சென்னையை சுற்றிய அடையாளமே தெரியாத கப்பல் போன்ற கார்! நீல நிற நம்பர் பிளேட் ஏன் மாட்டிருக்காங்க தெரியுமா?
சொகுசு எம்பிவி கார்களின் விற்பனை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதன் விலை பெரிய செடான் காரை விட அதிகமாக இருக்கும். ஆனாலும் இந்த காரில் உள்ள அதிக இட வசதி மற்றும் சொகுசு வசதிகள் காரணமாக இந்த ரக கார்களை மக்கள் அதிகம் விரும்பி வாங்கி வருகின்றனர். வாகன தயாரிப்பு நிறுவனங்களும் இந்த ரக கார்களை தயாரிக்க தங்கள் விருப்பங்களை காட்டி வருகின்றனர்.
இப்படியாக ஹூண்டாய் நிறுவனம் சர்வதேச அரங்கில் தயாரித்த சொகுசு எம்பிவி கார் என்றால் ஸ்டாரியா கார் தான். சமீபத்தில் இந்த காரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமூக வலைதளத்தில் பிரவீன் குமார் பரணிதரன் என்பவர் இந்த காரின் புகைப்படத்தை எடுத்து பதிவிட்டுள்ளார். இந்தியாவிலேயே பார்க்க முடியாத காரை இவர் சென்னையில் பார்த்து பதிவிட்டுள்ளார். அதுவும் முக்கியமாக இந்த காரில் நீல நிற நம்பர் பிளேட் பொருத்தப்பட்டுள்ளது.

கியா நிறுவனத்தின் எம்பிவி காரான கார்னிவெல் என்ற சொகுசு காருக்கு போட்டியாக உள்ள காராகும். இந்த ஸ்டாரியா என்பது பல்வேறு விதமான பாடி வடிவமைப்பை கொண்ட காராக உள்ளது. சாதாரண ஸ்டாரியா கார், ஸ்டாரியா கார்கோ, ஸ்டார்யா லாஞ்ச் ஸ்டாரியா லிமோஷைன் ஆகிய பல விதமான கார்கள் உள்ளன. இதில் லிமோஷைன் கார் நீளமான உட் கட்டமைப்பை மறுவடிவமைப்பு செய்யப்பட்ட காராக விற்பனையாகிறது.
இந்த காரை சென்னையில் தான் பிரவீன் குமார் பார்த்து புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். இந்த காரைப் பொறுத்தவரை ஸ்டாரியா லாஞ்ச் வேரியன்ட் காராகும். இது 5253 மிமீ நீளமும் 1995 மிமீ அகலமும் 1990 மிமீ முதல் 2200 மிமீ வரையிலான உயரமும் உள்ளது.

உயரம் வேரியன்டை பொருத்து மாறுபடும் 3273 மிமி வரையிலான வீல் பேஸூம் கொண்ட காராக இருக்கிறது. இந்த கார் சற்று பிரீமியம் ரக அம்சங்கள் நிறைந்த காராக உள்ளது. இதன் டிசைன் மொழியை பொறுத்தவரை புதிய வெர்னா கார் டிசைன் மொழியில் உருவாக்கப்பட்டுள்ளது.
நாம் முன்பே சொன்னது போல் இந்த காரில் நீல நிற நம்பர் பிளேட் பொருத்தப்பட்டுள்ளது. நாம் இந்தியாவில் வெள்ளை, மஞ்சள், பச்சை, கருப்பு, நிற நம்பர் பிளேட்களை எல்லாம் பார்த்திருப்போம். ஆனால் இந்த நீல நிற நம்பர் பிளேடிற்க்கு என்ன அர்த்தம் பலருக்கும் தெரியாது. இந்தியாவில் நீல நிற நம்பர் பிளேட்டிற்கு அனுமதி இருக்கிறது ஆனால் இதை பயன்படுத்த ஒரு சிலருக்கு மட்டுமே உரிமை இருக்கிறது.

