ஹூண்டாயோட இந்த பிராண்டு இந்தியால கால் தடம் பதிக்க போகுதா! இது நடந்தா மத்த நிறுவனங்களின் நிலைமை படு மோசமாயிரும்

ஆடி, பென்ஸ், பிஎம்டபிள்யூ, வால்வோ மற்றும் ஜாகுவார் உள்ளிட்ட பிராண்டுகளுக்கு ஆப்பு வைக்கும் விதமாக இந்தியாவில் ஜெனசிஸ் பிராண்ட் அதன் வருகையை பதிவு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் உள்ள முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் தென் கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் (Hyundai) நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தின் மற்றுமொரு அங்கமாக ஜெனசிஸ் (Genesis) செயல்பட்டு வருகின்றது. இது நிறுவனத்தின் சொகுசு கார் உற்பத்தி பிராண்ட் ஆகும். இந்த பிராண்டே இந்தியாவில் கால் தடம் பதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Genesis

Source: TOI

இந்த தகவல் சொகுசு கார் பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது. ஜெனசிஸ் பிராண்டின் இந்திய வருகையை ஹூண்டாய் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரியும் ஆன உன்சு கிம், சமீபத்திய பத்திரிக்கையாளர்களின் நேர்காணலின்போது உறுதிப்படுத்தினார். அவர், இந்தியாவில் ஜெனசிஸ் பிராண்டின் வருகைக்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார்.

குறிப்பாக, உள்ளூரில் வைத்து ஜெனசிஸ் பிராண்ட் கார்களை அசெம்பிள் செய்வதற்கான சாத்தியங்களையும் அவர் ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார். ஆகையால், வெகு விரைவில் ஜெனசிஸ் கார்கள் இந்தியாவில் கால் தடம் பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இந்த ஆண்டிலேயே அது அரங்கேறிவிடும் என கூறி விட முடியாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆண்டின் இறுதி அல்லது இன்னும் ஒரு சில ஆண்டுகளில் ஜெனசிஸின் வருகை கட்டாயம் அரங்கேறிவிடும். இந்தியாவில் லக்சூரி கார்களுக்கான தேவை அதிகரித்து காணப்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, இந்தியாவில் சொகுசு கார் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கைக் கடந்த காலங்களைக் காட்டிலும் இப்போது மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துக் காணப்படுகின்றது.

ஆகையால், சந்தையில் புதிய புதிய நிறுவனங்கள் தங்களின் வருகையை பதிவு செய்த வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிட்ரோன் அதன் அதிகாரப்பூர்வ வருகையை பதிவு செய்தது. தற்போது நிறுவனம் இரண்டு ஐசிஇ கார் மாடல்களையும், ஓர் எலெக்ட்ரிக் காரையும் சந்தைப்படுத்தி வருகின்றது.

இந்த நிலையிலேயே புதிய பிராண்டாக ஜெனசிஸ் அதன் வருகையை நாட்டில் தரவிருக்கின்றது. இதன் வருகை ஆடி, பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ், ஜாகுவார் மற்றும் வால்வோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் கடுமையான போட்டியை ஏற்படுத்தும் இருக்கின்றது. ஜெனசிஸ் கார்கள் உள்ளூரிலியே உற்பத்தி செய்யப்படும் எனில் அதன் விலை ரூ. 55 லட்சத்திற்கும் குறைவாக இருக்கக் கூடும்.

இந்த விலை கட்டாயம் முன்னணி சொகுசு கார் பிராண்டுகளுக்கு தலை வலியை ஏற்படுத்தக் கூடும் என கருதப்படுகின்றது. ஏற்கனவே இந்த நிறுவனம் உலக நாடுகள் சிலவற்றில் பெரும் நிறுவனங்களின் சொகுசு கார்களுக்கு போட்டியாக விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. வட அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும் ஜெனசிஸ் சொகுசு கார்கள் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே இந்தியாவிலும் ஜெனசிஸ் வருகையை பதிவு செய்ய இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

ஜெனசிஸ் பிராண்ட் கார்கள் அதிக சொகுசு வசதிக்கு மட்டுமல்ல அதிக கவர்ச்சியான கார்களை தயாரிப்பதிலும் பெயர்போன நிறுவனமாக இருக்கின்றது. இதன் பெரும்பாலான தயாரிப்புகள் மிக மிக அழகானதாகவும், அதிக திறனை வெளியேற்றக் கூடியதாகவும் இருக்கின்றன. இத்தகை பிராண்டே இந்தியாவில் நுழைய இருக்கின்றது. இந்த தகவல் போட்டி நிறுவனங்களுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Article Published On: Wednesday, March 29, 2023, 14:19 [IST]
English summary
Hyundai s genesis entering to india soon
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+