ஹூண்டாய் எடுத்த அதிரடி முடிவால் கலங்கிப் போய் நிற்கும் டாடா! இனி எடுத்த பெயர் எல்லாம் ஹூண்டாய்க்கு போயிடுமே
ஹூண்டாய் நிறுவனம் தனது கார்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தியுள்ளது. போட்டியாளர்களைச் சமாளிக்கவும், அரசு விதிமுறைகளைப் பின்பற்றவும் இந்த அப்டேட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
ஹூண்டாய் நிறுவனம் தனது கார்களின் பாதுகாப்பை அதிகப்படுத்துவதில் முதல் கட்டமாக இந்நிறுவனத்தின் அனைத்து கார்களிலும் 3 பாயிண்ட் சீட் பெல்ட் மற்றும் அனைத்து சீட்களுக்குமான சீட் பெல்ட் ரிமைண்டர்களை கொண்டு வந்துள்ளது.மத்திய அரசின் அறிவுரைக்குப் பின் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

எலெக்ட்ரானிக் ஸ்பிலிட்டி கண்ட்ரோல், வெஹிகில் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல், ஆகிய பாதுகாப்பு அம்சங்களை வென்யூ மற்றும் அதற்கு அதிகமான ரேஞ்ச் கார்களில் ஸ்டாண்ட்டர்டாக கொண்டு வந்துள்ளது. இதில் ஐ20 மற்றும் வென்யூ என் லைன் கார்களும் அடங்கும்.
இது மட்டுமல்ல ஹூண்டாய் கிரெட்டா, அயானிக் 5 மற்றும் அல்காஸர் ஆகிய கார்களில் 6 ஏர்பேக்குகள் வசதியை ஸ்டாண்டர்டாக வழங்க முடிவு செய்துள்ளது. தற்போது டுஸான் மற்றும் கோனா எலெக்ட்ரிக் ஆகிய கார்களில் மட்டும் தான் 6 ஏர்பேக் வழங்கப்பட்டு வந்தது. வென்யூ காரில் 4 ஏர்பேக் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. தற்போது இது மேம்படுத்தப்பட்டுள்ளது.

இது போக கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் ஆரா ஆகிய கார்களில் 4 ஏர்பேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு கார்களின் செக்மெண்டில் 4 ஏர் பேக் வழங்குவது இது தான் முதன் முறை. இது போக ஹூண்டாய் கிரெட்டா மற்றும் அல்காஹர் ஆகிய கார்களிலும் ஆக்டிவ் மற்றும் பாசிவ் பாதுகாப்பு அம்சங்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. எலெகட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், வெஹிகில் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ரியர் டிஸ்க் பிரேக் உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஹூண்டாய் நிறுவனம் தனது வெர்னா, அயானிக் 5 மற்றும் டுஸான் ஆகிய கார்களில் அட்வான்ஸ்டு டிரைவர் ஏய்டு சிஸ்டமை இன்ஸ்டால் செய்துள்ளது. கிரெட்டா, அல்காஸர்,ஆகிய கார்களில் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் வரும் போது அதிலும் அடாஸ் தொழிற்நுட்பம் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கூறும்போது : "வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு தான் எங்களது முதன்மையான விஷயம், தற்போது எங்கள் தயாரிப்புகளில் பாதுகாப்பு அம்சங்களை ஸ்டாண்டர்டாக்க முயன்று வருகிறோம். இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி எங்களது தயாரிப்புகளை எல்லாம் அப்டேட் செய்து 3 பாயிண்ட் சீட்பெல்ட் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர்களை ஸ்டாண்டர்ஆ ஆக்கியுள்ளோம். இது வாடிக்கையாளர்கள் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய வழங்கும்"எனக் கூறினார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு வாகனத்திற்குப் பாதுகாப்பும் அம்சங்கள் என்பது மிகவும் முக்கியமான ஒன்று, அது உயிரையே பாதுகாக்கும் விஷயம். இதனால் கார்களில் பாதுகாப்பு அம்சங்களை ஸ்டாண்டர்டாக மாற்றுவது முக்கியம். 6 ஏர்பேக், ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் எல்லாம் எல்லா வாகனங்களிலும் கட்டாயம் இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









