28 கிமீ மைலேஜ் தரும் காருடன் ஆட்டத்தை ஆரம்பித்த ஹூண்டாய்! டாடாவிற்கு இப்பவே குளிர் காய்ச்சல் வந்திருக்கும்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று ஹூண்டாய் (Hyundai). நடப்பு 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹூண்டாய் நிறுவனம் விற்பனையில் மிகப்பெரிய சாதனையை செய்து, போட்டி நிறுவனங்கள் அனைத்தையும் பிரம்மிக்க வைத்துள்ளது. இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெறும் 49,700 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பு 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 54,241 ஆக உயர்ந்துள்ளது. இது 9.13 சதவீத வளர்ச்சியாகும். உள்நாட்டு விற்பனையை போல், ஹூண்டாய் நிறுவனத்தின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் இருந்து 13,501 கார்களை மட்டுமே ஏற்றுமதி செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை, நடப்பு 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17,400 ஆக உயர்ந்துள்ளது. இது 28.87 சதவீத வளர்ச்சி ஆகும்.
உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி என இரண்டும் வளர்ச்சியடைந்துள்ளதால், ஹூண்டாய் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையும் அதிகரித்துள்ளது. ஹூண்டாய் இந்தியா நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெறும் 63,201 கார்களை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பு 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 71,641 ஆக உயர்ந்துள்ளது.

இது 13.35 சதவீத வளர்ச்சி ஆகும். இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இதுதான் ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கை ஆகும். ஹூண்டாய் இந்தியா நிறுவனம் இதற்கு முன்பாக ஒரே மாதத்தில் இவ்வளவு அதிகமான கார்களை விற்பனை செய்தது கிடையாது.
ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த சாதனைக்கு எக்ஸ்டர் (Hyundai Exter) கார்தான் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இது மைக்ரோ எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கடந்த ஜூலை மாதம்தான் ஹூண்டாய் எக்ஸ்டர் கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதற்குள்ளாக ஹூண்டாய் நிறுவனம் மிகப்பெரிய சாதனையை படைக்க எக்ஸ்டர் உதவி செய்துள்ளது.
இந்திய சந்தையில் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ஆரம்ப விலை (Price) வெறும் 6 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 10.10 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த விலைக்கு ஹூண்டாய் எக்ஸ்டர் கார் மிகச்சிறந்த தயாரிப்பாக கருதப்படுகிறது.
இதன் காரணமாகவே ஹூண்டாய் எக்ஸ்டர் காருக்கு வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை வாரி வழங்க தொடங்கியுள்ளனர். அத்துடன் ஹூண்டாய் எக்ஸ்டர் கார் சிறப்பான மைலேஜை (Mileage) வழங்குவதும், அதன் வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.
இந்த இன்ஜின் ஒரு கிலோவிற்கு 27.10 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என ஹூண்டாய் நிறுவனம் தெரிவிக்கிறது. இதுவும் கூட ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. வரும் காலங்களில் ஹூண்டாய் நிறுவனம் இன்னும் புதிய உச்சங்களை தொட எக்ஸ்டர் கார் உதவி செய்யலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் வருகை டாடா பன்ச் (Tata Punch) காருக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரலாம் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.


Click it and Unblock the Notifications