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட சிலர் இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு பயணிக்க அவர்களது சொந்த காரை வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்து பயன்படுத்தலாம். இப்படியாக இறக்குமதி செய்யப்படும் காருக்கு தற்காலிகமாக நீல நிறத்தில் நம்பர் பிளேட் வழங்கப்படும். அதை பொருத்திய பின்பே அவர்கள் பயணிக்க வேண்டும்.
இப்படியாக தான் இந்தியாவில் வெளிநாட்டிலிருந்து வந்த ஏதோ ஒரு அரசு அதிகாரி தான் பயன்படுத்துகிறார். இது ஹூண்டாய் ஸ்டாரியா கார் என்பதால் தென்கொரியாவில் இருந்து வந்த அரசு அதிகாரிகளாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இவர்கள் சென்னையில் ஒரு சில பணிகளுக்காக இந்த காரில் பயணம் செய்திருக்கலாம். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதாக தெரிகிறது.
இந்த ஹூண்டாய் ஸ்டாரியா காரின் பிரீமியம் அம்சங்களாக சில விஷயங்கள் உள்ளன. காரை சுற்றிலும் உள்ள கண்ணாடிகள் பெரிய பெரிய கண்ணாடிகளாக பொருத்தப்பட்டுள்ளன. மேலும் காரின் முன்பக்கம் ஸ்லீக்கான எல்இடி டிஆர்எல் பொருத்தப்பட்டுள்ளது. இது டர்ன் இண்டிகேட்டரை விட இரு மடங்கு பெரிதாக இருக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக பிக்ஸல் எஃபெக்ட் எல்இடி டெயில் லைட், ரூப் ஸ்பாய்லர் ஆகியன உள்ளன.
இந்த காரின் உட்புறத்தை பொருத்தவரை இரண்டு ப்ரீ ஸ்டாண்ட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. ஒன்று மத்தியில் உள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்காகவும், மற்றொன்று டிரைவருக்கான இன்ஸ்ட்ருமென்ட் கன்சோலாகவும் செயல்படுகிறது. இந்த காரில் 2+2+3 என்ற சீட்டிங் லேஅவுட்கள் உள்ளன. இது வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு வசதியாக இருக்கும்.
ஹூண்டாய் ஸ்டாரியா கார் தற்போது தாய்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தோனேசியா, மலேசியா, தென் ஆப்பிரிக்கா, சிங்கப்பூர், ரஷ்யா, மலேசியா, மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் இன்ஜின் ஆப்ஷனை பொருத்தவரை மூன்று விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. வி6 பெட்ரோல் இன்ஜின் 240பிஎஸ் பவரையும் 310என்எம் டார்க் திறனையும் வழங்கும் ஒரு வெர்ஷனாகவும், 270பிஎஸ் பவரையும் 330என்எம் டார்க் திறனையும் வழங்கும் இன்ஜினாகவும் விற்பனையாகிறது.
மூன்றாவது இன்ஜின் ஆப்ஷனாக 2.2 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதே இன்ஜின் தான் கார்னிவெல் காரிலும் இருக்கிறது. இந்த இன்ஜின் 177 பிஎஸ் பவரையும் 431 என்எம் டார்க் திறனையும் கொண்டதாகவும் இருக்கிறது. இது 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது. இந்தியாவில் இந்த காரை வாங்குவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனம் இந்த ஸ்டாரியா காரை இந்தியாவில் இதுவரை விற்பனை செய்ய எந்த விதமான திட்டத்தையும் செய்யவில்லை. ஆனால் எதிர்காலத்தில் இந்த கார் இந்தியாவிற்கு வர ஏராளமான வாய்ப்புகள் இருக்கிறது. இந்தியாவிற்கு இந்த கார் வந்தால் நிச்சயம் இது நல்ல வரவேற்பை பெறுவதற்கு சாத்தியங்களும் உள்ளன. இதற்கு பெரிய உதாரணம் கியா நிறுவனத்தின் கார்னிவெல் காருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு தான்.
Source: Rushlane


Click it and Unblock the Notifications









