ஹோண்டா சிட்டி, அமேஸ் கார்களை ஓரங்கட்ட இப்படி ஒரு காரை கொண்டார போகுதா ஹூண்டாய்... டீசரே மிரட்டுதேப்பா!
இந்தியாவின் டிரெண்ட் எஸ்யூவி காருக்கு மாறி இருக்கின்றது. கடந்த காலங்களில் ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு கிடைத்ததைபோல் இப்போது எஸ்யூவி ரக கார்களுக்கு மிக மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதேவேளையில், இப்போதும் ஹேட்ச்பேக் மற்றும் செடான் கார் விரும்பிகள் இந்தியாவில் இருக்கின்றனர்.
இவர்களைக் கவரும் விதமாக மாருதி சுஸுகி, டாடா, ஹோண்டா மற்றும் ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் செடான் ரக கார்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே சந்தையில் அதிகரித்து வரும் போட்டியை உணர்ந்து ஹூண்டாய் நிறுவனம் புதிதாக ஓர் செடான் ரக காரை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் ஓர் டீசரை வெளியீடு செய்திருக்கின்றது.

மூர்க்கத்தனமான அம்சங்களுடன் தயாரா இருக்கு
அந்த டீசரில் புதிய செடான் காரின் நிழற்படம் வெளியிடப்பட்டு உள்ளது. இது புதிய வெர்னா கார் மாடலின் டீசர் படம் ஆகும். ஆமாங்க, ஹூண்டாய் அதன் வெர்னா செடான் ரக காரை புதிய அவதராத்திற்கு அப்கிரேட் செய்திருக்கின்றது. இதையே வெகு விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. அதிக நவீன வசதிகள் மற்றும் மூர்க்கத்தனமான அம்சங்களைக் கொண்டதாக புதிய வெர்னா உருவாக்கப்பட்டு இருக்கின்றது.
டீசர் வாயிலாக நிறைய விஷயம் தெரிய வந்திருக்கு
ஆனால், என்ன மாதிரியான அம்சங்கள் மற்றும் மாற்றங்களைக் கொண்டதாக இதை உருவாக்கி இருக்கின்றது என்கிற முக்கிய விபரங்களை அது வெளியிடவில்லை. இதேபோல், துள்ளியமான அறிமுக விபரமும் வெளியிடப்படவில்லை. அதேவேளையில், சில முக்கிய விபரங்கள் புதிய வெர்னா குறித்து இணையத்தின் வாயிலாக வெளியாகி உள்ளன. குறிப்பாக, நிறுவனம் புதிய வெர்னாவிற்கு புக்கிங் தொடங்கப்பட்டிருப்பதை உறுதி செய்திருக்கின்றது. டீசர் படம் வாயிலாகவே இந்த தகவலை நிறுவனம் உறுதி செய்துள்ளது.

25 ஆயிரம் ரூபா போதும்
ரூ. 25 ஆயிரம் முன் தொகையில் புதிய வெர்னாவிற்கு புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. ஹூண்டாய் நிறுவனத்தின் பிரபலமான செடான் கார் மாடலாக வெர்னா இருக்கின்றது. இதன் பக்கம் வாகன பிரியர்களை ஈர்க்கும் பொருட்டே ஹூண்டாய் அப்டேட் செய்திருக்கின்றது. காரின் முன், பின் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பது தற்போது வெளியாகி இருக்கும் டீசர் படம் வாயிலாக தெளிவாகத் தெரிகின்றது.
மேலும், தற்போது விற்பனையில் இருக்கும் வெர்னாவை போலவே இது நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது வெளியாகி இருக்கும் டீசர் வாயிலாக புதிய ரியர் பகுதியை புதிய வெர்னா கொண்டிருக்கும் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், புதிய டீசரின் வாயிலாக பெரிய டைமன்ஷன்களுடன் இந்த கார் வர இருப்பதும் உறுதியாகி இருக்கின்றது.

பார்த்த உடனேயே பிடிச்சிரும் போலிருக்கே
பின் பக்கத்தின் இரு முனைகளையும் இணைக்கின்ற வகையில் ரியர் லைட், புதிய கிரில், பின் பக்கத்தைப் போலவே முன் பக்கத்திலும் இரு முனைகளையும் இணைக்கின்ற வகையில் பகல் நேரத்தில் ஒளிரும் லைட் என எக்கசக்க அம்சங்கள் இடம் பெற இருக்கின்றது. இந்த காரை ஏழு ஒற்றை நிறம் மற்றும் இரட்டை டூயல் டோன் என இரு விதமான ஆப்ஷன்களில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.
புதிதாக மூன்று நிற தேர்வுகள் இந்த காரில் வழங்கப்பட இருப்பது உறுதியாகி உள்ளது. இதுதவிர சில அப்டேட் செய்யப்பட்ட தொழில்நுட்ப அம்சங்களையும் இந்த புதிய வெர்னாவில் காணலாம். அந்தவகையில் கார் இணைப்பு தொழில்நுட்பம் அடங்கி பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் க்ளஸ்டர் ஆகியவையும் வெர்னாவில் எதிர்பார்க்கப்படுகின்றது.
பாதுகாப்புக்காக இவ்ளோ அம்சங்களா!
கூடவே, டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள் மற்றும் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் போன்ற அம்சங்களும் புதிய வெர்னாவில் இடம் பெற இருக்கின்றன. பாதுகாப்பு அம்சங்களாக அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்ட் சிஸ்டம், ஆறு ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், முன் மற்றும் பின் பக்கத்தில் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் நான்கு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் என எக்கசக்க பாதுகாப்பு அம்சங்களும் புதிய வெர்னாவில் இடம் பெற இருக்கின்றது.
வெளிப்புற தோற்றம், சிறப்பு வசதிகளில் மட்டுமே ஹூண்டாய் வெர்னா அப்டேட் செய்யவில்லை. அதன் மோட்டாரிலும் சில மாற்றங்களை செய்யப்பட்டு உள்ளது. புதிய பிஎஸ் 6 இரண்டாம் கட்டம் மாசு உமிழ்வு விதிக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு இருக்கும், 1.5 லிட்டர் டிஜிடிஐ டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் எம்பிஐ பெட்ரோல் ஆகிய மோட்டார்களே வெர்னாவில் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
ஹோண்டா சிட்டிக்கு ஆப்பு உறுதி..
6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டிசிடி டிரான்ஸ்மிஷன் மற்றும் ஐவிடி டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் புதிய வெர்னாவில் வழங்கப்பட இருக்கின்றன. இத்தனை சூப்பரான மாற்றங்களுடனேயே புதிய வெர்னா விரைவில் இந்திய செடான் கார்கள் சந்தையில் விற்பனைக்குக் வர இருக்கின்றது. இந்த வாகனம் விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஹோண்டா சிட்டி, அமேஸ், மாருதி சியாஸ், ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லேவியா ஆகிய செடான் கார் மாடல்களுக்கு போட்டியாக அமையும்.


Click it and Unblock the Notifications








