எல்லாரையும் ஏங்க வைக்கும் சூப்பரான வென்யூ அறிமுகம்! கவர்ச்சிக்கு கொஞ்சம்கூட குறைச்சல் இல்ல!
இந்தியாவில் ஹுண்டாய் (Hyundai) விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் பிரபலமான கார் மாடலாக வென்யூ இருக்கின்றது. இது ஓர் சப்-4 மீட்டர் எஸ்யூவி (Sub-4 Meter SUV) ரக காராகும். இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் இதுவரை 4.50 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் வென்யூ (Hyundai Venue) கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. இந்த எண்ணிக்கையை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்பது இங்கு கவனிக்கத்தகுந்தது. இந்தியர்கள் மத்தியில் ஓர் கார் இந்த அளவிற்கு விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது என்றால் அது ஆச்சரியப்பட வேண்டிய ஒன்றாகும்.

விற்பனைக்கு வந்து 50 மாதங்கள் மட்டுமே ஆகின்ற நிலையிலேயே இந்த அசாத்தியமான விற்பனை எண்ணிக்கையை ஹூண்டாய் வென்யூ எட்டி இருக்கின்றது. இத்தகைய தரமான விற்பனை எண்ணிக்கையைப் பெற்றுக் கொண்டிருக்கின்ற வேளையிலேயே ஹூண்டாய் நிறுவனம் யாரும் எதிர்பார்த்திராத சூப்பரான பதிப்பை வென்யூ காரில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.
'நைட் எடிசன்' (Venue Knight Edition) எனும் சிறப்பு பதிப்பையே நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. வழக்கமான வென்யூவைக் காட்டிலும் அதிக கவர்ச்சியான ஓர் பதிப்பே இதுவாகும். இதற்கு அறிமுகமாக ரூ. 10 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

அதிகபட்சமாக ரூ. 13.48 லட்சம் வரையிலான விலையில் இது விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். அதேவேளையில், வழக்கமான வென்யூ காரை 7 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் என்கிற ஆரம்ப விலையில் இருந்தே வாங்கிக் கொள்ள முடியும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதை வைத்து பார்க்கையில் மிகப் பெரிய விலை வித்தியாசத்தில் வென்யூ நைட் எடிசன் விற்பனைக்கு விற்பனைக்கு வந்திருப்பதை நம்மால் அறிந்துக் கொள்ள முடிகின்றது. இதன் விலை அதிகமாக இருப்பதற்கு கூடுதல் சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பம்சங்கள் நைட் எடிசனில் சேர்க்கப்பட்டு இருப்பதே காரணமாக இருக்கின்றது. கார் முழுவதும் கருப்பு நிறம் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

முன் பக்க கிரில், ரூஃப் ரெயில், சுறா துடுப்பு போன்ற அமைப்புடைய ஆன்டென்னா, வெளிப்புற பின் பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிகள், ஸ்கிட் பிளேட் மற்றும் ஹூண்டாய் லோகோ என அனைத்திலும் கருப்பு நிறம் சேர்க்கப்பட்டு இருப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது.
இதேபோல், அலாய் வீல்களில் வழங்கப்படும் வீல் கவர்களுக்கும் கருப்பு நிறமே பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், வேரியண்டிற்கு ஏற்ப இது மாறுபடும். இதுதவிர இரண்டாவது நிறமாக குறிப்பிட்ட சில பகுதிகளில் பித்தளை நிறம் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. முன் பக்க பம்பர், பின் பக்க பம்பர், முன் வீல்கள் மற்றும் ரூஃப் ரெயில்கள் ஆகியவற்றில் இந்த நிறத்தைக் காண முடியும்.
இதேபோல், பின் பக்க ஹூண்டாய் லோகோ மற்றும் வென்யூ எம்பளம் ஆகியவற்றிற்கு அடர் குரோம் கருப்பு நிறம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதைத் தொடர்ந்து, கூடுதல் ஸ்போர்ட்டி நிறத்தை காருக்கு வழங்க வேண்டும் என்பதற்காக பிரேக் காலிபர்களுக்கு சிவப்பு நிறம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
இதேபோல் வென்யூ நைட் எடிசனின் இன்டீரியரிலும் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. முழுமையாக கருப்பு நிறம் மற்றும் பித்தளை நிறத்தால் உட்பக்கம் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. கூடுதல் சிறப்பம்சமாக டூயல் டேஷ் கேமிரா, ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம் மற்றும் 3டி டிசைனர் ஃப்ளூர் மேட் ஆகியவை நைட் எடிசன் வென்யூவில் சேர்க்கப்பட்டு இருக்கின்றது.
ஹூண்டாய் நிறுவனம் இந்த புதிய வென்யூ நைட் எடிசனை நான்கு மோனோ டோன் மற்றும் ஒற்றை டூயல் டோன் ஆப்ஷனிலும் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இதைத்தவிர வேறு எந்த மாற்றத்தையும் வென்யூ நைட் எடிசனில் ஹூண்டாய் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கும் வழக்கமான வென்யூவிற்கு கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹூண்டாய் வென்யூ காருக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் பிரிவில் களத்தில் டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, மஹிந்திரா எக்ஸ்யூவி 300 மற்றும் கியா சொனெட் உள்ளிட்டவற்றிற்கு அது சிறந்த போட்டியாளனாக இருந்துக் கொண்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications









