இந்தியாவுக்கு வந்த முதல் நாளிலேயே விபத்தில் சிக்கிய புத்தம் புதிய வெர்னா.. அறிமுக நாளில் அரங்கேறிய சோகம்!

அறிமுக நாளின்போதே புத்தம் புதிய ஹூண்டாய் வெர்னா செடான் ரக கார் விபத்துக்கு ஆளாகி இருப்பது இந்தியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த சம்பவம் குறித்த கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஹூண்டாய் நிறுவனம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புத்தம் புதிய வெர்னா செடான் ரக காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. நேற்றைய தினமே இந்த காரின் அறிமுக நிகழ்வு அரங்கேறியது. இந்த மகிழ்ச்சியான நிகழ்வு அரங்கேறிய அந்த நாளிலேயே ஓர் சோகமான சம்பவம் புத்தம் புதிய வெர்னா செடானுக்கு ஏற்பட்டிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெர்னா

அறிமுக நிகழ்ச்சி நடைபெற்ற அன்றைய தினத்திலேயே வெர்னா விபத்தில் சிக்கி இருக்கின்றது. வெர்னாவின் அறிமுகத்தை முன்னிட்டு அனைவரும் மகிழ்ச்சி திகைத்துக் கொண்டிருந்த அந்த தருணத்திலேயே இந்த சோகமான சம்பவம் நாட்டில் அரங்கேறி இருக்கின்றது. இது ஹூண்டாய் இந்தியா நிறுவனத்திற்கும், வாடிக்கையாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்து இருக்கின்றது.

ஹூண்டாய் வெர்னா காரில் பாதுகாப்பு அம்சங்கள் பல வழங்கப்பட்டு இருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. அந்தவகையில், புதிய வெர்னாவில் 30 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அதில் மிக முக்கியமானதாக அடாஸ் அம்சம் இருக்கின்றது. லெவல் 2 அடாஸ் தொழில்நுட்பமே வெர்னாவில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

வெர்னா

இந்த அம்சத்துடன் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் இரண்டாவது செடான் ரக கார் வெர்னா ஆகும். முதன் முதலில் லெவல் அடாஸ் அம்சம் ஹோண்டா சிட்டி செடானிலேயே அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. லெவல் 2 அடாஸ் அம்சத்தின் வாயிலாக பல்வேறு தானியங்கி சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

உதாரணமாக தானாக பார்க் செய்தல், ஆபத்தை உணர்ந்து தானே பிரேக் பிடித்தல், போக்குவரத்திற்கு ஏற்ப ஸ்டியரிங் வீலை கன்ட்ரோல் செய்தல் உள்ளிட்டவற்றை இந்த தொழில்நுட்பம் மனித ஈடுபாடு இன்றி தன்னிச்சையாக செய்யும். இத்தகைய அம்சமே புதிய வெர்னாவில் ஹூண்டாய் வழங்கி இருக்கின்றது.

வெர்னா

இது இருக்கின்ற போதிலும் ஹூண்டாய் வெர்னா தற்போது விபத்தைச் சந்தித்திருக்கின்றது. எனவேதான் இந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் ஹூண்டாய் வெர்னா மீது எந்த தவறும் என இல்லை என்று தெரிவிக்கின்றன. எதிரில் வேகமாக வந்த புல்லட் பைக்கின் மீதே அனைத்து தவறுகளும் இருப்பதாக கூறப்படுகின்றது.

புல்லட்டில் இரு சிறுவர்கள் வந்ததாகவும், அவர்கள் அதிக வேகத்தில் மோட்டார்சைக்கிளை இயக்கியதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே அவர்கள் விபத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர். இதனால் காரின் முகப்பகுதி முழுமையாக சேதம் அடைந்திருக்கின்றது. குறிப்பாக, பம்பர் முழுமையாக கழண்டு வந்திருப்பதை நம்மால் காண முடிகின்றது.

இத்துடன், புல்லட் மோதியதனால் வெர்னாவின் ஒரு பக்கம் மிகக் கடுமையாக சேதம் அடைந்திருக்கின்றது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், மோட்டார்சைக்கிளில் வந்த சிறுவர்களுக்கு துரதரிஷ்டவசமாக பலத்த காயம் ஏற்பட்டிருக்கின்றது. அவர்கள் சம்பவத்தின்போது ஹெல்மெட் அணியவில்லை என கூறப்படுகின்றது.

ஆகையால், ஆபத்தான நிலையில் அவர்களை அப்பகுதி வாசிகள் மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். இதன் காரணமாகவே இருசக்கர வாகனத்தை சிறுவர்கள் ஓட்ட அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தப்படுகின்றது. மேலும், இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக பாதுகாப்பு கவசங்களை அணிய வேண்டும் வலியுறுத்தப்படுகின்றது.

இருப்பினும் பலர் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் வலம் வந்த வண்ணம் இருக்கின்றனர். இந்த நிலையிலேயே புதிய வெர்னா செடான் காரின் விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இந்த நிகழ்வை சுட்டி காட்டி ஆரம்பமே அபசகணுமாக இருப்பதாக ஒரு சிலர் கூறி வருகின்றனர்.

அதேவேளையில், ஒரு நல்லது நடக்கும் முன் இதுமாதிரியான அசம்பாவிதங்கள் சகஜம் என்றும், இந்த கார் விற்பனையில் சக்கைப் போடு போடும் என்றும் ஒருசாரார் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக புக்கிங் பணிகள் தொடங்கப்பட்ட ஒரு சில தினங்களிலேயே புதிய ஹூண்டாய் வெர்னாவிற்கு 8 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்குகள் கிடைத்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 22, 2023, 15:09 [IST]
English summary
Hyundai verna crashed
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+