நம்ம ஊர் டாடாவுக்கு தண்ணி காட்டும் ஹூண்டாய்!! நவம்பரில் கார் சேல்ஸ் நம்பர் எங்கேயோ போய்டுச்சு!
ஹூண்டாய் மோட்டார் இந்தியா (Hyundai Motor India) நிறுவனம் கடந்த 2023 நவம்பர் மாதத்தில் மொத்தம் 65,801 கார்களை விற்பனை செய்து அசத்தி உள்ளது. இதில் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் கார்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஹூண்டாய் கார்களும் அடங்குகின்றன.
ஹூண்டாய் மோட்டார், இந்தியாவின் கார்கள் விற்பனையில் முன்னிலையில் இருக்கும் நிறுவனங்களுள் ஒன்று. மாருதி சுஸுகிக்கு அடுத்து இந்திய மார்க்கெட்டில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனம். டாடா மோட்டார்ஸுக்கும், இந்த தென்கொரிய கார் நிறுவனத்திற்கும் இடையே 2வது இடத்திற்கான போட்டி இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே இருந்து வருகிறது.

கடந்த 2022ஆம் ஆண்டில் ஒரு சில மாதங்களில் ஹூண்டாயை உள்நாட்டு விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முந்தி இருந்தது. ஆனால், அதன்பின் ஹூண்டாயின் கையே ஓங்கியுள்ளது. கடந்த 2023 நவம்பர் மாதத்தில் மொத்தம் 65,801 கார்களை ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், இந்த 65,801 கார்களில் உள்நாட்டு மார்கெட்டில் விற்பனை செய்யப்பட்டவை மட்டுமின்றி, வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவையும் அடங்குகின்றன.
அதுவே, 2022 நவம்பர் மாதத்தில் 64,003 கார்களை மட்டுமே ஒட்டுமொத்தமாக ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்து இருந்தது. இந்த வகையில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை ஆனது 2.80% கடந்த நவம்பரில் அதிகரித்துள்ளது. மொத்த 65,801 கார்களில் உள்நாட்டில், அதாவது இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டவை மட்டும் 49,451 ஆகும்.

ஆனால், இதனை காட்டிலும் 3.01% குறைவாக 2022 நவம்பரில் 48,002 கார்களை மட்டுமே இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஹூண்டாய் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி, வெளிநாட்டு ஏற்றுமதியும் 2022 நவம்பரை காட்டிலும் கடந்த நவம்பரில் 2.18% அதிகரித்து உள்ளது.
ஏனெனில், 2022 நவம்பர் மாதத்தில் 16,001 கார்களை மட்டுமே ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருந்தது. ஆனால் கடந்த நவம்பர் மாதத்தில் 349 கார்கள் அதிகமாக 16,350 ஹூண்டாய் கார்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.

நவம்பர் மாத விற்பனை குறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் சிஓஓ தருண் கார்க் கருத்து தெரிவிக்கையில், "2023 நவம்பரில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா 65,801 யூனிட் கார்களின் மொத்த விற்பனையை பதிவு செய்துள்ளது. வாடிக்கையாளர்களின் ஊக்கமளிக்கும் வரவேற்பு பண்டிகை காலத்த்தில் அதிக சில்லறை விற்பனைக்கு வழிவகுத்தது.
எங்கள் டீலர் நெட்வொர்க் பங்கு 3 வாரங்களுக்கு மிகவும் சிறப்பான அளவில் உள்ளது. ஹூண்டாய் குடும்பமாக, நாங்கள் மிகவும் வெற்றிக்கரமான 2023ஆம் காலண்டர் ஆண்டை சிறப்பாக முடிக்கவும், 2024ஆம் காலண்டர் ஆண்டை நேர்மறையான குறிப்புகளுடன் வரவேற்கவும் நன்கு தயாராக இருக்கிறோம். ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் எஸ்யூவி கார்கள் வரிசை தொடர்ந்து வலுவான ஆதிக்கத்தை வெளிப்படுத்துகிறது" என்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தருண் கார்க் கூறுவதை போல், கடந்த நவம்பர் மாதத்தில் வந்த தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தை ஹூண்டாய் நிறுவனம் நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளது. அதற்கேற்ப இந்த 2023ஆம் வருடத்தில் தரமான தயாரிப்புகளை ஹூண்டாய் களமிறக்கி உள்ளது. குறிப்பாக, ஹூண்டாய் எக்ஸ்டர் காருக்கான முன்பதிவுகள் 1 இலட்சத்தை கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications









