தேன் மிட்டாய் கணக்கா விற்பனையாகும் ஹூண்டாய் கார்.. இந்த சூப்பரான விற்பனைக்கு பின்னால் இவ்ளோ காரணங்கள் இருக்கா!

ஹூண்டாய் மோட்டார் (Hyundai) நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் சூப்பரான கார் மாடல்களில் வென்யூ (Venue)-வும் ஒன்றாகும். இது ஓர் காம்பேக்ட் எஸ்யூவி (Compact SUV) ரக காராகும். இதுவே நிறுவனத்தின் முதல் காம்பேக்ட் எஸ்யூவி கார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் இந்த கார் விற்பனைக்கு வந்து 50 மாதங்களே ஆகின்றன. இதற்குள்ளாக 4.50 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்டு வென்யூ கார்கள் விற்பனையாகி இருக்கின்றன.

Hyundai venue sales

இதுகுறித்த தகவல்களே தற்போது வெளியாகி உள்ளன. இது உண்மையிலேயே மிகப் பெரிய விற்பனை எண்ணிக்கை ஆகும். இந்த எண்ணிக்கையைப் பெறுவது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது. 2019 ஆம் ஆண்டிலேயே ஹூண்டாய் வென்யூ இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

7 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் என்கிற ஆரம்ப விலையில் இருந்து வென்யூ விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஒட்டுமொத்தமாக 13 வேரியண்டுகள் மற்றும் 3 விதமான எஞ்ஜின் ஆப்ஷன்களும் இந்த காரில் வழங்கப்படுகின்றன. இதுபோன்ற பரந்த அளவிலான தேர்விலேயே ஹூண்டாய் வென்யூ விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் ஆகிய எஞ்ஜின் தேர்வுகளே இந்த காரில் வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. கியர்பாக்ஸை பொருத்தவரை 5 ஸ்பீடு மேனுவல், 7 ஸ்பீடு டிசிடி மற்றும் 6 ஸ்பீடு ஐஎம்டி ஆகிய தேர்வுகளே வழங்கப்படுகின்றன.

இதுபோன்ற பன்முக ஆஃப்ஷன்கள் வழங்கப்படுகின்ற காரணத்தினாலேயே இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவில் மிகப் பெரிய அளவில் போட்டி நிலவிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, இந்த களத்தில் டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, மஹிந்திரா எக்ஸ்யூவி 300 மற்றும் கியா சொனெட் போன்ற மிக சிறந்த மாடல்கள் போட்டியில் இருக்கின்றன.

இவர்கள் அனைவருக்கும் தண்ணீ காட்டிவிட்டே இந்த கார் இந்த அளவு மாபெரும் விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. அதுவும், 50 மாதங்களுக்குள்ளாக 4.50 லட்சம் யூனிட் விற்பனையைப் பெறுவது எல்லாம் மிகப் பெரிய வரலாற்று சாதனை ஆகும். இதனால்தான் தற்போது ஹூண்டாய் நிறுவனம் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றது.

வென்யூ காரில் பல்வேறு சிறப்பு வசதிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அலெக்ஸா மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் போன்ற நவீன கால அம்சங்களும் வென்யூவில் வழங்கப்பட்டு உள்ளன. இதுதவிர, ப்ளூலிங்க் கார் இணைப்பு தொழில்நுட்பம், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஒயர்லெஸ் சார்ஜர், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ஸ்டியரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல்கள் போன்ற வசதிகளையும் வென்யூவில் காண முடிகின்றது.

கூடுதல் சிறப்பு அம்சங்களா ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், எல்இடி பகல்நேர மின் விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள் போன்ற பன்முக பிரீமியம் வசதிகள் வெனியூ காரில் இடம் பெற்றிருக்கின்றன. இதேபோல் இக்காரில் இட வசதி மற்றும் பூட் ஸ்பேஸும் மிக தாரளமாக வழங்கப்பட்டிருக்கின்றது.

குறிப்பாக, இது அதிக லேக்ரூம் வசதியை வென்யூ கொண்டுள்ளது. இதுமட்டுமில்லைங்க பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருப்பதிலும் வென்யூ வேற லெவலில் இருக்கின்றது. அந்தவகையில், இரட்டை ஏர்பேக், ஏபிஎஸ், சீட் பெல்ட் ரிமைண்டர், ஸ்பீடு வார்னிங் சிஸ்டம் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை வென்யூவில் வழங்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, வென்யூவின் உயர் நிலை வேரியண்டிலேயே பாதுகாப்பு அம்சங்களுக்கும், பிரீமியம் அம்சங்கள் அதிகளவில் இடம் பெற்றிருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வென்யூவிற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் அமோக வரவேற்பு மற்ற காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரியர்கள் மத்தியில் வயிற்றெரிச்சலை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் என யூகிக்க முடிகின்றது. வென்யூவிற்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் அபரீதமான வரவேற்பு அடுத்து வரும் நாட்களிலும் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Saturday, August 12, 2023, 18:45 [IST]
English summary
Hyundai venue reaches 4 50 lakh sales milestone in 50 months
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+