மாட்டு வண்டியில் மோதியதற்கே குரங்கு போல குட்டிக்கரணம் அடித்த ஹூண்டாய் வென்யூ! வைரலாகும் வீடியோ!
மாட்டு வண்டியில் மோதியதற்கே ஹூண்டாய் வென்யூ கார் குரங்கு போல பல்டியடித்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சாலையில் செல்லும் போது விபத்துக்கள் நடப்பது துரதிஷ்டவசமானது. ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தின் மீது மோதுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் முக்கியமான காரணம் என்றால் அது கவனக்குறைவு தான். இப்படிதான் சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்றில் டிரைவரின் கவனக்குறைவால் ஹூண்டாய் வென்யூ கார் குரங்கு போல பல்டியடித்துள்ளது. நல்லவேளையாக அந்த காரின் சிறப்பான கட்டுமானத்தால் காருக்குள் இருந்த யாருக்கும் அடிபடாமல் உயிர் தப்பியுள்ளனர்.

இந்த கார் விபத்து நடந்த போது பின்னால் வந்த மற்றொரு காரின் டேஷ்போர்டு கேமராவில் இந்த சம்பவம் முழுவதும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ அபிஜித் அணில் என்ற யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. முதலில் இந்த விபத்து குறித்த முழு விபரங்களை காண்போம்.
இந்த டேஷ்கேம் வீடியோவில் உள்ள தகவலின்பட இந்த விபத்து கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி மதியம் சுமார் 3 மணிக்கு நடந்துள்ளது. இது ராஜபாளையம் - தென்காசி ரோட்டில் நடந்ததாக இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. விபத்து நடந்த வீடியோவில் உள்ள இடத்தை பார்க்கும் போது இந்த விபத்து புளியங்குடி பகுதியில் நடந்துள்ளதாக தெரிகிறது.

இந்த வீடியோவின் படி பெரிய அளவில் டிராஃபிக் இல்லாத ரோட்டில் ஹூண்டாய் வென்யூ கார் ஒன்று டேஷ் போர்டு பொருத்தப்பட்ட காருக்கு முன்பக்கம் சுமார் 40-50 கிமீ வேகத்தில் சென் கொண்டிருக்கிறது. அப்பொழுது ஹூண்டாய் வென்யூ காருக்கு முன்பக்கம் மாட்டு வண்டி சென்று கொண்டிருந்தது. ஒரு பாலத்தை கடக்கும் போது மாட்டு வண்டியில் உள்ளவர் தனது இடது பக்கமாக ஒதுங்கி வலது பக்கம் கார் செல்ல வழி விட முயற்சித்துள்ளார்.
அப்பொழுதும் ஹூண்டாய் வென்யூ காரின் டிரைவர் அதை கவனிக்காமல் நேராக சென்றார். அவர் லேசாக வலது பக்கம் காரை திருப்பியிருக்க வேண்டும். ஆனால் நேராக சென்றதால் ஹூண்டாய் வென்யூ காரின் இடது பக்க வீல் பகுதி முன்பக்கம் சென்ற மாட்டு வண்டியின் வலது பக்கத்தில் மோதியது. இந்த விபத்து நடக்கும் போது வென்யூ கார் வேகமாக சென்று கொண்டிருந்ததால் மோதிய வேகத்தில் கார் தூக்கி வீசப்பட்டது.

கார் தூக்கி வீசியதில் பாலத்தின் நடுவே நடு ரோட்டிலேயே கார் குரங்கு போல பல்டியடித்தது. நல்லவேளையாக கார் பல்டியடித்தாலும் மீண்டும் நேராக நின்றது. பின்னர் டேஷ் கேம் இருந்த காரும் நிறுத்தப்பட்டது. விபத்தில் சிக்கிய வென்யூ காருக்குள் இருந்தவர்கள் காரை திறந்து வருவது தெரிந்தது. பின்னர் இந்த விபத்தில் காரில் பயணித்தவர்கள், மாட்டு வண்டியில் பயணித்தவர் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு ஏற்பட்ட அடியுடன் அதிர்ஷ்ட வசமாக அனைவரும் உயிர் தப்பினர்.
இந்த விபத்து மார்ச் மாதம் நடந்திருந்தாலும் இந்த வீடியோ தற்போது தான் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் காரில் உள்ளே இருந்தவர்கள் விபத்தில் காயமடையாமல் தப்பியதற்கு ஹூண்டாய் வென்யூ காரின் கட்டுமானம் மிக முக்கியமான காரணம். மாட்டு வண்டியில் கார் மோதியதும் கார் பல்டியடித்தாலும் அதன் கட்டுமானம் மட்டும் பாதுகாப்பு காருக்குள் இருப்பவர்களுக்கு அதன் இம்பேக்ட் பெரிய அளவில் கொண்டு செல்ல விடாமல் தடுத்துள்ளது.
மேலும் காரும் மீண்டும் நேரான போசிஷனிற்கே வந்துள்ளது. ஹூண்டாய் வென்யூ காரின் தரத்திற்கு இது ஒரு சான்றாக இருக்கிறது. இந்த வீடியோவிலிருந்து இந்த விபத்திற்கான முழு காரணம் ஹூண்டாய் வென்யூ காரை ஓட்டி வந்த டிரைவர் தான் என தெரிகிறது. அவர் கவனமாக இருந்திருந்தால் காரை லேசாக வலது பக்கம் திருப்பியிருக்கலாம். அவரது கவனக்குறைவால் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான விபத்துக்கள் கவனக்குறைவு காரணமாகவே நடக்கிறது. இதனால் சாலையில் செல்லும் போது வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும். உடன் பயணிப்பவர்களுடன் பேசும் சுவாரஸ்யத்தில் சாலையில் உள்ள கவனத்தை இழந்துவிட கூடாது என்பதற்கு இந்த விபத்து ஒரு நல்ல பாடம் தான்.
அதே போல கார்களில் டேஷ் போர்டு கேமராக்கள் பொருத்துவது மூலம் இப்படியான விபத்துக்கள் எப்படி நடந்தது என ஆதாரப்பூர்வமாக சொல்ல முடிகிறது. மேலும் விபத்திற்கான காரணம் அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்ய முடிகிறது. இப்படியான கேமராக்கள் விபத்துகள் மட்டுமல்ல பல நேரங்களில் குற்ற சம்பவங்களையும் வீடியோவாக எடுத்து வெளிக்காட்டியுள்ளது. உங்கள் காரிலும் முடிந்தால் டேஷ் கேம் பொருத்திக்கொள்ளுங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலைகளில் விபத்துக்களை தவிர்க்க டிரைவர் கட்டாயம் கவனமாக கார்களை ஓட்ட வேண்டும். பாட்டு கேட்டாலும் சரி, அருகில் உள்ளவர்களுடன் பேசினாலும் சரி ரோட்டில் உள்ள கவனத்தை இழந்து விட கூடாது. அப்படி இழந்தால் இப்படியான விபத்துக்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது. எப்பொழுதும் காரை கவனமாக ஓட்டிச்செல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









