50 ஆண்டுகள் பழைய காருக்கு புத்துயிர் கொடுத்த ஹூண்டாய்... அட இப்படி ஒரு கார ஹூண்டாய் எப்போங்க தயாரிச்சுது?..

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் (Hyundai), 50 ஆண்டுகள் பழைய காருக்கு மறு உயிர் வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹூண்டாய் போனி கூபே (Hyundai Pony Coupe) எனும் கான்செப்ட் (Concept) மாடலுக்கே அது புத்துயிரை வழங்கி இருக்கின்றது.

வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் எதிர்கால வாகனங்களை கான்செப்ட் மாடலில் காட்சிப்படுத்துவது வழக்கம். கான்செப்ட் மாடலாக காட்சிப்படுத்தப்படும் அனைத்து வாகனங்களும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என கூறிவிட முடியாது. அந்தவகையில், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் கான்செப்ட் மாடலாக மட்டுமே தயாரிக்கப்பட்ட ஓர் கார் மாடலே போனி கூபே ஆகும்.

Hyundai pony coupe concept side profile

இந்த கவர்ச்சிகரமான காரை அது தயாரிப்பு நிலைக்குக் கொண்டு வரவே இல்லை. அதேவேளையில், நீண்ட ஆண்டுகளாக நிறுவனத்தால் இந்த வாகனம் பராமரிக்கப்பட்டு வந்திருக்கின்றது. இந்நிலையில், தற்போது அந்த காருக்கு புத்துயிரை வழங்கி மீண்டும் வெளியுலகில் ஹூண்டாய் நிறுவனம் காட்சிப்படுத்தி இருக்கின்றது. நிறுவனத்தின் இந்த செயல் ஒட்டுமொத்த வாகன ஆர்வலர்களின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

ஹூண்டாய் நிறுவனம் இந்த கான்செப்ட் மாடலை முதன் முதலில் 1974 ஆம் ஆண்டில் நடைபெற்ற டூரின் மோட்டார் ஷோவிலேயே காட்சிப்படுத்தப்பட்டது. ஜியோர்கெட்டோ ஜியுகியாரோ என்பவர் வாயிலாகவே இந்த கார் தற்போது ரீ-பில்ட் செய்யப்பட்டு உள்ளது. இந்த காரை முன்னதாக வடிவமைத்ததே இவர்தான் என கூறப்படுகின்றது.

Hyundai pony coupe concept top view

போனி கூபே மறுகட்டமைப்பு செய்யப்படும்போது ஒரிஜினல் மெட்டீரியல்களே பயன்படுத்தப்பட்டு உள்ளன. ஆகையால், 1974இல் அந்த கார் காட்சிப்படுத்தப்பட்டபோது எப்படி இருந்ததோ, அதே தோற்றத்திலும், அழகிலும் இப்போதும் போனி கூபே காட்சியளிக்கின்றது. இதனையே இத்தாலியின் லேக் கோமோவில் ஹூண்டாய் நிறுவனம் தற்போது காட்சிப்படுத்தி இருக்கின்றது.

இந்த காட்சிப்படுத்தலின்போது ஜியோர்கெட்டோ ஜியுகியாரோ மற்றும் அவரது மகன் ஃபேப்ரிசியோ கியுகியாரோ ஆகியோரும் உடன் இருந்தனர். இந்த கான்செப்ட் கார் மாடலை தழுவியே ஹூண்டாய் நிறுவனம் சில புதுமுக கார் மாடல்களை தயாரித்து இருக்கின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது. என் விஷன் 74 ஹைட்ரஜன்-ஹைபிரிட் பவர்டு எலெக்ட்ரிக் காரையும் இந்த மாடலை தழுவியே அது உருவாக்கியது.

Hyundai pony coupe concept interior

போனி கூபே காரை ஹூண்டாய் நிறுவனம் அதன் ரீயூனியன் நிகழ்வு மற்றும் இத்தாலியில் நடைபெற்ற கான்கோர்ஸோ டி'எலிகேன்ஸா வில்லாவிலும் காட்சிப்படுத்தியது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த வாகனத்தை உத்வேகமாகக் கொண்டே தற்போது விற்பனையில் இருக்கும் ஐயோனிக் 5 உள்ளிட்ட மின்சார கார்களையும் ஹூண்டாய் தயாரித்திருக்கின்றது.

அன்றைய கால உலக பொருளாதார நிலை காரணமாக போனி கூபே கான்செப்ட் விற்பனைக்குக் கொண்டு வரப்படவில்லை என கூறப்படுகின்றது. அதேவேளையில், போனி கூபே கான்செப்டை பார்க்கையில், அன்றைய கால கட்டத்திலேயே மிக சிறந்த கார் வடிவமைப்பு நுணுக்கத்தைக் கொண்டு ஹூண்டாய் நிறுவனம் இயங்கி இருப்பது தெளிவாக தெரிகின்றது.

Hyundai pony coupe concept

மிகவும் கவர்ச்சிகரமான ஸ்டைல் மற்றும் காற்றை கிழித்துக் கொண்டு செல்லும் தோற்றம் என அசத்தலான ஓர் தயாரிப்பாகவே போனி கூபே காட்சியளிக்கின்றது. மேலும், மேற்கூரை என்கிற ஒன்றே இல்லாத ஸ்டைலில் இக்காரை ஹூண்டாய் வடிவமைத்திருக்கின்றது. பெரும்பாலும் கண்ணாடிகளை அதன் மேற்கூரைக் கொண்டிருக்கின்றது. ஓர் சிறிய உலோக துண்டே மேற்கூரையாக காட்சியளிக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனம் இப்படி ஒரு கான்செப்ட் காரை இந்த உலகில் காட்சிப்படுத்தியது என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாகவே இருந்து வந்தது. இந்த நிலையிலேயே அது புத்துயிரை வழங்கி அந்த காரை காட்சிப்படுத்தி இருக்கின்றது. இப்போதும் விற்பனைக்கு வந்தால் அது நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த அளவிற்கு அசத்தலான ஸ்டைலில் போனி கூபே கான்செப்ட் காட்சியளிக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, May 20, 2023, 8:35 [IST]
English summary
Hyundai pony coupe concept gets life after 50 years
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X