இது தான் கார் வாங்க சரியான டைம்! இதை கரெக்டா யூஸ் பண்ணா ரூ1 லட்சம் வரை மிச்சமாகும்!
ஹூண்டாய் நிறுவனம் இந்த ஜூலை மாதம் மிகப் பெரிய அளவிலான தள்ளுபடிகளைத் தனது கார்களுக்கு அறிவித்துள்ளது. இதன் மூலம் ஒருவர் சரியாகத் திட்டமிட்டு ஹுண்டாய் நிறுவனத்தின் காரை வாங்கினால் ரூபாய் ஒரு லட்சம் வரை சேமிக்க முடியும். இது எப்படி சாத்தியம்? எந்த காரை வாங்கினால் இவ்வளவு பணம் சேமிக்க முடியும் என்ற விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
ஹூண்டாய் நிறுவனம் இந்த ஜூலை மாதம் தனது விற்பனையை அதிகப்படுத்த பல்வேறு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதன்படி அந்நிறுவனத்தின் ஆறு கார்களுக்கு தள்ளுபடி அறிவித்துள்ளது. கிராண்ட் ஐ10 நியோஸ், ஐ20, ஐ20 என்லைன், ஆரா, அல்கஸார், கோனா இவி ஆகிய கார்களுக்கு இந்த தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தில் சிறப்பாக விற்பனையாகும் கிரெக்டா, வென்யூ வெர்னா,டுஸான் மற்றும் ஐகானிக் 5 ஆகிய கார்களுக்கு இந்த தள்ளுபடி கிடையாது. சரி ஹூண்டாய் நிறுவனத்தின் தள்ளுபடி உள்ள கார்களை வாங்குவது மூலம் எப்படி ரூபாய் ஒரு லட்சம் வரை சேமிக்கலாம் எனக் காணலாம் வாருங்கள்.
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்: இது ஹூண்டாய் நிறுவனத்தின் சிறிய ரக காராகும் இந்த காருக்கு ரூ 38 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ 25000 கேஷ் தள்ளுபடியாகவும் ரூபாய் 10 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியாகவும் ரூ3000 கார்ப்பரேட் தள்ளுபடியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது ஸ்போர்ட்ஸ் மேனுவல் வேரியண்ட் கார்களுக்கான தள்ளுபடி தான். மற்ற கார்களுக்கு தள்ளுபடி விபரங்கள் வேறு மற்ற வேரியன்ட்களுக்கு ரூ33,000 வரை தள்ளுபடியும் ஏஎம்டி கியர் பாக்ஸ் கொண்ட வேரியன்ட்களுக்கு ரூ13000 விலை மதிப்பு கொண்ட பேக்கேஜும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் ஐ20 மற்றும் ஐ20 என்லைன்: ஹூண்டாய் நிறுவனம் ஐ20 மற்றும் ஐ20 என்லைன் ஆகிய மாடல்களுக்கு ஒரே மாதிரியான தள்ளுபடி அறிவித்துள்ளது. அதன்படி இரண்டு மாடல்களுக்கும் ரூபாய் 10,000 வரை கேஸ் தள்ளுபடியும் ரூபாய் 10,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடி இந்த மாதம் வழங்கப்படுகிறது. இது அனைத்து விதமான வேரியன்ட்களுக்கும் இந்த தள்ளுபடி வழங்கப்படும்.

ஹூண்டாய் ஆரா: ஹூண்டாய் நிறுவனம் தனது ஆரா என்ற சப்கான்செப்ட் செடான் காருக்கு ரூ33,000 வரை தள்ளுபடி வழங்கியுள்ளது. அதன்படி இந்த காரின் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வேரியன்ட்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன்படி ரூபாய் 20000 கேஷ் தள்ளுபடியும் ரூபாய் 10 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸூம் ரூபாய் 3000 கார்ப்பரேட் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
ஹூண்டாய் அல்கஸார்: ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்யும் மூன்று வரிசை சீட்டு கொண்ட எஸ்யூவி கார் இதுதான். இந்த கார் அறிமுகமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இந்த காருக்கு எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூபாய் 20,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது ஃபிளாட் தள்ளுபடியாகும்.
ஹூண்டாய் கோனா இவி: இதுதான் ஹுண்டாய் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காராகும் இது இந்த காருக்கு தான். இந்த ஜூலை மாதம் மிகப்பெரிய அளவிலான தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. கோனா எலெக்ட்ரிக் ஏசி காரை வாங்குபவர்களுக்கு ரூபாய் 1 லட்சம் வரை கேஷ் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்த தள்ளுபடி அனைத்து விதமான வேரியன்டுகளுக்கும் பொருந்தும். இந்தியாவிலேயே மிக அதிகமான தள்ளுபடி கொண்ட காராக இது இருக்கிறது. இதனால் மக்களின் பார்வை இந்த கார் பக்கம் இருக்கிறது. ஆனால் ஹூண்டாய் நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் காரான ஐயானிக் 5 காருக்கு எந்த விதமான தள்ளுபடியையும் அந்நிறுவனம் வழங்கவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பண்டிகை காலங்கள் துவங்க உள்ளதால் வரிசையாக வாகனங்களின் விலை குறைக்கப்படும் புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படும் நிகழ்வுகள் நடந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் ஹுண்டாய் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது மிகப்பெரிய அளவிலான தள்ளுபடி ஆகும் இதை மக்கள் நிச்சயம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்


Click it and Unblock the Notifications









