நம்ம ஊர் ரோடுகளுக்கு இந்த மாதிரியான கார்கள் தான் தேவை!! ஹூண்டாய் வென்யூவில் இனி இப்படியொரு வசதியை பெறலாம்!

ஹூண்டாய் மோட்டார்ஸ் (Hyundai Motors) நிறுவனம் 2023ஆம் ஆண்டிற்காக அப்டேட் செய்யப்பட்ட புதிய வென்யூ கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து உள்ளது. புதிய வென்யூ கார்களில் கொண்டுவரப்பட்டு உள்ள அப்டேட்கள் என்னென்ன? அவற்றை எந்த விலையில் வாங்கலாம்? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இனி பார்க்கலாம்.

அடாஸ் (ADAS) என்பது அதிநவீன ஓட்டுனர் உதவி அம்சங்கள் என்பதன் சுருக்கமாகும். அதாவது, ஓட்டுனருக்கு தேவையான மாடர்ன் தொழிற்நுட்ப வசதிகள் அடங்கிய தொகுப்பு அடாஸ் என அழைக்கப்படுகின்றது. இன்றைய கால மாடர்ன் கார்களில் அடாஸ் வழங்கப்படுவது சாதாரணமான விஷயமாக மாறி வருகிறது.

hyundai venue with smartsense adas

இருப்பினும், சற்று விலைமிக்க கார்களில் மட்டுமே அடாஸ் வழங்கப்பட்டு வந்த நிலையில், ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் 'பட்ஜெட் விலை' கொண்ட வென்யூ கார்களான வென்யூ மற்றும் வென்யூ என் லைனில் அடாஸ் தொகுப்பை வழங்கியுள்ளது. அடாஸ் தொகுப்பை ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு விதமாக அழைக்கிறது. அதன்படி, ஹூண்டாய் நிறுவனம் இதனை 'ஸ்மார்ட்சென்ஸ்' என அழைக்கிறது.

இதன் மூலமாக இந்தியாவில் அடாஸை பெற்ற குறைந்த விலையிலான எஸ்யூவி காராக ஹூண்டாய் வென்யூ திகழ்கிறது. ஹூண்டாய் ஸ்மார்ட் சென்ஸ் தொகுப்பில், முன்பக்க மோதல் எச்சரிக்கை, முன்பக்க மோதலை தடுக்க உதவிகள், ஒரே பாதையை கார் தொடர உதவி, பயணத்தை தொடரும் முன் காரில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதுகுறித்த எச்சரிக்கை, ஓட்டுனர் முழுமையாக சாலையில் கவனம் செலுத்தவில்லை எனில் எச்சரிக்கும் வசதி உள்ளிட்டவை அடங்குகின்றன.

hyundai venue with smartsense adas

இவை மட்டுமின்றி, ஹை பீம் அசிஸ்ட்டையும் ஹூண்டாயின் ஸ்மார்ட் சென்ஸ் மூலமாக பெறலாம். ஸ்மார்ட் சென்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதுடன், வென்யூ கார்களில் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் மேலும் சில வேரியண்ட்களுக்கு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, ஹூண்டாய் வென்யூவின் எஸ் (ஆப்ஷ்னல்) மற்றும் எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) வேரியண்ட்களை இனி டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் பெறலாம்.

புதிய டர்போ பெட்ரோல் - மேனுவல் ஆப்ஷன்களில் ஹூண்டாய் வென்யூ காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10,32,600இல் இருந்து ரூ.12,59,200 வரையில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. அதேபோன்று, வென்யூ காரின் எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டை இனி டீசல் என்ஜின் உடன் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் பெறலாம். இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.13,18,700 ஆகவும், ட்யூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷனில் ரூ.13,33,700 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Model Engine Option Variant Price
Venue Kappa 1.0 Turbo GDi Petrol S(O) MT ₹10,32,600
SX(O) MT ₹12,44,200
SX(O) MT Dual Tone ₹12,59,200
SX(O) DCT ₹13,23,100
SX(O) DCT Dual Tone ₹13,38,100
U2 1.5 CRDi Diesel SX(O) MT ₹13,18,700
SX(O) MT Dual Tone ₹13,33,700
hyundai venue with smartsense adas

மறுப்பக்கம், ஹூண்டாய் வென்யூ என் லைன் காரின் என்6 மற்றும் என்8 வேரியண்ட்களிலும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் பெறலாம். இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.11,99,900இல் இருந்து ரூ.13,10,900 வரையில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. இதற்கு முன்பு வரையில், வென்யூ கார்களின் இந்த வேரியண்ட்களில் டர்போ பெட்ரோல் என்ஜினை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே பெற முடிந்தது.

Model Engine Option Variant Price
Venue N Line Kappa 1.0 Turbo GDi Petrol N6 MT ₹11,99,900
N6 MT Dual Tone ₹12,14,900
N8 MT ₹12,95,900
N8 MT Dual Tone ₹13,10,900
N6 DCT ₹12,79,500
N6 DCT Dual Tone ₹12,94,500
N8 DCT ₹13,74,800
N8 DCT Dual Tone ₹13,89,800

ஹூண்டாய் நிறுவனம் உற்பத்தி செய்யும் இந்த கப்பா டர்போ என்ஜின் அதிகப்பட்சமாக 120 பிஎச்பி மற்றும் 170 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. ஹூண்டாய் வென்யூ என்-லைன் கார் இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ஸ்டாண்டர்ட் வென்யூ கார் மொத்தம் 3 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு சிலருக்கு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் காரை ஓட்டுவதை விட மேனுவல் கியர்பாக்ஸ் உடன் காரை ஓட்டவே பிடித்திருக்கும். குறிப்பாக, நீண்ட வருடங்களாக கார் ஓட்டுபவர்கள் மேனுவல் கியர்பாக்ஸையே விரும்புகின்றனர். அத்தகையவர்களுக்கு ஏற்றதாக ஹூண்டாய் மோட்டார்ஸின் இந்த சமீபத்திய அறிமுகம் விளங்குகிறது. அத்துடன், விலை குறைவான கார்களில் அடாஸ் வழங்கப்பட்டு இருப்பது கவனித்தக்கக்கூடிய விஷயம் ஆகும்.

Article Published On: Monday, September 4, 2023, 22:28 [IST]
English summary
Hyundai venue with smartsense adas and new powertrain
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X