இவ்ளோ கம்மியான விலையில் ஹூண்டாய் காரா! இனி ரோட்ல டூவீலர் மாதிரி இந்த கார் ஓடப்போகுது! மாருதி, டாடாலாம் காலி!

இந்திய சந்தையில் கடந்த சில வருடங்களாக எஸ்யூவி (SUV) ரக கார்களின் விற்பனை பிரம்மிக்க வைக்கும் வகையில் உயர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக அளவில் சிறிய மினி எஸ்யூவி (Mini SUV) ரக கார்களுக்கு வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை வாரி வழங்கி வருகின்றனர்.

இந்திய சந்தையில் டாடா பன்ச் (Tata Punch) மினி எஸ்யூவி கார் அடைந்துள்ள வெற்றியே அதற்கு சாட்சி. எனவே அனைத்து கார் நிறுவனங்களின் கவனமும் தற்போது இந்தியாவின் மினி எஸ்யூவி செக்மெண்ட் மீது விழுந்துள்ளது. இதில் ஹூண்டாய் (Hyundai) நிறுவனமும் ஒன்றாகும்.

Hyundai Mini SUV Teaser

ஹூண்டாய் நிறுவனம் புத்தம் புதிய மினி எஸ்யூவி கார் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு தற்போது முழு வீச்சில் தயாராகி வருகிறது. ஹூண்டாய் ஏஐ3 (Hyundai Ai3) என்ற குறியீட்டு பெயரில் இந்த கார் அழைக்கப்பட்டு வருகிறது. ஆனால் வேறு ஒரு பெயரில்தான், இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த காரின் உற்பத்தி பணிகள் வரும் ஜூலை மாதம் தொடங்கப்படலாம் எனவும், அதை தொடர்ந்து வரும் ஆகஸ்ட் மாதம் இந்த கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Hyundai Casper Front

இதற்கெல்லாம் முன்னதாக ஹூண்டாய் ஏஐ3 மினி எஸ்யூவி காரின் டீசர் புகைப்படம் (Teaser Image) தற்போது முதல் முறையாக வெளியாகியுள்ளது. 'Coming soon to take you places' என்ற ஆங்கில கேப்ஷனுடன், இந்த டீசர் புகைப்படத்தை ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்திய சந்தையில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios) கார், கே1 (K1) பிளாட்பார்ம் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான், ஹூண்டாய் ஏஐ3 மினி எஸ்யூவி காரும் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இது எஸ்ஏ (SA) பிளாட்பார்ம்மின் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். முந்தைய மாடலை காட்டிலும் இது 63 சதவீதம் திடமானது என ஹூண்டாய் நிறுவனம் தெரிவிக்கிறது. அதே நேரத்தில் டிசைனை (Design) பொறுத்தவரையில், ஹூண்டாய் காஸ்பர் (Hyundai Casper) காரின் ஒரு சில அம்சங்களை, ஹூண்டாய் ஏஐ3 காரிலும் காண முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் காஸ்பர் காரானது, ஹூண்டாய் நிறுவனத்தின் தாய் மண்ணான தென் கொரியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. செயல்திறனை பொறுத்தவரையில், ஹூண்டாய் ஏஐ3 மினி எஸ்யூவி காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) ஆப்ஷன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

அதிகபட்சமாக 83 பிஹெச்பி பவர் மற்றும் 114 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம். இந்த இன்ஜினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என 2 வகையான கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக ஹூண்டாய் நிறுவனத்தின் கார்களில் வசதிகளின் (Features) பட்டியல் அனுமார் வால் போல நீளும். இந்த வகையில் ஹூண்டாய் ஏஐ3 காரிலும் ஏராளமான வசதிகள் எதிர்பார்க்கப்படுகிறது. இதில், சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கியமானவை.

இதுதவிர ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கனெக்டட் கார் தொழில்நுட்பம் ஆகிய வசதிகளும் ஹூண்டாய் ஏஐ3 மினி எஸ்யூவி காரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் இருந்தாலும் கூட, ஹூண்டாய் ஏஐ3 மினி எஸ்யூவி காரின் விலை (Price) மிகவும் குறைவாகதான் இருக்கும்.

அனேகமாக ஹூண்டாய் ஏஐ3 மினி எஸ்யூவி காரின் ஆரம்ப விலை வெறும் 5.50 லட்ச ரூபாய் அல்லது 6 லட்ச ரூபாய் என்ற அளவில்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஹூண்டாய் ஏஐ3 மினி எஸ்யூவி கார் விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக தென்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

ஹூண்டாய் ஏஐ3 மின எஸ்யூவி காரின் இந்திய வருகை, டாடா பன்ச் காருக்கு மட்டுமல்லாது, மாருதி சுஸுகி இக்னிஸ் (Maruti Suzuki Ignis) மற்றும் சிட்ரோன் சி3 (Citroen C3) ஆகிய கார்களுக்கும் மிகவும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 5, 2023, 17:04 [IST]
English summary
Hyundai mini suv teaser tata punch rival expected price features design engine
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+