ஹூண்டாய்க்கு ஏற்பட்ட நிலைமையை பாத்தீங்களா? இப்படி நாட்டை விட்டு வெளிய போக முடிவு பண்ணிடுச்சே!

ரஷ்யாவிலிருந்து ஹூண்டாய் நிறுவனம் வெளியேறும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் ரஷ்யாவை விட்டு ஹூண்டாய் நிறுவனம் வேகமாக வெளியேறிவிடும். இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது கடந்தாண்டு போர் தொடுத்தது. இதன் விளைவாக ரஷ்யாமீது பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடையை விதித்தது. இதனால் வெளிநாட்டு நிறுவனங்களால் ரஷ்யாவில் தொடர்ந்து தொழில் செய்ய முடியவில்லை. பல நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் சொத்துக்களை ரஷ்யாவில் உள்ள சிறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்துவிட்டு வெளியேறி வருகிறது.

Hyundai Exit Russia

குறிப்பாக கார் தயாரிப்பாளர்கள் பலர் பல ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களை விட்டுவிட்டு வருகின்றனர். இந்நிலையில் தென்கொரியா நாட்டைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனமும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு இந்நிறுவனம் ரஷ்யாவைவிட்டு வெளியேற முடிவு செய்து அதற்கான பணிகளைச் செய்து வந்தது. இந்நிலையில் ரஷ்யாவிலிருந்து அதிகாரப்பூர்வமாக ஹூண்டாய் வெளியேறும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

ஹூண்டாய் ரஷ்யாவில் உள்ள தனது சொத்துக்களை கஸாக் என்ற நிறுவனத்திற்கு விற்பனை செய்துவிட்டு தற்போது அந்நாட்டிலிருந்து வெளியேறும் முயற்சியில் இருக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் எல்லாம் முடிந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறும் கடைசிக் கட்டத்தில் இருக்கிறது. ரஷ்யாவிலிருந்து ஹூண்டாய் மட்டும் வெளியேறவில்லை.

இதற்கு முன்னோர் ரெனால்ட், சுஸூகி, நிஸான், ஹோண்டா, பென்ஸ், ஃபோக்ஸ்வேகன் உள்ளிட்ட ஏகப்பட்ட நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்து வெளியேறிவிட்டன. ரெனால்ட் நிறுவனத்தின் 100 சதவீத பங்கை அந்நாட்டின் மாஸ்கோ நகர அரசு வாங்கிக்கொண்டது. தற்போது அந்த ஆலையை மாஸ்கோ ஆட்டோமொபைல் ஃபேக்டரி மோஸ்க்விச் என்ற பெயரில் மாற்றியுள்ளது.

தற்போது அந்த ஆலையில் சீனாவில் ஜேஏசி என்ற நிறுவனம் தயாரிக்கும் கார்களை ரீ பேட்ஜ் செய்து ரஷ்யாவிற்காகத் தயாரித்து வருகிறது. ஃபோக்ஸ்வேகன் அந்நாட்டிலிருந்து வெளியேறுவதை அந்நாட்டில் அந்நிறுவனம் கை கோர்த்துள்ள GAZ நிறுவனம் எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. பென்ஸ் நிறுவனம் காமாஸ் என்ற நிறுவனத்தின் தனது முதலீட்டை விற்பனை செய்துள்ளது.

இப்படியாக ரஷ்யாவிலிருந்து பல நிறுவனங்கள் வெளியேறிவரும் நிலையில் சீன நிறுவனங்களான கீல்லி, செல்லி ஆட்டோமொபைல் போன்ற நிறுவனங்கள் ரஷ்யாவில் தன் கார்களை களம் இறக்கி வருகிறது. குறிப்பாக கிரோட் வால் மோட்டார் நிறுவனம் ரஷ்யாவின் 17 சதவீத ஆட்டோமொபைல் துறையை இந்த 2022ம் ஆண்டு தன் வசப்படுத்தியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரஷ்யாவின் உக்ரைன் மீதான தாக்குதல் நடவடிக்கையால் பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை வித்துள்ள நிலையில் ரஷ்யாவை விட்டுப் பல நாடுகள் வெளியே வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இது சீனாவிற்குச் சாதகமாக அமைந்துள்ளது. இந்தியாவிற்கு இதில் எந்த முடிவும் எடுக்காததால் சாதகமும் இல்லை பாதகமும் இல்லை!

More from DriveSpark

Article Published On: Saturday, April 29, 2023, 21:00 [IST]
English summary
Hyundai plans exit russia and sells it plant
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+