ரூ1800 கோடி ஆலையை வெறும் ரூ6400க்கு விற்கும் ஹூண்டாய்! காரணம் என்ன தெரியுமா?

ஹூண்டாய் நிறுவனம் ரஷ்யாவில் உள்ள தனது ஆலையை வெறும் ரூபாய் 6400, அமெரிக்க டாலர் மதிப்பில் 77 டாலருக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இந்த ஆலையின் மதிப்பை கணக்கிட்டு பார்த்தால் ரூபாய் 1800 கோடிக்கும் மேல் இருக்கும். இவ்வளவு அதிக தொகை கொண்ட ஆலையை ஏன் மிகக் குறைவான விலையில் விற்பனை செய்கிறது என்ற சந்தேகம் பலருக்கும் எழலாம் இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தென் கொரியா நாட்டைச் சேர்ந்த ஹுண்டாய் நிறுவனம் தற்போது சர்வதேச அளவில் உலகில் பல நாடுகளில் தனது ஆலைகளை அமைத்து கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் இந்தியாவிலும் ஆலைகளை அமைத்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் இரண்டாவது நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் ரஷ்யாவிலும் ஆலைகளை அமைத்து கார்களை தயாரித்து விற்பனை செய்து வந்தது.

hyundai russia plant

ஆனால் ரஷ்யா உக்ரைன் மீதான போர் தொடுத்த பின்பு ரஷ்யாவில் இருந்து பல வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறின. அந்நிறுவனங்கள் எல்லாம் தங்கள் ஆலைகளை விட்டுவிட்டு ரஷ்யாவில் தனது பிசினஸை மொத்தமாக மூடிவிட்டு அங்கிருந்து வெளியேறின. அப்படியாக ஹூண்டாய் நிறுவனமும் ரஷ்யாவில் இருந்து வெளியேறியது. இருந்தாலும் ரஷ்யாவில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் ஆலை அந்நிறுவனத்திடம் தான் இருந்தது.

ரஷ்ய நாட்டு சட்டவிதிகளின்படி அந்த ஆலையை பராமரிக்க வேண்டிய கடமை ஹூண்டாய் நிறுவனத்திடம் தான் இருக்கிறது. எந்த ஒரு வருமானமும் இல்லாமல் அந்த ஆலையை பராமரிக்க முடியாமல் ஹுண்டாய் நிறுவனம் அந்த ஆலையை விற்பனை செய்ய முடிவு செய்தது. 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த ஆலையில் பணிகள் நிறுத்தப்பட்டு ஆலை மூடப்பட்ட சுமார் 1.5ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆலையை முற்றிலுமாக கை கழுவ ஹூண்டாய் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

hyundai russia plant

இந்தியாவில் உள்ள ஆலையை விற்க வேண்டுமென்றால் ரஷ்ய அரசின் சட்ட விதிமுறைகளுக்கு பின்பற்றி தான் ஆலையை விற்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். இதனால் பல ஆலைகள் வெறும் ஒரு அமெரிக்க டாலருக்கு எல்லாம் விற்பனையாகி இருந்தன. அப்படியாக தற்போது ஹூண்டாய் ஆலையை 77 அமெரிக்க டாலருக்கு விற்பனையாக உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 6,400 என்ற விலையில் இந்த ஆலை விற்பனை செய்யப்பட உள்ளது.

ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதல் நடத்திய பின்பு ரஷ்யாவில் இருந்து பல பன்னாட்டு நிறுவனங்கள் வெளியேற முடிவு செய்தது. இது ஹுண்டாய் நிறுவனத்திற்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்தது ஹூண்டாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான கியா நிறுவனம் ரஷ்யாவில் சிறப்பாக கார் விற்பனை செய்யும் டாப் 3 நிறுவனங்களில் ஒரு நிறுவனமாக இருந்து வந்தது. தற்போது அந்நிறுவனம் தனது உற்பத்தியை நிறுத்தி விற்பனையை முற்றிலுமாக நிறுத்திவிட்டது.

இந்த இடத்தை தற்போது ரஷ்யாவில் உள்ள உள்நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்களும் சீன வாகன தயாரிப்பு நிறுவனங்களும் பிடித்துக் கொண்டன தற்போது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள்தான் ரஷ்யாவின் 49 சதவீத மார்க்கெட்டை பிடித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு வெறும் 7 சதவீதம் மார்க்கெட் மட்டுமே சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு இருந்தது.

ரஷ்யாவில் சிறப்பாக செயல்பட்டு வந்த பன்னாட்டு நிறுவனங்கள் அந்நாட்டிலிருந்து வெளியேற முடிவு செய்த பின்பு, அந்நாட்டின் ஆலைகளை உள்நாட்டில் அதே பிசினஸ் செய்து வரும் நிறுவனங்களுக்கு வழங்க ரஷ்யா முடிவு செய்து தரைமட்டமான விலையில் கிட்டத்தட்ட இலவசமாக விட்டுச் செல்லும் வகையில் ஏற்பாடு செய்து பன்னாட்டு நிறுவனங்களின் ஆலையை உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ரஷ்ய அரசு வாங்கிக் கொடுத்துள்ளது.

இப்படியாக சில ஆலைகளை சீன நிறுவனங்களும் ரஷ்யாவில் மிக குறைவான விலையில் வாங்கியுள்ளனர். அவர்கள் சீனாவிலேயே அவர்களது தயாரிப்புகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இப்படியாக பல பன்னாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து வெளியேறுவது அந்நாட்டிற்கு ஒருவகையில் பாதிப்பு என்றாலும் மற்றொரு வகையில் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு அது பெரிய லாபமாக அமைந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரஷ்யா உக்ரைன் மீதான போர் தொடுப்புக்கு பிறகு பல நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது. இதை பயன்படுத்தி ரஷ்யா உள்நாட்டு உற்பத்தியாளர்களை வளர்த்து விடுவதற்காக அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் பன்னாட்டு நிறுவனங்கள் பயன்படுத்தி வந்தாலே உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு வழங்க மிக குறைவான விலையில் அது விற்பனை செய்ய வைத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 21, 2023, 10:55 [IST]
English summary
Hyundai russia plant sale 77 dollar with 219 million dollar loss
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+