ஹூண்டாய் காரின் விலை அதிரடியாக குறைப்பு.. யாருமே செய்ய முன் வராத காரியம்.. வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி!

ஹூண்டாய் நிறுவனம் அதன் ஐ20 ஸ்போர்ட்ஸ் வேரியண்டின் விலையை அதிரடியாக குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விலை குறைப்பு நடவடிக்கையை தொடர்ந்து புதிய தேர்வு ஒன்றையும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது, ஹூண்டாய். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

வாகன கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்து வருவதைக் காரணம் காட்டி வாகன உற்பத்தியாளர்கள் பலர் தங்களின் தயாரிப்புகளின் விலையை உயர்த்திய வண்ணம் இருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலில், பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் அதன் குறிப்பிட்ட மாடல்களின் விலையை குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹூண்டாய்

நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஐ20-ம் ஒன்று இதன் ஸ்போர்ட்ஸ் எனும் வேரியண்டின் விலையையே ஹூண்டாய் குறைத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இதன் விலையை மட்டும் ஹூண்டாய் குறைக்கலைங்க தனது மற்றுமொரு புகழ்பெற்ற ஹேட்ச்பேக் ரக கார் மாடலான கிராண்ட் ஐ10 நியாஸ்-இன் ஸ்போர்ட்ஸ் வேரியண்டின் விலையையும் சேர்த்தே குறைத்திருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிறுவனத்தின் இந்த நடவடிக்கை மக்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. ரூ. 3,500 வரை ஹூண்டாய் இரு கார் மாடல்களின் விலையிலும் குறைப்பை செய்திருக்கின்றது. அதேவேளையில் விலை குறைப்பிற்காக ஹூண்டாய் நிறுவனம் இந்த இரு மாடல்களின் ஸ்போர்ட்ஸ் ட்ரிம்மிலும் ஓர் அதிர்ச்சிகரமான காரியத்தை செய்திருக்கின்றது.

ஓர் குறிப்பிட்ட அம்சத்தை அது நீக்கி இருக்கின்றது. இதனைத் தொடர்ந்தே இரு மாடல்களின் ஸ்போர்ட்ஸ் ட்ரிம்மின் விலையும் குறைக்கப்பட்டு உள்ளது. விலை குறைப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து ஓர் புதிய தேர்வை கிராண்ட் ஐ10 நியாஸ் மாடலில் ஹூண்டாய் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது

புதியதாக ஸ்போர்ட்ஸ் எக்சிகியூட்டிவ் எனும் வேரியண்டையே கிராண்ட் ஐ10 நியாஸில் ஹீண்டாய் அறிமுகம் செய்துள்ளது. மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆப்ஷனில் இந்த தேர்வு கிடைக்கும். கிராண்ட் ஐ10 பெட்ரோல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட ஸ்போர்ட்ஸ் எக்சிகியூட்டிவ் தேர்விற்கு ரூ. 7,16,400ம், இதே மாடலின் பெட்ரோல் ஏஎம்டி ஆப்ஷனுக்கு ரூ. 7,70,200-ம் விலையும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஆனால், ஐ20 இல் இந்த தேர்வு அறிமுகம் செய்யப்படவில்லை. விலை குறைப்பு மற்றும் சிறப்பம்சம் குறைப்பு ஆகிய நடவடிக்கையை மட்டுமே ஐ20 மாடலில் ஹூண்டாய் செய்திருக்கின்றது. ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் அம்சமே கார்களில் இருந்து நீக்கப்பட்டு இருக்கின்றது.

இதற்கு பதிலாக தற்போது மேனுவல் ஏசி மற்றும் ஹீட்டர் யூனிட்டைக் கட்டுப்படுத்தும் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது. மற்ற அம்சங்களில் அது கை வைக்கவில்லை. ஹூண்டாய் நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதன் கிரெட்டா மற்றும் வென்யூ கார்களின் விலையை உயர்த்தியது குறிப்பிடத்தகுந்தது. எந்தவொரு அப்டேட்டுகளையும் செய்யாமல் அது விலையை உயர்த்தி இருந்தது.

இந்த நிலையிலேயே வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி வழங்கும் விதமாக ஐ20 மற்றும் ஐ10 நியாஸின் விலை குறைக்கப்பட்டு இருக்கின்றன. இரு கார் மாடல்களிலும் ஹூண்டாய் நிறுவனம் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினையே பயன்படுத்தி இருக்கின்றது. இந்த மோட்டார் 82 பிஎச்பி மற்றும் 114 என்எம் டார்க் திறனை வெளியேற்றும்.

இந்த கார்களில் டீசல் ஆப்ஷனை ஹூண்டாய் வழங்கி வந்தது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், அவற்ற புதிய விதிகள் காரணமாக கடந்த ஆண்டில் விற்பனையில் இருந்து வெளியேற்றியது. அதேவேளையில், சிஎன்ஜி ஆப்ஷனை இந்த கார்களில் வழங்க ஆரம்பித்து இருக்கின்றது, ஹூண்டாய். இதற்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

Article Published On: Thursday, March 9, 2023, 8:41 [IST]
English summary
Hyundai reduced price of i20 sportz
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+