேஸ் வேரியன்ட் முதல் 6 ஏர் பேக்குகள் இருப்பதாக அறிவித்திருந்தது.

ஹுண்டாயின் புதிய காரான வெர்னா கார் சமீபத்தில் குளோபல் என்கேப் சோதனையின் போது 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றது. மேலும் ஹுண்டாய் நிறுவனம் தனது எக்ஸ்டர் காரும் 5 ஸ்டார் ரேட்டிங் பெரும் என தெரிவித்துள்ளது. விரைவில் இந்த கார் பாரத் என்கேப் சோதனையில் உட்படுத்தப்பட உள்ளது.
வென்யூ காரிலும் 6 ஏர் பேக்குகள் உள்ளன. மேலும் இந்த காரில் ஆக்டிவ் பாதுகாப்பு அம்சங்களான அடாஸ் சிஸ்டம், கோலிஷன் வார்னிங், முன்பக்க கோலிஷன் அவாய்டென்ஸ் சிஸ்டம், லேன் டிபார்ச்சர் வார்னிங் லேன்ட் கீப் அசிஸ்ட், லேன் பாலோயிங் அசிஸ்ட், டிரைவர் அட்டென்ஷன் மானிட்டரிங், ஹை-பிம் அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

ஹுண்டாய் நிறுவனத்திடம் உள்ள இந்த வென்யூ கார் தான் சப்-4 மீட்டர் எஸ்யூவி செக்மெண்டிலேயே அடாஸ் ஆக்டிவ் சேஃப்டி சூட்டை கொண்ட காராக இருக்கிறது. ஹுண்டாயின் கிரெட்டா காரும் இந்த அம்சத்தை கொண்டுள்ளது. ஆனால் அந்த செக்மெண்டில் கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் இதே அம்சங்கள் ஏற்கனவே உள்ளன.
ஹூண்டாய் ஐ20 நியோஸ் மற்றும் ஆரா ஆகிய கார்களை பொறுத்தவரை 1.2 லிட்டர் கப்பா 4 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 82 பிஎச்பி பவரையும் 114 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இன்ஜினில் சிஎன்ஜி ஆப்ஷனும் இணைக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் வென்யூ காரை பொருத்தவரை 1.2 லிட்டர் கப்பா இன்ஜின் மற்றும் 1.0 லிட்டர் ஜிடிஏ 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன. இந்த இன்ஜின் 118 பிஎச்பி பவரையும் 172 என்னும் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இது 6 ஸ்பீட் மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த காரில் டீசல் இன்ஜின் ஆப்ஷனும் இருக்கிறது. இதில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. டர்போ டீசல் இன்ஜினை பொறுத்தவரை 114 பிஎச்பி பவரையும் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. மேலும் இந்த டீசல் இன்ஜின் கொண்ட காரில் 6 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் மட்டுமே இருக்கும். ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் கிடையாது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பாதுகாப்பான கார்களுக்கு அதிக மவுசு பெருகி வரும் நிலையில் ஹுண்டாய் நிறுவனம் தனது கார்களில் பாதுகாப்பு அம்சங்களை சேர்த்துள்ளது அந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய பெயரை பெற்று தரும். தற்போது டாடா நிறுவனம் தான் பாதுகாப்பான கார்களை விற்பனை செய்து வருகிறது என்ற பெயரை விரைவில் ஹூண்டாய் நிறுவனமும் பெறும்.


Click it and Unblock the Notifications









