இது கார் இல்ல குட்டி தியேட்டர்! 8 ஸ்பீக்கர் வச்சு சும்மா அதிரும்! விலை எவ்வளவு தெரியுமா?
ஹூண்டாய் நிறுவனம் தனது வெர்னா என்ற செடான் காரை அப்டேட் செய்து வரும் மார்ச் 21ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இந்த கார் பல முக்கியமான அப்டேட்களை பெறுகிறது. இந்நிலையில் அந்நிறுவனம் இந்த காரில் உட்புற கட்டமைப்பு மற்றும் வசதிகள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இதில் நாம் எதிர்பாராத பல முக்கியமான அம்சங்கள் எல்லாம் இடம் பெற்றுள்ளன. அதைப் பற்றிக் காணலாம் வாருங்கள்.
2023 ஹூண்டாய் வெர்னா காரில் 10.25 இன்ச் எச்டி இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரின் மற்றும் 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட் ஆகிய ஸ்கிரீன்கள் இடம் பெற்றுள்ளன. இது போக இந்த காரில் செக்மெண்டிலேயே முதன் முறையாக ஸ்விட்சபிள் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் ஆகியன உள்ளன.

ஒரே கருவி மூலம் இந்த இரண்டையும் கையாள முடியும். எந்த குழப்பமும் இல்லாமல் இதைக் கையாள வசதி செய்யப்பட்டுள்ளது. இது போக வெர்காரில் செக்மெண்டில் முதன் முறையாக வென்டிலேட்டட் மற்றும் ஹீட்டட் முன்பக்க சீட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதையெல்லாம் விட முக்கியமான இந்த ஹூண்டாய் வெர்னா காரில் 8 ஸ்பீக்கர் கொண்ட போஸ் சவுண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஹூண்டாய் காரின் வெளிப்புறத்தில் பானட் பகுதியில் எல்இடி லைட் பார் பொருத்தப்பட்டுள்ளது. புதிய ஃபாக்லேம்ப், அப்டேட் செய்யப்பட்ட முன்பக்க கிரில், ஹாரிசான் எல்இடி போசிஷனிங் லேம்ப்கள் டிஆர்எல்கள், பாராமெட்ரிக் கனெக்டெட் எல்இடி டெயில் லைட் ஆகிய அம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றுள்ளன.
இந்த கார் குறித்து வெளியான டீசரில் இந்த அம்சங்களில் சில வைற் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரின் வீல் பேஸை பொருத்தவரை பழைய காரிலிருந்து 70 மிமீ அதிகமாக அதாவது 2670 மிமீ வீல் பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இது செக்மெண்டிலேயே அதிக வீல் பேஸ் கொண்ட காராக இதை மாற்றியுள்ளது. இது போக இந்த காரில் பழைய காரை விட அதிகமான பூட் ஸ்பேஸ் பகுதியும் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை டீசல் இன்ஜின் ஆப்ஷன் இல்லை மாறாக 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ரிலீஸ் நேரத்தில் இதே இன்ஜினில் டர்போ சார்ஜ்டு வேரியன்ட் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த இன்ஜின் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது.
இந்த புதிய வெர்னா கார் மாருதி சுஸூகி சியாஸ், ஸ்கோடா ஸ்லாவியா, ஃபோக்ஸ்வேகன் விர்டூஸ் மற்றும் ஹோண்டா சிட்டி ஆகிய கார்களுக்கு போட்டியாக களம் இறங்குகிறது. இந்தியாவில் செடான் கார்களின் விற்பனை கணிசமான அளவு குறைந்துள்ளது. இதனால் இந்த கார் நிறுவனங்களிடையே இருக்கும் சின்ன மார்கெட்டில் அதிக பங்கை வகிக்கப்போகும் நிறுவனம் எது? பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications